1 சேரிடம் அறிந்து சேர்.
அப்போதுதான் கிடைக்கும் சிஎம் சேர் (CHAIR)
===========
2 அரசியல்ல ஜெயிக்கனும்னு சிலர் காட்டிக்கொடுக்கறாங்க.சிலர் கூட்டிக்கொடுக்கறாங்க.சிலர் ஸ்கூட்டி கொடுக்கறாங்க
===========
3 நக்கீரன் கோபால் இனி கருத்துக்கணிப்பு க்கு பால் ஊத்திடுவாரா?
=============
4 ஆட்சி,அதிகாரம் உங்கள் வசம் இருந்தால் நீங்களும் வெல்லலாம் 570 கோடி + 66 கோடி + 1000 கோடி
===============
5 தேர்தல் முடிவில் ஒரே மகிழ்ச்சி சந்தர்ப்பவாதியான சரத்குமார் படுதோல்வி அடைந்தது
=============
6 உளுந்தூர் பேட்டை.பேரே சரி இல்லை.ஏற்கனவே தடுமாறி விழுந்துடற மாதிரி இருப்பவர் ஏன் இந்த ஊரை தேர்ந்தெடுத்தாரோ?
===============
7 தன்னால் தடுத்திருக்க முடியும் என்ற சூழலிலும் தன் சுயநலத்துக்காக ஒருவர் கொலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.அதை மக்கள் மறக்கவில்லை
============
8 இளைய சமுதாயம் மாற்றத்துக்கான வாக்களிக்கும் என பலரும் காத்திருக்க அது இரட்டை இலை ய சமுதாயம் ஆகி விட்டது
==============
9 உங்களில் அடுத்த பிரபுதேவா யார்? போட்டியில் திருச்சி சிவா வெற்றி # சசிகலா புஷ்பா
===============
10 கூடி எதிர்த்தால் ஜெயிப்பு நன்மை.
தனித்தனியே பிரிந்து எதிர்த்தா 1500 கோடி நன்மை
============
11 திமுக ஆட்சின்னா எல்லா எம் எல் ஏ ,எம் பி யும் மாளாத காசு சம்பாதிப்பாங்க.அதிமுக ஆட்சின்னா அடக்கி வாசிப்பாங்க.ஜெ ,சசிகலா மட்டும் சம்பாதிப்பாங்க
==============
12 சிங்கிள் டிஜிட் ல மார்க் வாங்கி பெயில் ஆனவங்களை நக்கல் அடிக்கும் 34 மார்க் பெயில் பார்ட்டிக்ளே! பெயில் பெயில் தானே?
============
13 உடன் பிறப்பே! அடுத்த தேர்தலில் நமக்கு நாமே திட்டத்திற்குப்பதில் நம்மிடத்தில் நமீதா திட்டம் கொண்டு வரப்படும்.5 வருடம் பொறுத்திரு
===============
14 1 திருமா அடுத்த தேர்தலில் திமுக வுடன்
2 சரத் பழையபடி ச ம க ரிட்டர்ன்
3 வை கோ அதிமுக கூட்டணி #2021
=============
15 தங்கர் பச்சான் ன் அம்மாவின் கை பேசி படம் தோல்வி.
தமிழக அரசியலில் அம்மா WIN கை பேசி திட்ட அறிவிப்பு வெற்றி
===============
16 கலைஞரின் காலத்துக்குப்பின் ஸ்டாலின் கேப்டன் கூட சேர வாய்ப்பில்லை.எனவே 2021 ல் திமுக தேமுதிக கூட்டு சேர்ந்தால் வெற்றி நிச்சயம் (காங் நோ)
=============
17 தலைவியின் ஆட்சியில்
இனி ஆண்களுக்கு குவாட்டர்
பெண்களுக்கு ஸ்கூட்டர்
அவ்ளோதான் மேட்டர்
============
18 சொர்ணாக்கா வளர்மதி தோல்வி மெத்த மகிழ்ச்சி
=============
19 இந்தியா டுடே உட்பட்ட மீடியாக்கள் வேண்டும் என்றே பொய்யான கருத்துக்கணிப்பு வெளியிட்டு தேர்தல் பெட்டிங் கில் சம்பாதித்திருக்கலாம்
===============
20 ஒரு சாதா தனி நபரால் சரியான முடிவை யூகிக்க முடிகிறபோது பலமான ஆள் பலம் கொண்ட இ டுடே தவறான முடிவை வேண்டும் என்றே தந்திருக்கவேண்டும்
==============
0 comments:
Post a Comment