1 தலைவர் ஒரு விளையாட்டுப்பையன்.
எப்டி சொல்றே?
ப்ளே பாய் புக் ப்ளோ அப் போட்டோ கலெக்சனே வெச்சிருக்காரு
==============
2 தலைவரே! நாளைக்கு ஏதோ உறுதிமொழி ஏற்கப்போறீங்களாமே?
எப்டியும் ஜெயிக்கப்போறதில்லை.எதுனா அடிச்சு விட்டு பரபரப்பு கிளப்புவோம்
===============
3 அப்பா.எல்லா தேர்தல் உறுதிமொழியையும் நாம அங்கே இருந்துதானே சுடறோம்?
ஆமா.
ஆனா சிஎம் வேட்பாளர் மேட்டர்ல மட்டும் அவங்களை பாலோ பண்ணலையே ஏன்?
================
4 தலைவரே! கடவுள் நம்பிக்கை இல்லாத நீங்க எதுக்கு சர்ச் க்கு வாரா.வாரம் போறீங்க?
சர்ச் வாசல்ல "பாவிகளை இயேசு ரட்சிப்பார்"னு போட்டிருந்தது
============
5 நான் எப்போ மாசமா இருந்தாலும் கலை கலை னு காதலர் தொந்தரவு செய்வாரு.
ஓஹோ.பெரிய கலை மாமணியா இருப்பார் போல
==============
6 தலைவரே! நீங்க 2 கட்சிக்காரரும் சம்பாதிச்சீங்க? அவங்க ஓட்டுக்கு பணம் தர்றாங்க, நீங்க தர்லையே? ஏன்?
பொதுவா எனக்கு வாங்கிதான் பழக்கம், கொடுக்க மனசு வராது
==================
7
ஸ்ரீ வில்லிபுத்தூர் தான் பால்கோவா வுக்கு ஃபேமஸ்
பொய், யாரை ஏமாற்றப்பார்க்கறே? கோவா தானே? பேர்லயே கோவா இருக்கில்ல?
===================
8
தலைவரே! மல்கோவா மாம்பழம் கிலோ 100 ரூபாதானே?100 கிலோ க்கு 200000 ரூபானு கணக்கு எழுதி வெச்சிருக்கீங்க?
கோவா போய் வர ட்ரான்ஸ்போர்ட் செலவு
===================
9
இண்ட்டர்வ்யூவில்
ரயில்வே டிபார்ட்மெண்ட் ஜாப் ல முன் அனுபவம் இருக்கா?
எஸ் சார், கடந்த 6 வருட காலமாக பொண்ணுங்களுக்கு தனி ரயில் விட்டு ட்விட்டர்ல வணக்கம் வைச்சிருக்கேன்
====================
10
சார், நீங்க என்ன சொன்னீங்க?
24 டிவிடி விலை 50 ரூபான்னேன்
1 இங்கே இருக்கு, மீது 23 எங்கே?
யோவ், படத்தோட டைட்டிலே 24 தான்யா
===================================
11 மிஸ்! ஒரு கிஸ் தர முடியுமா?
பளார் -னு சத்தம் வர்ற மாதிரி தரவா?
இச் தான் ஆக்சுவல் சவுண்ட்.பிஜிஎம்ல மாத்திடுவீங்களா?
========================
12 தலைவரே! நமது இலக்கு மது விலக்கு-னு சொல்றீங்களே அவ்ளோ நல்லவரா?
டாஸ்மாக்கால அரசுக்குதான் வருமானம், கள்ளச்சாராயம்னா நமக்கு வருமானம்
================
13 தலைவரே! பணம் கொடுத்து நமக்கு சாதகமான கருத்துக்கணிப்பு வர வைக்கறீங்களே? நாளை எப்டி சமாளிப்பீங்க?
கடைசி டைம்ல மக்கள் மனசு மாறிட்டாங்கனு சொல்லிடலாம்
==================
14 தலைவரே!நீங்க ஏன் சிஸ்டம் ல டைப்பாம மொபைல்ல டைப்பறீங்க?
மொபைல்னா கீ போர்டு , சிஸ்டம்னா “மதர்”போர்டு. மதர்னா அம்மா. அதான்
===================
15 என் ஆத்மா சாந்தியடையனும்னு வேண்டிக்கோ
இதுக்கு ஏன் கோயிலுக்கெல்லாம் போகனும்? இந்தா சாந்தி அப்புறம் நித்யா பட டிவிடி. நித்யா போனஸ்
=======================
16 டாக்டர்.சமந்தா எந்த கோணத்துலயும் எனக்கு அழகா தெரிய மாட்டேங்குது.
எங்கே இருக்கீங்க?
கும்பகோணம்
அரக்கோணம் ல வந்து பாருங்க எதுக்கும்,
======================
17 மிஸ்! உங்க கிட்டே 1 சொல்லனும்,ஆனா இப்போ சொல்ல மாட்டேன்,2 மாசம் கழிச்சுதான் சொல்வேன்
தெரியும்யா என்ன சொல்வேன்னு.திருக்குறளா சொல்லப்போறே? ஐ லவ் யூ சொல்வே
==================
18 சார், என்னால தபால் ஓட்டு போட முடியலை
சரி, ஷோல்டரை இறக்குங்க . கூரியர் ஓட்டு போடுங்க
====================
19
சார், சமீபத்துல எங்க தலைவர் தப்பு செஞ்சாரா?
யோவ், சமீபத்துல 5 வருசமா ஆட்சில இல்லை. இருந்தாத்தானே கொள்ளை அடிப்பாரு?
=================
20 தலைவரே! கச்சத்தீவீல் தேவாலயம் அமைப்பதை ஏன் எதிர்க்கறீங்க?
ஏன் “தேவா”லயம் மட்டும்? இளையராஜா ஆலயம், ரஹ்மான் ஆலயம் அமைக்கனும்
=====================
0 comments:
Post a Comment