1 பணக்காரனுக்கு உதவ ஊரில் ஆயிரம் பேர் இருப்பார்கள், ஆதரவற்ற ஏழைக்கு நீ உதவினால் ஆயிரத்தில் ஒருவனாக தனித்து நிற்பாய்
============
2 சினிமா, சீரியல் களில் 10க்கு ஒரு வசனம் ட்விட்டரில் இருந்து எடுக்கப்படுவது பெருமை தான் என்றாலும் அதற்கான அங்கீகாரம் தரப்படாதது சிறுமை
===========
3 உன்னைத்தவிர யாரும் எனக்கு முக்கியம் இல்லைனு கவிதை எழுதும் நெட் தமிழன் கல்யாணம் ஆன பொண்ணுங்ககிட்டே மானாவாரியா கடலை போடறான், அய்யகோ
============
4 பொதுவா பொண்ணுங்க கவிதை எழுதற பசங்களைத்தான் மதிக்கறாங்க, நம்பறாங்க,ஆனா அவங்கதான் வருசம் ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணிட்டு போய்க்கிட்டே இருக்காங்க
============
5 விக்ரம் குமார்+ சூர்யா வின் 24 தியேட்டரிக்கல் ட்ரெய்லர் செம, செம ஹிட் அடிக்கப்போகுது ஃபேமிலி எண்ட்டர்ட்டெய்னர்
============
6 சார், ரஜினி ஸ்டைலா இருந்தது கடைசியா அண்ணாமலையோட சரினு சிலர் சொல்றாங்களே?
அவரோட ஒவ்வொரு படமும் லேட்டஸ்ட் ஸ்டைலுக்கான பதிவுதான்
===============
7 ”உழைப்பாளி” களின் ”முகவரி” எங்கிருந்தாலும் வெற்றி தேவதையின் ஆசீர்வாதம் கிடைப்பது “தொடரும்”.
================
8 இயற்கை தந்த அடையாளத்தை அரிதாரம் பூசாமல் உலகிற்குக்காட்டிய தன்னம்பிக்கையின் அடையாளம் இவர் தான் என கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
=================
9 கபாலி பஞ்ச் டயலாக் பேசும்போது கேமராவை லோ ஆங்கிள்ல வெச்சு டாப் ஆங்கிள் ல வான் தொடும் வெற்றினு சிம்பாலிக்கா காட்றாங்க
==================
10 கபாலி வரும்போது உதய சூரியனைக்காட்றாங்க. குறியீடா?
==============
11 ஓப்பனிங் ஷாட் ல ஹீரோ வலது காலை எடுத்து வெச்சு உள்ளே வர்றாரு.தமிழனின் பாரம்பரியம்,செண்ட்டிமெண்ட்ஸ் #கபாலி
======================
12 சார், இந்தப்படம் ஹிந்தி மார்க்கெட்டை பிடிக்குமா?
டெஃபனட்லி. க”பாலிவுட்”கலக்கல் ஆகவும் இருக்கும்
==============
12 சார், மகிழ்ச்சின்னு சொல்றீங்களே? யாருக்கு மகிழ்ச்சி?
படம் பார்க்கறவங்க, படத்தை வாங்குனவங்க எல்லாருக்கும் மகிழ்ச்சி#கபாலி
==================
13 தனக்கு ஆதரவா பேசறவங்க எல்லாம் ஒரு ஆதாயத்துக்காகத்தான் அப்படி பேசறாங்க என்பதை பெண்கள் எப்போ உணர்றாங்களோ அப்போதான் அவங்க முன்னேற்றம்
=================
14 சார்! நடத்தை கெட்டவர் அப்டினு அபாண்டமா பழி சுமத்தி டேக் போட்டிருக்காங்களே?
இதனால நமக்கு நட்டம் இல்லை. பாவம். நன்னடத்தை இல்லாதவங்கனு கெட்ட பேரு அவங்களுக்குத்தான்
==================
15 7 மணி நேரத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு ரெக்கார்டு 2 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதுதான் ஏழரை என்பது # தெறி vs கபாலி
===============
16
எதைப்புதைத்தாலும் மக்கச்செய்யும் மண் தான் விதையைப்புதைத்தால் மட்டும் உயிர்ப்பிக்கிறது. நீ நம்பிக்கை விதையை உயிர்ப்பிக்கும் மண்ணாக இரு!
===================
17 உழைப்பாளிகளுக்கும், விவாசாயிகளுக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை என உழைக்காமல் இருந்து உன் மரியாதையை இழந்து விடாதே!
==================
18 உன் சொந்த ஊரில் யாரைக்கேட்டாலும் உன் பெயரும் முகவரியும் சொல்வார்கள் எனில் நீ வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறாய் என்று பொருள்
--
================
19
தானாகச்சொல்லும் வரை வீணாக வற்புறுத்தாதே!ஒரு பெண்ணுக்கு யாரிடம் எதை எப்போது சொல்ல வேண்டும் என தெரிந்திருக்கும்
==================
20 உன் மேலதிகாரிக்கு தினமும் ஒரு வணக்கம் வை. அதை விட முக்கியம் FEMALE அதிகாரிக்கு தினமும் ஒரு புன்னகை வை
====================
0 comments:
Post a Comment