1 சந்தைக்கடையில் யாராவது வந்து விலை கேட்க ஆரம்பித்தவுடன் கூட்டம் அலை மோதி வந்து விலை கேட்கும். விலை எகிறும். யாருமே கண்டுக்கலைன்னா அந்தப்பொருள் விலை இறங்கும்
================
2 அன்பே! அப்பர் பர்த்தில் இருக்கும் முரசு நான்
லோயர் பர்த்தில் இருக்கும் உதய சூரியன் நீ!
நம் இருவரையும் சேர விடாமல் மிடில் பர்த்தில் தாமரையாய் உன் அப்பா
=============
3 சார், அந்த தலைவரால மக்களுக்கு ஆபத்துன்னு சொன்னீங்க, இப்போ அதே நபரை பேட்டி எடுத்திருக்கீங்களே? அப்போ நீங்க மக்களில் ஒருவர் இல்லையா?
===============
4 பலம் இருக்கு என்பதற்காக எதிரிகளை சம்பாதிக்க கூடாது.
பழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கை வசம் இருக்கும் பாலை கீழே ஊற்றி விடக்கூடாது
==============
5 ரீஃபைண்டு ஆயிலை விட பாரம்பரியமாய் நாம் பயன்படுத்தும் கடலை எண்ணெய் , நல்லெண்ணெய் இவைதான் சமையலுக்கு நல்லது விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்.
==============
6 ஆரோக்யமான வாழ்வுக்கும் சரி , வெற்றிகரமான வாழ்க்கைக்கும் சரி நம் முன்னொர் , பெற்றோர் செய்ததை பின் பற்றினால் போதும்
==================
7 லோன் வாங்கிட்டு வெட்கமே இல்லாம நாட்டை விட்டு ஓடின பணக்காரத்திருடன் விஜய் மல்லைய்யாவுக்கும் , பிரபல பாடகரை சூப்பர் சிங்கர் மோசடி செய்து சம்பாதித்த விஜய் டிவிக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை
===============
8 அன்பே! கடலளவு கற்பனையில்
நான்.., எப்போ வருவே?
பீச்ல கடலை, சுண்டல் வித்துட்டு இருக்கேன், தீர்ந்ததும் வருவேன்
================
9
சமூக வலைத்தளத்தில் உங்கள் பணி, சம்பளம் பற்றிய விபரங்கள் பகிராதீர்கள்.சமயம் கிடைக்கும்போது அதை வைத்து குத்திக்காட்டுவார்கள்
============
10
உங்களைப்பற்றிய முழு விபரங்கள் தெரிந்தவர்கள் யார் யார் என குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.ஆபத்து அவர்கள் மூலமே வரும்
=================
11
இரு மாறுபட்ட சூழல்களில் வேறுபட்ட இரு கருத்துகள் கூறும்போது அதன் அர்த்தம் புரிந்து கொள்ளாமல் நீ அன்னைக்கு அப்படிச்சொன்னியே? என குறை சொல்ல ஒரு கூட்டம் வரும்
==================
12 உன் தனிப்பட்ட திறமையை , செல்வாக்கை வளர்த்துக்கொண்டால் அடுத்தவர் செல்வாக்குக்காக காத்திருந்து உன் பெயரைக்கெடுத்துக்கொள்ள தேவை இல்லை
===============
13 ட்விட்டர் கிசு கிசு - கோவை அரட்டை கேர்ள் க்கும் பாப்பநாயக்கன்பாளையம் சித்ரம் ட்வீட்சுக்கும் சண்டை டும்டும்டும்
==========
14 கேட்கறவன் கேனயனா இருந்தா நாளைய இயக்குநர் குறும்பட போட்டியில் மணிரத்னம் கூட கலந்துக்கலாம்னு சொல்வாங்களாம்.# கோடம்பாக்கம் பழமொழி
==============
15 காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கூட்டிட்டுப்போய்ட்டானாம் க்கிகிகி # ம ந கூ வில் கேப்டன்
============
16 வை கோ மைன்ட் வாய்ஸ் = கூட இருந்தே குழி பறிச்சேன்.இப்போ பழத்தையும் பறிச்சுட்டேன்
============
17 உனக்குக்கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனது 2 வது தோல்வி. அது உன் எதிரிக்கு கிடைத்ததே முதல் தோல்வி
==============
18 பங்குனி உத்திரம் முருகருக்கு அரோகரா அரோகரா
கலைஞருக்கு கோவிந்தா GO"WIN" தா (வெற்றி கை நழுவிப்போய்டுச்சு)
=============
19 பழம் நழுவி வை கோ"பால்" இல் விழுந்தது
============
20 சாணக்கியத்தனம் கண்டு மலைக்காதே.உன் புத்திசாலித்தனம் தான் ஜெயிக்கும்
================
0 comments:
Post a Comment