Saturday, May 21, 2016

மருது - சினிமா விமர்சனம்




இயக்குநர் முத்தையா தன் முதல் படத்தை எம் சசிகுமாரை வெச்சு குட்டிப்புலின்னு எடுத்தாரு, சுமாரா போச்சு , அதனால அதே கதையை பட்டி டிங்கரிங்க் பண்ணி ஹீரோவை மட்டும் மாத்தி கொம்பன் எடுத்தாரு. இது இன்னும் நல்லா போகவே அதே கதையை இன்னும் பட்டி டிங்கரிங் ப|ண்ணி விஷாலை வெச்சு பண்ணி இருக்காரு. மாமூல் ஆக்சன் மசாலா பழி வாங்கும் சப்ஜெக்ட் தான் என்றாலும் படம் போர் அடிக்காம போகுது.


ஹீரோ ஒரு கூலி. மூட்டை தூக்கற ஆள்.இவரு ஹீரோயினோட அம்மாவை சதிக்க|றாரு. லோக்கல் ரவுடிகளால் அநியாயமா தன்  வருங்கால மாமியார் கொலை செய்யப்படறதைக்க|ண்டு பொங்கி எழறாரு,அதே வில்லன் க்ரூப் தன் அப்பத்தாவையும் கொலை செய்ய ஹீரோ அந்த கும்பலை பழிக்குப்பழி வாங்க|றாரு.\
\


 ஒன்லைன் ஸ்டோரியா கேட்க போர் அடிச்சாலும் திரைக்கதை போர் அடிக்காம தான் போகுது. முன் பாதி  ஃபுல்லா  ஹீரோ , நண்பர் நாயகி கலாய்ப்பு படலம்  காதல் அப்டி போகுது. லேடீசைக்கவர அப்பத்தா செண்ட்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுது. பின் பாதியில் ஆக்சன் காட்சிகள் அதகளம்.  விஷால்க்கு இப்படம் வெற்றிப்படம்.

ஹீரோவா விஷால்  ஜிம் பாடி  , ராஜ் கிரன் லுங்கி சிவகார்த்திகேயன் பாணி கலாய்ப்புக்காதல் என மனிதர் கை தட்டலை அள்ளறார். அவரு எலக்சன்ல ஜெயிச்சாலும் ஜெயிச்சாரு அவருக்கான பஞ்ச் டயலாக் எல்லாம் ஓவரோ ஓவர் ஆனானப்பட்ட புலியே இப்போ பதுங்கி இருக்கும்போது இவர் ஏன் இப்படி துள்ளிக்குதிக்கறாருன்னு தெரியல . தெக்க பூரா நம்ம ராஜ்யம் தான் எனும் டயலாக் அடிக்கடி வருது.


இவரோட அடுத்த படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆகலாம்.

 நாயகியா  அஞ்சடி தங்க நிற வெள்ளரிப்பிஞ்சு ஸ்ரீ திவ்யா.சிவகார்த்திகேயனுக்கு சரியான ஜோடியா தெரிஞ்ச இவர் 43 வயசு விஷால் க்கும் அவரோட ஹைட் வெயிட்டுக்கும் தங்கச்சி போல் தெரியறார்.இருந்தும் ஹீரோ விடலையே உப்பு மூட்டை சீன் முதல் இரவு சீன் அப்டினு புரட்டி எடுத்துட்டார். பாவம் திவ்யா


ஹீரோவின் அப்பத்தாவாக வரும் பாட்டி செம ஆக்டிங் . அவரது நடிப்பும் அவருக்கான காட்சிகளும் லேடீஸ்க்கு பிடிக்கும்


வில்லனாக தாரை தப்பட்டை வில்லன். பெருசா எதும் செய்யலை , சும்மா முறைச்சுக்கிட்டே இருக்காரு கேப்டன் மாதிரி .

