1 வெயில் காதலன்= நான் ஆபிஸ் போனதும் 20 பேர் என்னை சுத்தி நிப்பானுக..
மழையின் காதலன் = ஏன்? எல்லார் கிட்டயும் கடன் வாங்கி இருக்கியா?
=================
2 தலைவரே! குங்குமம் வார இதழ் நம்ம கட்சிதானே?எதுக்கு அதை அழிக்க நினைச்சீங்க?
யோவ்.நெத்தில வெச்சு விட்ட குங்குமத்தை அழிச்சேன்.புரளி கிளம்பிடுச்
=============
3 விஜய் மல்லைய்யாவுக்கு பிடிச்ச தமிழ் பத்திரிக்கைகள் எவை?
ஆனந்த வி"கடன்",ஜூனியர் வி"கடன்",சுட்டிவி"கடன்" ,டைம் பாஸ் வி"கடன்"
=============
4 தலைவரே! இந்துக்களின் சின்னமான குங்குமத்தை நெத்தில ஏன் அழிச்சீங்க?
நான் ஒரு பகுத்தறிவுவாதி.
அப்போ குங்குமம் வெச்சவங்க ஓட்டும் வேண்டாமா?
===============
5 தலைவரே! கழகம் கலகம் என்ன வித்தியாசம்?
நம்ம அமைப்புக்குப்பேரு கழகம்.நம்ம அமைப்பு க்கு ஏதாவது பிரச்னைனா நாம பண்றதுக்குப்பேரு கலகம்
================
6 டாக்டர், அடிக்கடி உப்புமா சாப்பிட்டா ஒல்லியா இருக்கும் என் உடல் உப்புமா?
யோவ், உணவில் அதிகம் உப்பு,எண்ணெய் சேர்த்தா தான் உப்பும்
=======================
7 டாக்டர் , அடிக்கடி முந்திரி சாப்பிட்டா மந்திரி ஆகிடலாமா?
எந்திரி க்கவே முடியல, ஆனா பதவி ஆசையை மட்டும் விட முடியல?
==========================
8 தலைவரே! உங்களை ஆதரிக்காதவங்க எல்லாரும் அரைகுறைனு சொல்றாங்களே?
என்னைப்பற்றி முழுசா தெரிஞ்சவங்க என் பரம்பரையையே ஆதரிக்க மாட்டாங்க
==================
9 தலைவரே! படிச்சவங்க பூரா உங்களுக்கு ஆதரவாமே?
ஆமா , குடிச்சவன் குடியைக்கெடுத்தான், படிச்சவன் பண்பைக்கெடுத்தான்
=================
10
நான் ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்திருக்கேன்
ஓஹோ என்ன பண்றீங்க?
சமையல் தான். நான் ஒரு குக், கிராமத்தில் இருந்து வந்திருக்கேன்னு சொன்னேனே
===============
11 ரஜினி படம் மாதிரி இருப்பார்னு பார்த்தா நம்ம தலைவர் விசு படம் மாதிரி ஆகிட்டார்
எப்டி?
நாட்டுக்கு ஒரு நல்லவன்
வீடு மனைவி மக்கள்
============
12 சர்வர் , தோசை 1 சொல்லுங்க
நைஸ் தோசையா? கல் தோசையா?
நிக்கி கல் ராணி தோசையா கேட்கப்போறேன்? ஏதோ 1 போட்டுக்கொண்டு வாய்யா
==================
13 பொண்ணு ஸ்ரீதிவ்யா மாதிரி இருக்கும் மாப்ளே
அடடா, ரொம்ப சின்னப்பொண்ணோ?
ரெண்டே வருசத்துல 4 பேர் கூட ஜோடி சேர்ந்துடுச்சு
================
14 டியர், உங்க கூட பேசிட்டிருந்தா ஈசியா டைம் பாஸ் ஆகிடுது
இப்டியே பேசிட்டே இருந்தா நீ எக்சாம்ல பாஸ் ஆக மாட்டே
================
15 தலைவரே! நீங்க சொன்னபடி எல்லா இடத்துலயும் வால் போஸ்டர் ஒட்டிட்டோம்
நிஜமாவா?
காஜல் அகர் வால் கூட விட்டு வைக்கலை. முதுகில் ஒட்டிட்டோம் 1
================
16 சார், உங்க கடைல சிம் வாங்கலாம்னு வந்தா பூரா பசங்களா இருக்காங்க?
யோவ், அதுக்காக ”சிம்”ம வாஹினியையா ரிசப்ஷன்ல வைக்க முடியும்?
=============
17 வீட்டுக்கு திருடனுங்க வந்து எல்லா லைட்சையும் ஆஃப் பண்றவரை என்னம்மா பண்ணிட்டு இருந்தே?
வாக்குக்கு பணம் தருவாங்கன்னு பார்த்துட்டு இருந்தேன்
==============
18 சார், நீங்க சுட்ட தோசை வானத்தைப்போல சினிமா தோசை மாதிரியே இருக்கே?
சினிமாக்காரங்க தான்யா எப்பவும் நம்மை பார்த்து சுடுவாங்க
===============
19 வால் போஸ்டர்” கிளுகிளுப்பாக ஒட்ட எங்களை அணுகுவீர்
காஜல் அகர் “வால் போஸ்டர்”
நிஷா அகர் “வால் போஸ்டர்”
சோனியா அகர் “வால் போஸ்டர்”
===============
20 தலைவரே! ஆட்சிக்கு வந்ததும் மதுக்கூர், மதுக்கரை ஊர் பேரெல்லாம் மாத்துவீங்களா? ஏன்?
எங்கள் ஆட்சியில் மதுவை ஒழித்தோம்னு சொல்லிக்கலாமில்ல?
==================
0 comments:
Post a Comment