1 தலைவரே ! நீங்க ஏன் ஓட்டுப்போடலை?
விரல் ல மை வைப்பாக.கறை படியாத கைக்கு சொந்தக்காரன்னு பேர் எடுக்கனும்
============
2 தலைவரே! கள்ளச்சாராயம் காய்ச்ச இப்போ என்ன அவசரம்?
சப்போஸ் ஆட்சிக்கு வந்தா முதல் கையெழுத்து மதுவிலக்கு.2வது கள்ளச்சாராயம்
==============
3 உதய சூரியன் வந்துடுமா?
எங்கே தலைவரே?நேத்து இன்னைக்கு 2 நாளும் மழை மேகம் மறைச்சிடுச்சு.சகுனமே சரி இல்லை
============
4 உங்க கருத்துக்கணிப்பு பொய்த்து விட்டால் என்ன செய்வீங்க?
1 ம் செய்ய மாட்டேன்.குமாரசாமி கணக்காகிடுச்சு சாரி ம்பேன்.எங்க ஊர்ல 2 ரூ க்கு 5 சாரி
=====
5 நீங்க ஆளுங்கட்சி ஆளா?
எதுக்கு வாக்களிக்கனும் என்ற நிலைப்பாடு வேற.எது ஆட்சிக்கு வரும் என்ற யூகம் வேற.குழப்பிக்காதீங்க
==================
6 தமிழன் சோற்றால் அடித்த பிண்டம் போல் 250 ரூபாய்க்கு விலை போய் விட்டான்.நான் மிக ஏழையாக இருப்பதாலும் கொடுக்க மனம் இல்லாததாலும் தோற்று விட்டேன்
===========
7 எத்தனையோ கணிப்பு ல திமுக தான் ஜெயிக்கும்னு சொல்றாங்களே?
சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப்பாருங்க.கருத்துக்கணிப்புகள் பொய்த்ததே இல்லையா?
============
8 தலைவரே! தேர்தல் நடந்த விதம் எப்படி?
இப்பவே எதும் சொல்ல மாட்டேன்.ரிசல்ட் எனக்கு பாதகம் ஆனா மட்டும் தேர்தல் கமிசன் மேல் பழி போடுவேன்
=============
9 சார்.மல்யுத்தத்துுல சுமோ வீரன் னு சொல்றாங்களே அது யாரு?
டாடா சுமோ வண்டில விபத்து ஏற்படுத்தாம நிதானமா போற எல்லாரும் சுமோ வீரரே!
=============
10 ஓட்டுப்போடும்போது ரொம்ப நேரம் யோசிச்சீங்களே?
காவலன் ரிலீஸ் ஆகறப்ப திமுக வால பிரச்னை.தலைவா வுக்கு ஜெ வால பிரச்னை.யார் வந்தாலும் ஆப்பு நமக்கு்
=============
11 தலைவரே! எக்சிட் போல் ரிசல்ட் நமக்கு சாதகமா வந்ததால சன் டி வி ஷேர் 10%,எகிறிடுச்சாமே?
அதான் நம்ம பிளான்.அதுல 0.01% லாபத்தை தந்திடு
==============
12 தலைவரே! +2 ல நீங்க எவ்ளோ மார்க் வாங்குனீங்க?
எக்சாம்க்கு வித் அவுட் ல ட்ரெய்ன்ல போறப்ப டிடிஆர் ட்ட மாட்டிக்கிட்டேன்.
================
13 சார்,80,000 + ஃபாலோயர்ஸ் இருந்தும் உங்க ட்வீட்ஸ் RT அதிகம் ஆகலையே ஏன்?
2 கோடி தொண்டர்படை உள்ளவங்க
ட்வீட்சே 100 RT ஆகறதில்லை
===================
14 தலைவரே! அவங்க தரப்பில் லட்டு ஆர்டர் பண்ணிட்டாங்களாம், நாம என்ன ஆர்டர் பண்ணலாம்?
பொறுய்யா, எப்படியும் நம்க்கு அல்வா தான்
==============
15 1000 விளக்கு தொகுதில மட்டும் நாம தோத்துடக்கூடாது.
ஏன்?
அதுக்கு அப்புறம் 1000 விளக்கம் சொல்லிட்டு இருக்கனும்
=====================
16 டாக்டர்,எந்த பிரச்சனையானாலும் ஒரு பாட்டில் பீர் ஆறுதல் தரும்னு சொல்றாங்களே?
அப்போதைக்கு ஆறுதல் , எப்”போதை”க்கும் கெடுதல்
================
17 தலைவரே! வெற்றி கல்யாணம்-னு பேட்டி கொடுத்திருக்கீங்க\? புரியல
வெற்றி நிச்சயம்-னு இன்னும் எத்தனை நாளுக்கு சொல்லிட்டு இருக்கறது?
=================
18
தீவிர திமுக காரரான நீங்க ஏன் டெய்லி மீனம்மா கிட்டே கடலை போடறீங்க?
ஏன்?
MEEN"AMMAA" கயல் ல அம்மா வருதே , ஆகாதே உங்களுக்கு?
===============
19 சார், நீங்க வித விதமா கணக்கு போடறதா அவர் சொல்றாரே\?
நான் மேத்ஸ் ஸ்டூடண்ட், சோ தப்பில்லை, வித விதமா கணக்கு பண்ணாதான் தப்பு
================
20 டியர், வழக்கமா கதவை டொக் டொக்னு தட்டுவீங்க, இப்போ பண்ணலையே ஏன்?
எங்க கட்சி ஜெயிக்கலைன்னா KNOCK கை கட் பண்ணிடுவேன்னு சொல்லிட்டேனே!
==================
0 comments:
Post a Comment