சூரி காமெடிக்கு , மோசம் இல்லை. 12 ஜோக் சொல்லி 2 ல் சிரிக்க வைக்கிறார். ராதா ரவி எப்பவும் போல் கம்பீர நடிப்பு

பாடல் காட்சிக|ள் ஓக்கே . 2 பாட்டு செம ஹிட்டு இமான் ஏமாற்றவில்லை. பிஜிஎம் இன்னும் பட்டாசை கிளப்பி இருக்கலாம்.
\\


ஆக்சன் காட்சிக\ள் செம . ஸ்டண்ட் மாஸ்டருக்கும் விஷாலுக்கும் ஒரு ஷொட்டு








தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்

மருது U/A =145 நிமிடம் @ திருவனந்தபுரம் தன்யா

2 ஸ்ரீ திவ்யா இன்ட்ரோ -சூரி கமென்ட்.= பூ வெச்ச புரூஸ்லி இவ தான்


சிவகார்த்திகேயன் ஸ்ரீ திவ்யா கிட்டே என்னென்ன லூட்டி அடிச்சாரோ அத அப்டியே டிட்டோ காப்பி விஷால் # மருது

4 மருது இடை வேளை வரை ஓகே.சிவகார்த்திகேயன் பார்முலா =50% விஜய் பார்முலா = 25% விஷால் பார்முலா =25%


5 ஹீரோயினை காப்பாத்தினா சாதா தளபதி
ஹீரோயின் அம்மாவையும் காப்பாத்துனா புரட்சித்தளபதி மாமியாருக்கு உதவறாப்டி.

6 வருங்கால மாமியாரைக்கொலை செய்த லோக்கல் ரவுடிகள் ,அரசியல்வாதிகளை பழி வாங்கும் மாப்ளை யின் கதை தான் மருது


7 விஜய் ரசிகர்களை பாராட்டுகிறேன்.மருதுவில் 4 இடங்களில் விஜயை கிண்டல்.அடித்தும் ஒரு இடத்தில் "புலி"யை வெட்டுவேன் என சொன்ன பின்னும் கோபப்படலை

8 சூர்யா.+ விஜய் = விஷால்
இதை நான் சொல்லலை.விஷால் தான் சொல்றாரு. நான் சிங்கம் மாதிரி.தேவைப்பட்டா புலியாவும் மாறுவேன் @ மருது பஞ்ச்




நச் டயலாக்ஸ்

1 சல்லிப்பசங்களுக்குத்தான் இப்போ பதவி கிடைக்குது

மருது இனத்தில் சிங்கம்
குணத்தில் புலி # மருது பஞ்ச்


3 ஜெயிலுக்குள்ளே போக வேண்டிய பயலுக எல்லாம் சட்டசபைக்குள்ளே போறானுக

வாழ்க்கைல எல்லா காரியத்தையும் துணிஞ்சு செய்யனும்னு இல்லை.சில விஷயங்களை பணிஞ்சு தான் செய்யனும் # மருது


5 மருது யார் தெரியுமா?முதல்ல எதிரி தட்டுல இட்லி போடுவான்.அப்பறம் தலைல இடியைப்போடுவான்


அடியாளா இருக்கும்போது யோசிக்காம எது வேணாலும் செய்யலாம்.ஆனா அரசியலுக்கு வந்துட்டா யோசிச்சு எதையும் செய்யனும்


லவ்வுக்கு காமெடி தான் தேவை.கலவரம் தேவை இல்லை


பொண்ணுங்களை கும்பிட்டுதான் பழக்கம்.கூப்பிட்டு பழக்கம் இல்லை # மருது


9 கல்லா இருக்கறவ தான் பொம்பளை.அதை கரைக்கறவன் தான் ஆம்பளை சூரி பஞ்ச்


10 சூரி = ஸ்ரீ திவ்யாவை உனக்கு பிடிச்சிருக்கா?
விஷால் =ம் சூரி =லட்சுமிமேனன் மாதிரி எதிர்பார்ப்பேனு நினைச்சேன் # மருது

