1 தலைவரே! நம்மை எதிர்க்கறகட்சியை எல்லாம் பணத்தால அடிக்கறீங்களே? ஏது இவ்ளோ பணம்?
ஊழல்லசம்பாதிக்கும்போதே 5% இப்டி 3ம்படை வேலைக்கு ஒதுக்கிடுவேன்
============
2 தலைவரே! அமலா பால் சம்பளம் 6 லட்சம் குறைக்கப்படுமா?
ஆமா, ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபா குறைக்கறோம்ல?
அமலாபால் இப்போ நடிக்கறதே இல்லையே?
================
3 நாங்கள் சொன்னதைத்தான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்
என்ன சொன்னீங்க? செஞ்சீங்க?
ஊழலை ஒளிப்போம்னு சொன்னோமே?
=====================
4 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கரண்ட் பில்லை நீங்க கட்டவே தேவை இல்லை
ஏன் தலைவரே? நீங்களே கட்டிடுவீங்களா?
கரண்ட் இருந்தாத்தானே கரண்ட் பில் வரும்?
====================
5 தலைவரே! உங்க தேர்தல் அறிக்கைல இலவசம் என்ற சொல்லே இல்லைய்ஏ , ஆச்சரியமா இருக்கே?திருந்தீட்டீங்களா?
தமிழன் அதை ( இரட்டை) இலை வசம்னு படிச்சுடறான், சகுனம் சரி இல்ல
====================
6 தலைவரே! மாணவர்களுக்கு 4 ஜி திட்டம் கொண்டு வருவது சமுதாய முன்னேற்றத்துக்காகவா?
இல்லை, 2 ஜி ஊழல்ல அடிச்ச அளவு 2 மடங்கு அடிக்கலாமில்ல?
================
9 தலைவரே! கல்விக் கடன் எப்டி ரத்தாகும் ...அது மத்திய அரசு கட்டுப்பாட்டில் தானே வரும் ?
“கை” ல இருந்து கொடுப்போம்
உங்க கைல இருந்தா?
நாம என்னைக்கு கைக்காசு நட்டப்பட்டிருக்கோம்?
==================
10 தலைவரே! நீங்க ஆட்சிக்கு வந்தா எல்லா லோன் -ம் தள்ளுபடியா? எப்டி?
விஜய் மல்லைய்யா ஃபார்முலாதான். எல்லாரையும் ஃபாரீன் அனுப்பிடலாம்னு ஐடியா
==================
11 தலைவரே! டான்னு 9 3/4 க்கு உங்க உரையை முடிச்சிடறீங்களே?
டாஸ்மாக் 10 க்கு க்ளோஸ் பண்ணிடுவாங்க இல்ல?
================
12 கட்சிகளின் குடும்ப ஆதிக்கத்தை நாங்க எதிர்க்கிறோம்’’
நாங்கன்னா யாரு?
நான், என் சம்சாரம், என் மச்சினன்
====================
13 தலைவரே! அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவேன்னு 2/9/1999 அப்போ சொன்னீங்க,இன்னும் ஏன் நிறைவேற்றலை?
நீ அதிமுக ஆளா?
===============
14 அவருக்கு கட்சியே நடத்தத்தெரியல.சந்திரகுமார் தனியா பிரிஞ்சுட்டாரே?
கொஞ்சம் திரும்பிப்பாருங்க தலைவரே! அழகிரி கண்ணுக்குத்தெரியறாரா?.
=================
15 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மியான்மர் தீவை மீட்போம்
எதுக்கு?
சும்மா எதுனா அடிச்சு விடறதுதான், ஜனங்க அதை எல்லாம் பார்க்க மாட்டாங்க
===================
16 தலைவரே! 15 விஜய் பட டிவிடி உங்க வீட்ல இருக்கே?
இதைத்தான்யா 1500 கோடி வாங்கிட்டதா சொல்லிட்டு இருக்காங்க ( 15* 100 கோடி =1500 கோடி)
===================
17 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள்ளச்சாராயம், கள்ளக்காதல், ஒழிப்போம்,,மேலும்
தலைவரே! நம்ம 7 வது சின்ன வீடு சொப்பன சுந்தரி கிட்டெ இருந்து கால்
===================
18
சலுகை விலையில் கைப்பேசி வழங்கப்படும்னு சொன்னீங்களே? எப்டி சாத்தியம் தலைவரே?
தங்கர் பச்சான் -ன் அம்மா வின் கைப்பேசி டிவிடியை 10 ரூபாய்க்கு கொடுப்போம்
===============
19 தலைவரே! கச்சத்தீவை எப்போ மீட்பீங்க?
5 வருசத்துக்கு ஒரு வாட்டி ( தடவை)
====================
20 தலைவரே! மக்களோட எல்லா கஷ்டத்தையும் எந்த தலைவரும் போக்க மாட்டேங்கறாங்களே அது ஏன்?
மக்கள் கஷ்டம் போக்கிட்டா எங்களுக்குத்தான்யா நஷ்டம்
=====================
0 comments:
Post a Comment