1 டாக்டர், சாப்பிடும்போது கூட மங்களகரமா சாப்பிடனும்னு எப்பவும் லட்டு, கேசரி, ஜிலேபி தான் சாப்பிடறாரு என் புருசன்
சரியான மஞ்ச மாக்கானா இருப்பார் போல. சுகர் தாம்மா வரும்
=======================
2 ஆளுங்கட்சி ரஜினி மேல கோபமா இருக்கா? ஏன்?
நான் குனிஞ்சு வர்றவன் இல்ல, பணிஞ்சு போறவன் இல்ல, துணிஞ்சு எதிர்ப்பவன் -னு பஞ்ச் டயலாக் இருக்காம் கபாலில
================
3 டியர்,சேர்த்து வைத்த கோபம் அனைத்தும் உன்னை நெருங்க நெருங்க பலவீனமடைந்து கண்ணீர் ஆகிறது
மொத்தத்துல நீயோ, உங்க அப்பாவோ சொத்து சேர்த்தலை?
================
4 ஏம்மா. யாரையோ லவ் பண்றதா சொன்னியே? யாரு?
டாடி, அவன் 'அன்பானவன் ,
அசராதவன் ,
அடங்காதவன்
அடேங்கப்பா. 3 பேரா?
=====================
5 பொண்ணுங்க செருப்பைக்கழட்டினாக்கூட நாங்க கவலையேபடாம கபாலி மாதிரி கமெண்ட் அடிப்போம்
எப்டி?
மகிழ்ச்சின்னுதான்
=========================
6 ஜட்ஜ் = ஹெலிகாப்டர் ஊழலில் 250 கோடி லஞ்சம் வாங்குனீங்களா?
கைதி = ஹெலிகாப்டர்க்கு ஸ்பெல்லிங்க் கூட தெரியாதுங்க
அது தெரியும். கேட்ட கேள்விக்கு பதில் சொல்
===============
7 டேய் , ஹோம் ஒர்க் செய்யச்சொன்னேன். செய்யாம டிராயிங் வரைஞ்சு வெச்சிருக்கே?
டீச்சர். நான் சொன்னதையும் செய்யமேட்டேன், சொல்லாததை யும் செய்வேன்
=====================
8
இது ஒரு கிளுகிளுப்பான மலையாளப்படம்னு எப்படி சொல்றீங்க?
டைட்டிலே ”சபாஷ் நாயுடு ஹால் ” தான்
=================
9 மாப்ளை என்ன பண்றாரு?
புரொடக்சன் ஆஃபீசரா இருக்காரு
அடேங்கப்பா. எங்கே?
ட்விட்டர்ல தான். அவர் போடும் ட்வீட்ஸ் வேற யாரும் படிச்சிடக்கூடாதுன்னு ப்ரொடக்சன் கொடுத்திருக்காரு
===================
10 டாக்டர் .2 வாரமா பிரிட்ஜில் வெச்ச நெல்லிக்காய் பழுப்பேறியிருக்கு. அதைப் பயன்படுத்தலாமா கூடாதா?
கூடாது. ஃபிரிட்ஜை எப்பவும் பயன்படுத்தவே கூடாது. கெடுதல்
===============
11 டாக்டர், கர்ப்பிணிப்பொண்ணுங்க பப்பாளிப்பழம் சாப்ட்டா கர்ப்பம் கலையுமா?
மேக்கப் கூட கலையாது. பப்பாளி உடல் சூட்டை தணிக்கும்
================
12 டாக்டர், பெரிய நெல்லிக்காய் சாப்ட்டுட்டு தண்ணீர் குடிச்சா இனிக்குதே, அப்போ நெல்லிக்காய் சாப்ட்டா சுகர் வருமா?
இப்டி எல்லாம் கேள்வி கேட்டா எனக்கு கோபம் தான் வரும்
================
13 டாக்டர், மாம்பழம் சாப்ட்டா ஜாதிப்பற்று அதிகம் ஆகுமா?
உடல் தோல் ஷைனிங் தான் அதிகம் ஆகும். மாம்பழம் சின்னம் தான் ஆபத்து
=============
14 மீண்டும் கோகிலா படத்தை ரீமேக் பண்ணப்போறோம்
ஓஹோ? டைட்டில் மீண்டும் மீண்டும் கோகிலாவா?
நோ.வி “ஜெய”க்குமார். த ஃபேக் ஐடி
===============
15 பெண் பார்க்க நீ வர்லையா?
நீங்க பார்த்தா போதும்மா
சரி. பொண்ணு விஜய் ரசிகையாம்
அய்யோ, அப்போ நான் நேரில் பார்த்துக்கறேன் எதுக்கும், ஃபேக்கா இருந்துட்டா?
==================
16 யுவர் ஆனர், எனக்கு டைவர்ஸ் வேணும், சம்சாரம் ஒரு விஜய் ரசிகை
இதுக்கெல்லாமா டைவர்ஸ் கேட்பாங்க?
அய்யோ ராமா, அது ஆம்பளைங்கோ
===============
17 இண்ட்டர்வ்யூல எதுக்கு நீங்க விஜய் ரசிகையா?ன்னு கேட்கறீங்க?
ஒரு நம்பகத்தன்மைக்குதான் . ஃபேக் ஐடி களை ஐ. டி கம்பெனிக்கு எடுக்க முடியாது சாரி
==================
18
டாக்டர். தேன் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதா?
ரொம்ப நல்லது. ஆனா அது ஒரிஜினல் “ஹனி”யா?ன்னு செக் பண்ணிக்கனும். பெரும்பாலும் டூப்ளீகேட்தான் மார்க்கெட்ல
================
19 தலைவரே! உங்க எதிரி பஞ்சப்பரதேசி போல
எப்டி கண்டு பிடிச்சே?
மாட்டு வண்டி ஏற்றி உங்களை கொலை செய்வேன்னு மிரட்டி இருக்கான்
=============
20 சார், உங்க 2 பசங்களுக்கும் என்ன பேர் வெச்சிருக்கீங்க?
விஜய் ரசிகர் = முத பையனுக்கு 100 கோடி, 2 வது பையனுக்கு 150 கோடி. அண்டர் புரொடக்சன்ல 3 வது இருக்கு,
=============
0 comments:
Post a Comment