Thursday, August 25, 2016

தேச பாதுகாப்புக்கு எப்போதும் ஆப்பு எது?

 கறுப்பு ஆடுகளை நீக்குவதற்கு, அருண் ஜெட்லிக்கு, நான் உதவி செய்கிறேன்- சுப்பிரமணியன் சாமி-#  அப்போ கட்சில கறுப்பு ஆடுகள் நிறைய இருக்குன்னு சொல்றீங்களா?மோடி கோவிச்சுக்க மாட்டாரு?


==========================


2  மோடி தன் மனதில் பட்டதை, 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். அதில், அவர் விடுக்கும் கோரிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.-வெங்கையா நாயுடு:  # வெளிநாட்டு மக்கள் ஏத்துக்கிட்டா நம் நாட்டுக்கு என்ன பயன்?

==========================================


3  மேயரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும், தேர்தல் முறையை ரத்து செய்து, கவுன்சிலர்களே ஓட்டு போட்டு தேர்வு செய்யும் பழைய நடைமுறை, மீண்டும் அமலுக்கு வரவுள்ளது.# புதியன கழிதலும் பழையன புகுதலும்...


=================


4  தே.மு.தி.க. தொழிற்சங்க பேரவை செயலாளர் சவுந்திரபாண்டியன் நீக்கம் - விஜயகாந்த் # போற போக்கைப்பார்த்தா மகன் சண்முகப்பாண்டியன் தவிர்த்து எல்லாரையும் நீக்கிடுவாரோ?

====================

5 ரிசர்வ் பேங்க் 5000 நோட்டு வெளியீடு # இனி கண்ட்டெய்னர் தேவை இல்லை, டாட்டா ஏஸ் குட்டியானை போதும்.


====================
6 மக்கள் நல கூட்டணி நிரந்தரமான கூட்டியக்கம்- #வைகோ # கூட்டுக்கு பறவைங்க அப்பப்ப வரும் போகும், கண்டுக்க மாட்டோம்


===================
7  உள்ளாட்சி தேர்தலில் பலத்திற்கு ஏற்றவாறு, கூட்டணி அமைப்போம்.-ஜிகே வாசன் # கட்சி பல்வீனமா இருக்குன்னு அம்”பலப்படுத்திட்டு “  எதுக்கு பலப்படுத்திட்டு இருக்கோம்னு அறிக்கை?


===================

8  தி.மு.க.,வுக்கு எதிர்காலம் கிடையாது. இனி ஆட்சி அமைப்பதற்கான காலம், அவர்களுக்கு கனியவே 
கனியாது.- பண்ருட்டி ராமச்சந்திரன் # கனி க்கும் , கலைஞருக்கும் ராசியே இல்லை போல


================

9  கருணாநிதிக்கு வழங்கப்பட்டு வரும், 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொள்ள, மத்திய அரசு முடிவு # மோடி-ஜெ சந்திப்பில் இது பற்றி பேசி இருப்பாங்க போல


======================

10  கொலைகள் நடக்கும் போது சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்றுஜெ் கூறுவது சரியா?: வைகோ # சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டத்னு எந்த மாநில CMசொல்வார்

====================
11 காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இளங்கோவன்! #,கோவிச்சுக்கிட்டியா கோபாலு கோவிச்சுக்கோ கோவிச்சுக்கோ


============



12 மக்கள் நல கூட்டணியில் சில கட்சிகள் வரலாம்; சில கட்சிகள் போகலாம்.- வை.கோ # சங்குவார் சத்திரம்  மாதிரி ஆகிப்போச்சே தலைவா?



====================

13 எதிர்க்கட்சித் தலைவரை, முதல் நாள் பேச விட்டு, மறுநாள் முதல்வர் மட்டும் பதில் கூறுகிற பழக்கம், இதுவரை இல்லாத, சட்டசபை பின்பற்றாத ஒரு புதிய ஏற்பாடு.-கலைஞர் # அடடே! நீங்களும் ஸ்டாலின் போலவே ஜெ வை பாராட்ட ஆரம்பிச்ட்டீங்களே


===============

14  ஸ்டாலின்  கவர்னர் உரை அரசின் உரை எனக் கூறினார். இதை கருணாநிதி முன்னரே கூறியுள்ளார்.-ஜெ # பூமாரங் அப்டின்னா என்ன?ன்னு இப்போ தெரிஞ்சிருப்பாரே?ஸ்டாலின்


====================

15  தொண்டர்கள், கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று, கட்சியை பலப்படுத்த வேண்டும்-வாசன்: # அவங்களைத்தான் தலைவரே தேடிட்டு இருக்கோம், தொண்டர்கள் கிடைச்சா தேவலை


==================


16 உள்ளாட்சி -அனைத்து கட்சிகளும்   தனியாகப்போட்டி இட்டால்  நல்லது.-பொன்.ராதா # மேரேஜுக்கு பொண்ணே கிடைக்காதவன் எல்லாரும் பிரம்மச்சாரியா இருங்க -ன்னானாம்


================


17 மோடி, அமெரிக்காவின் நெருக்குதலுக்கு அடிபணிந்து, பாதுகாப்பு துறையில், 100 % அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தது தவறு.-ஆனந்த் சர்மா #  இம்முறை தேச பாதுகாப்புக்கு எப்போதும் ஆப்பு



===============

18 காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது நல்ல தலைமை இல்லை. அது ஒரு மூழ்கும் கப்பல்-வெங்கையா நாயுடு # லீடர்”ஷிப்” சரி இல்லை -


====================

19 பெரிய வரப்பிரசாதமாக, எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா வந்தார்; தமிழகத்தை காத்தார்-பண்ருட்டி ராமச்சந்திரன் # சென்னை , கடலூர்ல வெள்ளம் வந்தப்போ மட்டும் மறந்துட்டார் போல


=================


20 நாங்கள் முன்னெடுத்த மாற்று, மக்களுக்கு சென்றடையும் வரை எங்கள் முயற்சி தொடரும்.-தொல்.திருமாவளவன் # தினத்த்ந்தி கன்னித்தீவு கதை முடிஞ்சாலும் நமக்கு விடிஞ்சிடாது போலயே

===================

0 comments: