1 ரைட்டர் சார்! சித்திரையில் உங்கள் முத்திரை பதிக்கும் திருக்குறள் ட்விட்டர் உரை எதுவரை முடிச்சிருக்கீங்க?
முதல்ல காமத்துப்பால் 69% எழுதிட்டேன்
==================
2 டி வி விளம்பரத்தில் எதிர்க்கட்சி = நம் தமிழகத்திற்கு இப்போதைய தேவை வளர்ச்சி
ஆளும் கட்சி = அது தெரிந்து தான் நமீதா வை களம் இறக்கி இருக்கிறோம் # கற்பனை
===============
3 ஹலோ! “கேக்”குதா?
டவர் இல்ல போல எதுவுமே “கேக்”கலை. என்ன?னு மெசேஜ் பண்ணு
வெல்வட் கேக் வேணும். வாங்கிட்டு வாங்க
=================
4
4 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் “ கேக்”காமயே வெல்வெட் கேக் , ஃபார்ஸ்ட் கேக் எல்லாம் இலவ்சமாய் தருவோம். ரேஷனில் அரிசி போடுவது போல் கேக் தரப்படும்
==================
5 தலைவரே! ஃபாரஸ்ட் கேக் வாங்க 2500 ரூபான்னு கணக்கு எழுதி இருக்கீங்களே?
கேக்கோட விலை 100 ரூபா தான். ஃபார்ஸ்ட்ல இருந்து இங்கே கொண்டு வர ட்ரான்ஸ்போர்ட் சார்ஜ் 2400 ரூபா
==================
6 ட்விட்டரில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் செட்டர்கள்
1 நாதன் உங்க பன்னு ( நான் தான் உங்க பன்னு)
2 ப்ரியா குரு நாதன்
பொதுச்சொல் நாதன்
=================
7 சமூக வலைத்தளத்தில் கிடைக்கும் ஆதரவை வைத்து ஒரு கட்சியின்/நடிகரின் செல்வாக்கை எடை போட முடியாது/கூடாது. ஏன் எனில் தமிழ் நாட்டில் இணைய பயன்பாடில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகம்
===================
8 ரொம்ப நாள் கழிச்சு ட்விட்டர் வந்திருக்கேன்.
மிஸ்! போன வாரம் தானே இங்க வந்தீங்க?
அது போன வாரம்.நான் சொன்னது இந்த வாரம்
=============
9 மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டுமானால் ஆபீஸ்/கம்பெனி/தொழிற்சாலை க்கு முதல் ஆளாக நீ சென்றுவிடு
==============
10 உனக்குத்தெரிந்த தொழில் ரகசியம் ,வியாபார நுணுக்கம் எவற்றையும் நீ அந்தத்துறையை விட்டு விலகும் வரை யாருக்கும் கற்றுத்தராதே!
==============
11 உன் பலவீனங்கள் ,உன் வீட்டு விஷயங்கள் எதையும் உடன் பணி புரிவோரிடம் பகிர்ந்து கொண்டிராதே! என்றைக்காவது அது உனக்கு ஆபத்தாக மாறலாம்
===========
12 குருடர் = விழி ஒளி இழந்தோர்
செவிடர் = செவித்திறன் குன்றியோர்
பைத்தியம் = மன நிலை தவறியோர்
என பதப்படுத்தப்பட்ட சொற்பிரயோகம் மேற்கொள்வீர்!
========
13 படிப்பறிவை விட பட்டறிவே சிறந்தது என்பதால் உன் வாழ்வியல் சந்தேகங்களை கிராமத்தானிடம் கேட்டுத்தெளி
==================
14 நான் என்ற அகங்காரம்
எனது என்ற ஆணவம் இருக்கும் வரை உன் வாழ்வில் ஜெ யம் இருக்காது
================
15 எவ்வளவு பணம் நீ சம்பாதித்தாலும் ,எவ்வளவு சொத்து உன் வசம் இருந்தாலும் எளிமையாக இருப்பதே உன்னை அழகாக்கும் அணிகலன்
=============
16 போலியான சொத்து விபரம் தாக்கல் செய்தால் தேர்தலில் போட்டியிட முடியாதுன்னு சொல்லிட்டா தமிழக.அரசியல்வாதிகள் அனைவருக்கும் ஹார்ட் அட்டாக் வரும்
================
17 அவமானங்கள் உனக்கு பழகிவிட்டால் அது ஆபத்து . முதல் அவமானத்திலேயே வீறு கொண்டு எழுந்து விடு
=============
18 உன்னிடம் செல்வம் இல்லை எனினும் பிரபலம் ஆகி விட்டால் செல்வந்தனுக்கு இணையாக மதிக்கப்படுவாய், எனவே பிரபலமாக வழி பார்
==============
19 சாட்சி முதல் முறை சாட்சி சொல்வதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டால் அவன் பிறழ்சாட்சியாக மாறுவதை சுலபமாக தடுக்கலாம்
===========
20 மெக்கானிக் , வக்கீல் யாரா இருந்தாலும் பிரச்சனையை உடனே முடித்தால் அதிக வருமானம் கிடைக்காது. கால அவகாசத்தை அதிகமாக்கினால் ஃபீஸ் அதிகரிக்கும்
==============
0 comments:
Post a Comment