1 அன்பே மிராண்டா!
எல்லாரும் உனக்கு ட்விட்டர் பிரண்டா?
உன் கண்கள் 2,ம் கரண்ட்டா?
அழகு தேவதைகள் உனைக்கண்டு மிரண்டா
சொர்க்கம் ஆகிடும் இரண்டா
============
2 கலைஞரோ ஜெ வோ மக்கள் பிரச்னைன்னா கடிதம்.தனக்கு ஒரு பிரச்னைன்னா டெல்லி நேரடி விஜயம்.
===========
3 ஜூனியர் விகடன் திறப்பினும் குற்றம் குற்றமே!
===============
4 எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.ஆனால் மக்கள் (ஓரளவாவது) நல்வழியில் செல்ல கடவுள் நம்பிக்கை உதவும் என்பது என் நம்பிக்கை
================
5 வெளி உலகிற்கு காரணம் சொல்லாமலேயே பிரிந்த கண்ணியக்காதல்கள்
1 பார்த்திபன் - சீதா
2 சிம்பு -நயன்
3,சிம்பு -ஹன்சிகா
4 ராமராஜன் - நளினி
5 ஜிவி பிரகாஷ்குமார், சைந்தவி
================
6 காதலர்கள் பிரிய நேரிட்டால் ஒருவரை மற்றவர் தூற்றாமல் வெளி உலகிற்கு பிரிவுக்காரணம் சொல்லாமல் இருந்தால் அது கண்ணியக்காதல் வகையில் சேரும்
===============
7 உடல் நலனுக்கு நல்லது விளைவிக்கும் கசாயம் குடின்னா தமிழன் கசக்குதுங்கறான்.ஊறு விளைவிக்கும் சரக்கை மட்டும் கசந்தாலும் அடிக்கறான்
=============
8 கபாலி அடையப்போகும் வெற்றி ரஜினிக்கு இன்னும் ஒரு வெற்றி.அவ்வளவுதான்.ஆனால் இயக்குநர் ரஞ்சித்துக்கு வாழ்நாள் வெற்றி
==============
9 ஒருவரைப்பெருமைப்படுத்த டேக் போட்டால் அது உன் வளர்ச்சி.சிறுமைப்படுத்த டேக் போட்டால் அது வீழ்ச்சி # இரு தரப்புக்கும் பொது
=============
10 நடிகர்/அரசியல் தலைவர் மீது நீங்கள் ரசிப்புத்தன்மை,அபிமானம் ,பற்று இதை தாண்டி வெறித்தனமான அன்பு வைப்பது உங்கள் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல
=============
11 தொடாதே என்றால் கேட்கிறாயா?
இப்போது பார்
உன் மேலெல்லாம் FEMALE ஆகிவிட்டது # ரீமிக்ஸ்ு
=============
12 மீனம்மா வின் காதலர் அஜித் ரசிகரா இருந்தா அவர் செல் போன் ரிங் டோன் = மீனம்மா! அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகம்
=============
13 ஜுன் 22 ரணகளமா இருக்கப்போகுது.விஜய் ,அஜித் ரசிகர்களைத்தவிர மத்தவங்க லீவ் எடுத்துக்குவது நல்லது
============
14 நெட் தமிழன் பெண்களுக்கான போராளி. இன்னைக்கு வந்த ஆம்பளைங்க ட்வீட்சை கண்டுக்கவே மாட்டான்,என்னைக்கோ வந்த பொண்ணுங்க ட்வீட்சை ஓடி ஓடி ஆர் டி பண்றான்
=====================
15 அன்பே மியா ஜார்ஜ்!
உன்னைப்பார்த்ததும் என் மியாவ் சார்ஜ் ஏற்றிக்கொள்கிறது, கொல்கிறது
=====================
16 பெண் குழந்தைகள் எல்லாமே அப்பா செல்லங்களாக இருந்தாலும் திருமணம் ஆனபின் அம்மாவையே வழிகாட்டியாக,ஆலோசனை சொல்பவராக தேர்ந்தெடுக்கும்
=================
17 உங்கள் ஆவி அடங்கும் வரை காலை உணவு ஆவியில் வேக வைக்கப்பட்ட எளிமையான ,விரைவில் ஜீரணிக்கக்கூடிய இட்லி, இடியாப்பம், குழாப்புட்டு என இருக்கட்டும்,மித உணவு மிக நன்று
=====================
18 அழகு ராணி யாக இருக்கும் பல பெண்கள் குணத்தில் ஸ்மிருதி ராணிகளாக இருக்கிறார்கள், டியர் சொன்னா கோவிச்சுக்கறாங்க
====================
19 அன்பே திவ்யா! உன் கண்கள் இரண்டையும் பார்த்தால் மனம் ஜிவ்யா!
==================
20 தன் ட்விட்டர் ஹேண்டிலுக்கு முன் CUTE சேர்த்துக்கறவங்க ஃபோன் பண்ணா CUT பண்றாங்க, உதா க்யூட் புஷ்பா , திவ்யாக்யூட்
====================
0 comments:
Post a Comment