Saturday, May 28, 2016

சார், இந்தப்படம் ட்ரெண்ட் செட்டிங் ஹிட்னு சொல்றாங்களே, நிஜமா?

 சார்,  நெகடிவ் விமர்சனத்தால  ஓப்பனிங் வசூல் பாதிக்குது

 ஓஹோ, அப்போ படத்துக்கான ரிசர்வேசன் முதல் 10 நாளுக்கு ஃபுல் ஆகிடுச்சுன்னு சொன்னது பொய்யா?

==============

சார், இது 100 கோடி பட்ஜெட் படம்னீங்களே, கணக்கு சொல்லுங்க

இருங்க, குமார சாமியை கூட்டிட்டு வர்றோம்


=============

3 MGR விட விஜய் 5 மடங்கு பெரிய ஆள்



எப்டி?
பல்லாண்டுவாழ்கல MGR 4 கைதிங்களை திருத்துனாரு,இதுல விஜய்20 ரவுடிகளை பாடம் நடத்தி திருத்தறாரே?



===============

4 ஜட்ஜ் = ஆபரேட்டர் ரூம்ல இருந்து படத்தை வீடியோ எடுத்தீங்களா?




பாலிமர் = அவங்கதான் சரியா படம் எடுக்கலை, நாமாவது ரீ ஷூட் நல்லா பண்ணுவம்னுதான்


==============


5 முழு படத்தையும் நாங்க எல்லாரும் நின்னுட்டே பார்த்தோம்

 படம் அவ்ளோ விறுவிறுப்பா?

 உக்காந்தா தூங்கிடுவோம்


=====================


6  டைரக்டரை எல்லாரும் பார்ட் பார்ட்டா கழட்டிடுவோம்னு மிரட்னாங்களே ஏன்?

 இந்தப்படத்தோட  செகண்ட் பார்ட்  வரும்னாராம்


================

7  சார், படத்துல ஹீரோ   ஹீரோயினை தடவவே இல்லையே?

 தடவி இருக்காரு , கூட்டம் குறைஞ்சதும் “இணைக்கப்பட்ட புதுக்காட்சிகள்” அறிவிப்போடு வரும்


==================

8  சார், பட டைட்டிலுக்கு அர்த்தம் சொல்லுங்க

 அதோ படம் முடியும் முன்பே “தெறி”ச்சு ஓடறாங்க பாருங்க ஆடியன்ஸ்


==================


சார், படம் சராசரிதான். ஆனா பிளாக் பஸ்டர் ஹிட் அப்டினு அடிச்சு விடறீங்களே? எப்டி?




பொண்ணு சுமாரா இருந்தாலும் தரகர் அருமையான பொண்ணுனு ஃபார்மாலிட்டிக்கு சொல்றதில்லையா?

===================


10 ஜட்ஜ் = புதுப்பட ரிலீஸ் அன்னைக்கு தியேட்டர்ல போய் அதை வீடியோ எடுத்தீங்களா?

பாலிமர் சேனல்= ஆமாங்க

ஜட்ஜ்= இதுக்கு என்ன தண்டனை தெரியுமா? அதே படத்தை டெய்லி 4 ஷோ 100 நாள் பார்க்கனும்


====================


11   சார், ஹீரோவோட கட் அவுட் சரிஞ்சு போலீஸ் ஜீப்க்கு சேதமாமே?

 அட அது பரவால்லங்க. ஒரு ஷோ க்கு 1235 பேர்.5 ஷோ .எவ்ளோவ் சேதம் பாருங்க

=================


12 
டாக்டர்,மது அருந்தினால் முகப்பரு வரும் என்பது உண்மையா? 

எல்லா நோயும் வரும்போது பரு மட்டும் வராதா?


=============

13 சார், இந்தப்படத்தை ரசிக்கனும்னா லாஜிக் பார்க்கக்கூடாது, நதிமூலம் ரிஷிமூலம் சத்ரிய மூலம் பார்க்கக்கூடாது

 எதுக்கு அவ்ளோவ் சுத்தி வளைக்கறீங்க. ஒரே வரில படமே  பார்க்கக்கூடாதுசொல்லுங்க


==================


14 தலைவரே! நம்ம 2 பசங்களோட ஆதரவாளர்கள் அடிச்சுக்கறாங்களாமே?
நாந்தான் ஐடியா குடுத்தேன்.எதிர்ப்பு வாக்கு வெளில போகக்கூடாது



================


15  சார், இந்தப்படத்தில் 3 கெட்டப்

வெரிகுட், மேக்கப் மேனை கூப்பிடு

 தேவை இல்லை சார். கறுப்பு கூலிங் கிளாஸ் போட்டா 1, சிவப்பு கிளாஸ் போட்டா 2, கிளாசே போடலைன்னா 3


=====================

16 திருப்பதில காணிக்கை  எண்ணும் 189 பேரும் ஒரே டைம்ல லீவ் போட்டுட்டாங்களா? எதுக்கு?
 புதுப்பட  கலெக்சன் அமவுண்ட்டை எண்ண வேணாமா?



===============


17   சார், நாளை காலைல நம்ம படத்தோட கலெக்சன் ரிசல்ட்டை அறிவிக்கனும், யார் சொன்னா நல்லா இருக்கும்?

 நம்ம குத்து மதிப்பு குமாரசாமியை கூப்பிடுவோம்.அடிச்சு விடுவாரு


=====================

18  கலெக்சன் ரிப்போர்ட் சொல்ல எதுனா குறுக்கு வழி இருக்கா?

 லேட்டஸ்ட் கிரேட்டஸ்ட் ரெக்கார்டு எதுன்னு பார்த்து ஒரு கோடி சேர்த்து சொல்லுங்க,ரெக்கார்டு பிரேக் கலெக்சன்னு சொல்லிக்கலாம்


===================

19  சார், நீங்க அவர் கிட்டே பேமண்ட் வாங்கி நெகடிவ் ரிப்போர்ட் தர்றீங்களா?

அதை செக் பண்ண ஒரு வழி. இவர் கிட்டே ஒரு அமவுண்ட் வாங்கிக்குடுங்க.நான் வாங்கிக்கிட்டா நிஜம்னு அர்த்தம்


==================


20   சார், இந்தப்படம் ட்ரெண்ட் செட்டிங் ஹிட்னு சொல்றாங்களே, நிஜமா?

 ட்ரெண்ட் செட்டப் ஹிட்னு ஓப்பனா சொல்ல முடியுமா? பூடகமா புரிஞ்சுக்கனும்


========================



0 comments: