1 மேடம், எளிதில் அணுகக்கூடியவர் நீங்கன்னு கருத்துக்கணிப்பில் சொல்லி இருக்காங்களே? எப்டி?
சாரி, அப்பாயிண்ட் மெண்ட் இல்லாம பேட்டி தர்றதில்ல
==============
2 சார், எனக்கும் அவருக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை
சரி, பிரச்னை பண்ணி தான் பாருங்க
ஐ லவ் ஹிம்
ஆணியே புடுங்க வேணாம்
=================
3 தலைவரே! உங்க சொத்து மதிப்பு 4 கோடி ரூ தானே?
ஆமா!
ஆனா, உங்க பையன் 6 படம் தயாரிச்ட்டு இருக்காரு தலா 30 கோடி செலவுல, எப்படி?
==================
4 மேடம்.எதுக்கு கூட்டமா ஆபீஸ் வந்திருக்கீங்க?இவனுங்க எல்லாம் யாரு?
என் ஃபேஸ்புக் 11,000 பாலோயர்ஸ் தான்.ஒரு கெத்து காட்டனும் இல்ல?
==============
5 டீச்சர்.GIRLS.ல R் சைலன்ட்டா?
நோ.கேர்ள்ஸ் தான்
என்னைக்கு அவங்க.சைலன்ட்டா இருந்திருக்காங்க?
================
6 டாக்டர், வீட்டின் முற்றத்தில் துளசி இருந்தா நல்லதா?
கார்த்திகா இருந்தாக்கூடதான் நல்லது, ராதா ஒத்துக்கனுமே?
=====================
7
தலைவரே! டெம்ப்ப்பிள் ரன் கேம் விளையாடுவீங்களா?
ம்ஹூம், சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காது. சர்ச் ரன், தர்கா ரன் வேணா விளையாடுவேன்
====================
8 நான் கூண்டுக்கிளியா வீட்லயே இருக்கேன்
மிஸ்.அப்பப்ப ஃபேஸ்புக்ல வந்து டைம் சொல்றீங்க. அப்போ மணிக்கூண்டுக்கிளி தானே?
====================
9 தலைவரே! 11 கோடி கடன் இருக்குனு குறிப்பிட்டிருக்கீங்க?’
ஆமா
உங்க கடனையே கட்ட முடியாத நீங்க தமிழக கடனை எப்படி தீர்க்கப்போறீங்க?
==================
10 ஜட்ஜ் = பேங்க்ல 100 கோடி கொள்ளை அடிச்சியா?
கைதி = 100 ரூபா பிக்பாக்கெட் அடிச்சுட்டு அது ல 50% போலீஸ்க்கு மாமூல் தரும் சாதா கபாலின்னு நினைச்ட்டீங்களா?கபாலிடா
===================
11 தலைவருக்கு பப்ளிசிட்டி பிடிக்காதாமே?
ஆமா, கோர்ட் டுக்கு அவரை அழைச்ட்டு போலீஸ் வந்தப்போ முகத்தை மூடிக்கிட்டாரே?
==================
12
மாப்ளை பேங்க் ஸ்டாஃப்னு சொன்னீங்க, ஆனா ரவுடி மாதிரி இருக்காரு?
தலைவரோட வாக்கு வங்கி க்கு இன்சார்ஜ்
================
13 நாட்ல கிரிக்கெட் ரசிகர்கள் ஜாஸ்தியா இருக்காங்க.
தலைவரே! அதுக்காக டோனி, கோஹ்லி, அனுஷ்கா சர்மா, லட்சுமிராய் இவங்களை எல்லாம் பிரச்சாரம் பண்ண கூட்டிட்டு வரலாமா?
==================
14 தலைவர் கோபம் வந்தா உடனே பக்கத்தில் இருப்பவர்க்கு ஒரு அறை கொடுப்பாராம்
ஓ, ”அறை” லூசுன்னு சொல்லு
==================
15 தேர்தலில் என்னை ஜெயிக்க வைத்தால் தொகுதி மக்களுக்கு நல்லது செய்வேன்
தலைவரே! தோத்துட்டா?
வழக்கம் போல் கெடுதல் தான் செய்வேன்
====================
16 தலைவரே! மே 16 க்கு ஓட்டு போட ஏன் வரலை?
16 வயதினிலே படம் பார்க்க போய்ட்டேன்
====================
17 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை தினமும் மூடுவோம்
அப்போ பர்மனெண்ட்டா மூட மாட்டீங்களா?
===================
18 கஷ்டப்பட்டு ஊழல்ல சம்பாதிச்ச பணத்தை எல்லாம் வாக்காளர்க்கு தந்தேன் 1000 ரூபா நோட்டா
என்னாச்சு இப்போ?
எல்லா வாக்கும் போய்டுச்சு நோட்டா வுக்கு
==================
19 தலைவரே! ஏன் டெபாசிட் கட்டலை?
டெபாசிட் கூட கிடைக்கலைன்னு நாளை யாரும் நம்மை எள்ளி நகையாட முடியாதில்ல?
=====================
20 தலைவரே! ஈழத்தமிழர்களுக்கு எதிரி அவங்க தான் அப்டினு சொல்லியும் ஏன் உங்களுக்கு ஆதரவு கிடைக்கலை?
ஏன்னா நான் ஈழத்தமிழர்களுக்கு துரோகி. எதிரியை விட துரோகி ஆபத்து
======================
0 comments:
Post a Comment