- 1 வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்தோர் மீது மட்டுமே சட்ட நடவடிக்கை: அருண் ஜேட்லி # அதுவும் அவங்க உள்நாட்டில் இருந்தா மட்டும், வெளிநாடு போய்ட்டா விட்டுடுவோம்
=====================
2
- கட்டாய தலைக்கவசம் அணியும்உத்தரவை கடுமையாக செயல்படுத்தாதது ஏன்?தலைமை நீதிபதி கேள்வி # ஹெல்மட் கம்பெனியோட டீலிங்க் போய்க்கிட்டு இருக்கு, வெயிட்
3
திரையரங்குகளில் உணவுப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை:அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு # கனம் கோர்ட்டார் அவர்களே! எல்லாம் பணம்
========================
4
கல்விக் கடனை வசூலிக்க தனியார் நிறுவனம் மூலம் மிரட்டல் விடுப்பதா?:அன்புமணி கண்டனம்# அரசு நிறுவனம் மூலம் மிரட்டுனா கண்டுக்க மாட்டேன்றாங்களாம்
==============
5
ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்:ஜி.கே.வாசன் கண்டனம் # பொற்கால ஆட்சி நடக்குதுன்னாங்க, மீண்டும் கற்காலத்துக்கு போய்ட்டாங்க
===================
6
3 ஆண்டுகளில் வருமான வரியை முற்றிலும் ஒழிப்பேன்: சுப்பிரமணியன் சுவாமி # கிடைக்கற கொஞ்ச நஞ்ச வருமானத்துக்கும் வழி இல்லாம பண்ணிடுவாரோ?
=================
7
நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் 40 ஆண்டுகளாக இடத்தைக் காலிசெய்யாத வாடகைதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் # 40 வருசத்துக்கு வட்டியே 40 லட்சம் வருமே,என்ன கணக்கு இது?
=================
8
திரையரங்கில் அதிக விலைக்கு குளிர்பானம் விற்பதை எதிர்த்து வழக்கு # கூலிங்க் கம்மி பண்ணி ரேட் அதிகம் பண்ணி வித்தா ஓக்கேவா?
==================
9
முதல்வரைப் போல எனக்கும் டங்க் ஸ்லிப்’ ஆகிவிட்டது- பொன்முடி # அதுக்காக டங்க் ஸ்லிப் ஆகறவங்க எல்லாம் முதல்வர் ஆகிட முடியாது
==================
10
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: தேமுதிக அறிவிப்பு # தமிழன் என்று சொல், தனியே தில்லா வந்து நில்
=============
11
தமிழகத்தில் விவசாயிகளின் துன்பத்துக்கு திமுகவும், காங்கிரஸும் தான் முக்கிய காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு #விவசாயிகள் துன்பத்துக்கு மட்டுமா?
====================
12
கல்விக் கடன் வசூலில் எஸ்பிஐ வங்கியின் அணுகுமுறை ஆபத்தானது: அன்புமணி # அந்த பேங்க் ஸ்டாஃப் எல்லாருமே ஆபத்தானவர்கள்தான், எரிஞ்சு எரிஞ்சு விழுவாங்க
===================
13
வாட்ஸ்அப் மூலம் புகைப்படங்களை பகிர்வதில் பெண்கள் அதிக கவனமாக செயல்படுவது அவசியம்: உயர் நீதிமன்றம் கருத்து # புருசன் ஆஃபீஸ் போனபின் அனுப்பவும்
=================
14
மேயருக்கான நேரடி தேர்தல் முறை ரத்து: திமுக எதிர்ப்பை மீறி சட்டப்பேரவையில் திருத்த மசோதா தாக்கல்#ஜனநாயகத்துக்கு கிடைத்த அடி
================
15 சட்டப்பேரவையில் மாஃபா பாண்டிய ராஜன் (ஆவடி) புள்ளி விவரங்களுடன் பேசியதை ஜெ வெகுவாக ரசித்துக்கேட்டார்.# பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
==================
16 திமுக தலைவர் யார் என்பதில் கருணாநிதி- ஸ்டாலின் இடையே குழப்பம்-் ஜெ. # தேர்தலில் மெஜாரிட்டி சீட் ஜெயிச்சா அப்பா,இல்லைன்னா மகன் தலைவர்
==========
17 உள்ளாட்சி தேர்தலில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு - அதிர்ச்சியில் ஆண் கவுன்சிலர்கள் # போகப்போக ஆண்.25%,பெண்.75% னு ஆக்ரமிச்சிடுவாக போல
============
18 பாஜகவுடன் நெருக்கம் காட்டும் எஸ்.ஏ. சந்திரசேகர்.. அரசியலுக்கு வருகிறார் விஜய்? # அவர் அரசியலுக்கு வந்தா படம் வருமா?
============
19 தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் 1: சட்டசபையில் ஜெ., பேச்சு # சாராயத்தொழில், மணல் கொள்ளைத்தொழில்,சிலை கடத்தல் தொழில்?
==============
20 திருமணத்திற்கு முன்பே காதலருடன்(நாகசைதன்யா) சேர்ந்து வசிக்கும் சமந்தா # மேரேஜ் ஆனா ஒரு வருசத்தில் பிரியறாங்க, அதான் இப்டி
===============
0 comments:
Post a Comment