1 18+ ட்விட் போடலாமா வேண்டமா?
போடுங்க
++++++
++++++
++++++--
==================
2 மெக்சிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்ஸ் தெரியுமா?
தெரியும், ஆனா இப்போ சொன்னா அதையும் ஜாதிக்கலவரம் ஆக்கிடுவாங்க
==================
3 டியர், டபுள் மீனிங்க் ல பேசுவீங்களாமே?பேசுங்க பார்ப்போம்
உனக்கு சிங்கிள் மீனிங்க்ல ஜோக் சொன்னாலே புரிஞ்சு சிரிக்க 2 நாள் ஆகும்
================
4 மேடம்.பிஸ்னெஸ் ல நல்லா டெவலப் ஆனதால பேரை மாத்திக்கிட்டீங்களா? எப்டி?
"LAKSH"ME to CROREME
===============
5 அரசியல் அறிவு அவசியமா?"
வேட்பாளர்களுக்கு தேவை இல்லை.வாக்காளர்க்கு நிச்சயம் தேவை
===========
6 தலைவரே!500 கோடி பேரம் நடந்ததுன்னு அவர் சொன்னதும் ஏன் பதறீட்டீங்க?
அந்த 500 கோடிக்கு இன் கம்டாக்ஸ்ல கணக்கு கேட்பாங்க.ரெய்டு வரும்
=================
7 ஜட்ஜ் = உங்க 7000 கோடி கடனை செப்டம்பர் மாசம் அடைக்கறதா சொன்னீங்களா?எப்டி அடைப்பீங்க?
இப்போ தான் புது பேங்க்ல லோன் அப்ளைடு.சேங்சன் ஆகட்டும்
===========
8 ஏன் டாக்ஸ் கட்டலை?
இப்போதான் ஈஸ்"வரி"யை கட்னேன்.போன வருசம் புவனேஷ்"வரி"கட்னேன். அடுத்த வருசம் தான் வருமான வரி கட்ட முடியும்
===========
9 தெறி க்கு யு சர்ட்டிபிகேட் னு எப்டி தெரியும்?
பெரும்பாலான சமீபத்திய விஜய் படங்கள் யு தான்.அதை வெச்சு அடிச்சு விட்டேன்
==============
10 தலைவரே! நம்ம கட்சி வளருதுன்னு எப்டி சொல்றீங்க?
கேப்டன் கட்சி ஆளுங்க 24 பேரை விலை குடுத்து வாங்கிட்டேன்.எப்பூடி நம்ம சாணக்கியத்தனம்?
===============
11பிஏ = சார்.செப்டம்பர் மாசம் கடனை அடைச்சிடறதா சொல்லீட்டீங்களே?எப்டி?
மல்லய்யா = மாசத்தை சொன்னேன்.எந்த வருசத்தில்னு சொன்னேனா?
============
12
பரு வராம இருக்க ஜாதிக்காய் அரைச்சு தேய்க்கனும்
டாக்டர், உயர் ஜாதிக்காயா? தாழ்ந்த ஜாதிக்காயா?
====================
13
டாக்டர்,ஊசிப்போன பலகாரம் சாப்பிட்டா கெடுதலா?
ஆமா, ஊசி நாக்குல குத்திடும்
=====================
14 எங்கள்.தலைவர் சொல்வதை யாரும் சீரியசா எடுத்துக்க வேணாம்
ஓஹோ.அப்போ அவர் என்ன காமெடி பீசா?
===============
15 குற்றப்பரம்பரை படத்தை பாலா இயக்கனுமா?பாரதிராஜா இயக்கனுமா?ஒரே சர்ச்சையா இருக்கு.
யார் வேணா இயக்கட்டும்.வசனம் நம்ம தலைவர்தான் எழுதனும்
==============
16 உங்க BP குறையனும்னா உப்பு, புளி , காரம் இவற்றை உணவில் சேர்ப்பதை பாதியா குறைக்கனும், ஃபீஸ் 250 ரூபா
டாக்டர், ஃபீஸையும் பாதியா குறைச்சுக்குங்க. இந்தாங்க 125 ரூபா
=================
17 மிஸ் சவுமியாவ், நீங்க சோறு, டிஃபன் எதும் சாப்பிட மாட்டீங்களா?
ஏன்?
மாத இறுதியில் சாப்பிட காசு இல்லாத வாழ்க்கைனு புலம்புனீங்களே? காசை எப்டி சாப்பிட?
===============
18 தலைவரே! போக்குவரத்துத்துறை அமைச்சரா இருக்கும் நீங்க உங்க சின்ன வீட்டை ஏன் இடது பக்கமா கை கோர்த்துட்டு போறீங்க?
கீப் லெஃப்ட் , ஒபே ட்ராஃபிக் ரூல்ஸ்
==================
19 பேங்க் லோனை அக்டோபர் மாசம் கட்றேன்
ஓஹோ, எதுக்கு அவ்ளோவ் அவகாசம்
செப்டம்பர் மாசம் கட்றதா சொன்ன மல்லய்யா கட்றாரா?னு செக் பண்ணனும்ல?
====================
20 டாக்டர் , குங்குமப்பூவை பால்ல கலந்து சாப்ட்டா என்ன ஆகும்?
அது கம்யூனிஸ்ட் பால் ஆகிடும், வேற யூஸ் எதும் இல்லை
===================
0 comments:
Post a Comment