11 சூரி டூ விஷால் = நீ அர்னால்டு மாதிரி இருக்கே # நல்லவேளை அர்னால்டுக்கு தமிழ் தெரியாது


12 ஸ்ரீதிவ்யா = ஜீன்ஸ் போட்டா சான்ஸ் கிடைக்கும்னு எந்த கூமட்டையன் உனக்கு சொன்னான்?
விஷால் = இவன் தான் சூரி = அடேய்.# மருது


13 மருது க்கு யாரும் பதவி தரத்தேவை இல்லை.அவன் நினைச்சா எந்தப்பதவிலயும் போய் உக்காருவான் # ரைட்டு விஷால் க்கு அடுத்த விஜய் ஆக ஆசை போல



14 சூரி = பனியாரச்சட்டி மாதிரி இருந்துட்டு பழமொழி பேசறா # மருது


15 சம்பாதிக்கற மாப்ளை கேப்பாக.நீ சமைக்கற மாப்ளை கேட்கறே?
சமைக்கற பையன் தான் பொறுப்பானவனா இருப்பான்


16 உழைக்கறவன் மனசு அடுப்புல இருக்கற உலை மாதிரி
எப்பவும் கொதிச்ட்டே இருக்கும்


17  பொண்ணுக்கு ஒண்ணுன்னா புலி மாதிரி அடிப்பேன்.தேவைப்பட்டா "புலி"யையே அடிப்பேன் (விஷால் VS விஜய் மோதலா?)

18 நமக்குப்பிடிச்ச பொண்ணு நம்மைத்தேடி வந்தா நாம தரமானவன்னு அர்த்தம்
வர்லைன்னா? தகுதி இல்லாதவன்னு அர்த்தம் # மருது



19 சும்மாவா போட்டீங்க.காசு வாங்கிட்டுதானே ஓட்டு போட்டீங்க?# மருது

20 ஒத்தை ஆளை போட பத்து பேரோட நீ போவே.மருது பத்து பேரை அடிக்க ஒத்தை ஆளா போவான் #,மருது விஷால் பஞ்ச்





சபாஷ் டைரக்டர்

1 சிவகார்த்திகேயன் ஃபார்முலாவை அப்டியே விஷாலை காப்பி அடிக்க வைத்தது

2 இயக்குநர் ஹரி ஃபார்முலாவை பல இடங்களில் ஃபாலோ பண்ணி படத்தை ஸ்பீடாக கொண்டு சென்றது



லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 பாட்டி ஏன் ஹீரோவிடம் தன்னை வில்லன் கொடுமை செய்ததை சொல்லவில்லை? ஹாஸ்பிடலுக்கு போய் இருந்தால் அப்போதே காப்பாற்றி இருக்கலாமே|?


2 உடல் முழுக்க நனைந்து வில்லன் இடத்தில் இருந்து மீட்டு வந்த பாட்டிக்கு என்ன ஆகி இருக்கும் என கிராமத்து ஹீரோவால் யூகிக்க முடியாதா?


3 சின்னதம்பி படத்தில் கேவலமான ஒரு சீன் வரும் . விதவையான மனோரமாவை வில்லன் ஆட்கள் கொடுமைப்படுத்தும் காட்சி., அதற்கு அடுத்த கேவலம் இந்த பட க்ளைமாக்சில் பாட்டியை சித்ரவதைப்படுத்துவது


4 ஹீரோவுக்கு தன் வருங்கால மாமியாருடன் பரிச்சயம் ஏற்ப்டுவது சரி ,ஆனால் அவர் நாயகியை அப்போது சந்திக்காமல் இருந்தது எப்படி?



சி.பி கமெண்ட் -மருது = முன் பாதி காதல் ,காமெடி பின் பாதி அரிவாள் வெட்டு குத்து பழி.சி சென்ட்டர் ஹிட்.விகடன் =41 ,ரேட்டிங் =2.5 / 5

0 comments: