1 அதிமுக தேர்தல் அறிக்கையில் மக்களை மயக்கும் மாயாஜாலங்கள் -கருணாநிதி பதற்றம் # அந்த மாயாவை நம்ம கட்சிக்கு இழுத்துடலாமா? தலைவரே?
===============
2 திமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவினர் நடத்தும் 30 மது ஆலைகளை மூடுவோம்-கனிமொழி # முப்பது கோடி முகம் உடையாள்னு பாடுனது உங்களை வெச்சுத்தானா?
===============
3 யாருக்கும் ஆதரவு இல்லை-அழகிரி # என்ன தலைவரே! வீட்டில் இருக்கும் சொந்த மகன் ஓட்டே கிடைக்கலை, தமிழ் நாட்டில் இருக்கும் மக்கள் ஓட்டு எப்படிக்கிடைக்கும்?
===============
4 அதிமுக.கூட்டணிக்காக அலைந்த வாசன் என்ன பாடுபட்டிருப்பார் என்பதை நினைக்கும் போது, வேதனையாகத் தான் உள்ளது.-கனிமொழி # பழம் கனியட்டும்னு காத்திருந்த பழம் பெரும் தலைவரை விடவா?
===================
5 இந்தியாவில் பணக்கார கட்சி என்ற பெருமை, பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. அக்கட்சிக்கு கடந்த நிதியாண்டில், 970.43 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. -செய்தி # அம்”மோடி”யோவ்!!!
=========================
6 தேர்தல் போட்டி மூன்று முனையோ, நான்கு முனையோ, தி.மு.க.,வின் வெற்றியை பாதிக்காது.-டி.கே.எஸ்.இளங்கோவன் # திருப்புமுனை டக்னு கண்ணுக்குத்தெரியாது
==================
7 முடியட்டும் விடியட்டும் என்கின்றனர். ஆமாம், தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகள் முடியட்டும் விஜய காந்த் - # தெரியாத பிசாசை விட தெரிஞ்ச பேயே மேல்னு பலர் நினைக்கறாங்களே?
================
8 தி.மு.க., தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்கு, 70 ஆயிரம் கோடி செலவாகும் என, பொருளாதார
வல்லுனர்கள் கூறுகின்றனர்.-தமிழிசை # 1 3/4 லட்சம் கோடி கை வசம் இருக்கில்ல?
=======================
9 கூட்டத்தில் இறப்பவர்கள் பற்றி ஜெயலலிதாவுக்கு கவலை இல்லை - குஷ்பூ # அம்மாவின் கூட்டத்துக்கு வந்தால் சிவலோக பதவி உண்டு போல
====================
10 எங்கள் ஆட்சியில் துாய குடிநீர் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.-சீமான் # சரி சரி தண்ணியைக்குடி தண்ணியைக்குடின்னு சொல்லிடப்போறாங்க யாராவது
=
===========================
11 பா.ஜ., ஆட்சி அமைந்தால், பொதுமக்களுக்கு இலவசங்களை வழங்காது, -பொன்.ராதா # பாசிட்டிவான சிந்தனைதான்,ஆனா மக்களுக்கு இது நெகடிவா தோணும்
======================
12 பெண்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும்-தமிழச்சி தங்கப்பாண்டியன் # ஜெ , கனிமொழி,பிரேமலதா, குஷ்பூ ,தமிழிசை 5 பேரையும் தலா ஒரு வருசம் சுழற்சி முறையில் சிஎம் ஆக்கிடலாமா?
=================
13 கூட்டுக் குடும்பம் தான் நல்ல கூட்டாட்சியை ஏற்படுத்த முடியும். -ஜி.கே.வாசன் # அப்போ கலைஞர் குடும்பம் கூட கூட்டுக்குடும்பம்தான்,அவர் ஜெயிச்சிடுவார்னு சொல்றீங்களா?
===================
14
இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு ஏறுமுகம்தான்: விஜயகாந்த் # வாக்கு வங்கி ஏறுமுகமா இருந்தா போதாது. அரியணை ஏறுமுகமா இருக்கனும்
==================
15
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தொழில் துறை வளர்ச்சி அடையவில்லை: கனிமொழி # டாஸ்மாக் தொழில் செம லாபமாமே?
====================
16 ஜெ பேசும் கூட்டங்களில் பொதுமக்கள் சிலர் உயிர் இழப்பு -செய்தி # இது தொடர்ந்தா ஜெ கலந்து கொள்ளும் கூட்டம் என செய்தி போடாம ஜெ கலந்து கொல்லும் -னு செய்தி வரும்
=======================
17 கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்தான் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது - ராமதாஸ் # அப்போ நீங்க கூட்டணில இருந்தப்போ கண்டிச்சிருக்கலாமில்ல?1974 ல தாரை வார்க்கப்பட்டது.அதுக்குப்பின் நீங்க அவங்க கூட கூட்டணி வெச்சீங்க இல்ல
=====================
18
மக்கள் நினைத்தால் சிறிய கட்சி பெரியதாக மாறும்:பாஜக தேசிய பொதுச் செயலர் பி.வி.முரளிதரராவ் # தேசியக்கட்சிகளை சட்டமன்றத்தேர்தலில் தமிழன் கண்டுக்க மாட்டான்
===============
19
மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வர அமலாக்கத்துறை தீவிர முயற்சி # இருக்கறப்போ பறக்க விட்டுட்டு, பறந்துபோனபின் பிடிக்க நினைச்சா முடியுமா?
====================
20
பூரண மதுவிலக்கு, தினமும் 20 லிட்டர் இலவச குடிநீர், மதமாற்ற தடைச் சட்டம்: பாஜக தேர்தல் அறிக்கை # மக்களைக்கவர்ற மாதிரி , கவர் பண்ற மாதிரி எதுவும் இல்லையே?
=================
0 comments:
Post a Comment