1 பக்தியோட இருப்பவர்கள் கூட
இந்த சாமி ஆகாது.,அந்த சாமி பிடிக்காது சொல்வது ஏன்?
சுப்ரமணியம் சாமி,நித்யானந்தா சாமி எல்லாம் ஆபத்தானவங்க.அதான்
==========
2 மிஸ்! உங்க முகம் ஏன் எண்ணெய் வழிஞ்சது போல் இருக்கு?
எனக்கு ஆயில் ய நட்சத்திரம் சார்
==============
3 டீச்சர் கூட ஓடிப்போன பையன் கடைசியாப்பார்த்த படம் என்னவா இருக்கும்?
குரு என் ஆளு
==============
4 த்லைவரே! டெய்லி காலை ல எந்திரிச்சதும் ஐ டெக்ஸ் மை நல்லதுனு சொல்றீங்களே ஏன்?
பெண் மை யைப்போற்றுவோம் என்பது கழகத்தின் கொள்கை
=============
5 பரணி நட்சத்திரம் தரணி ஆளும்.
ஜோசியரே! சும்மா அடிச்சு விடாதீங்க.இருப்பது ஒரு உலகம். எப்டி எல்லா பரணி நட்சத்திரக்காரங்களும் ஆள முடியும்
=============
6 முள்ள முள்ளால தான் எடுக்கனும்!! னு முயற்சி செஞ்சேன்.
என்ன ஆச்சு?
2 வது முள்ளும் உள்ளே போய்டுச்சு.இப்போ 3 வது முள்
==============
மிஸ்."poor"na னு இருப்பதாலோ என்னவோ.RICH NA னு மாத்திப்பாருங்க
=============
8 டாக்டர். பெரிய வெங்காயம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா?
யோவ்.அப்போ சின்ன வெங்காயம் சாப்ட்டா கம்மி ஆகிடுமா?அடிச்சு விடக்கூடாது
=============
9 காலை டிபனை காலை 8 டூ 9 சாப்பிட்ரனும்.
டாக்டர்.10 பூரியை 10 நிமிசத்தில் சாப்ட்ருவேன்.மீதி 50 நிமிசம் என்ன சாப்பிட?
=============
10 அய்யய்ய்யோ திருடன் திருடன்.. கொல்லைப்பக்கம் வந்திருக்கான்
ஏம்மா நான் உன் ஃபேஸ்புக் ஃபாலோயர்தான் டி எம் க்கு ஏன் ரிப்ளை பண்ணல? டி எல் ல ரிப்ளை பண்ணலைன்னா வாசல் பக்கம் வந்திருப்பேன்
====================
11 டியர், நான் எவ்ளோ கோவமா பேசினாலும் நீ என்கிட்ட கோவமா பேசக்கூடாது
இது என்னம்மா கேப்டன் ஃபார்முலாவா இருக்கு?
=============
12 உங்க பையன் செல்லாக்குட்டி யா? அப்டின்னா செல்லம்னு அர்த்தமா?
இல்லை ரேஷன் கடைக்குப்போகச்சொன்னா, இண்ட்டர்வ்யூக்கு போகச்சொன்னா எங்கேயுமே செல்லா குட்டி
=================
13
தலைவரே! உங்க தலைமையை ஏற்க மாட்டோம்னு அவர் சொல்லிட்டாரே? அது ஏன்?
ஏன்னா நான் தலைக்கு சிவப்பு டை அடிக்கறேன், அவரு கறுப்பு டை அடிக்கறாரு
================
14
டியர், 5 வருசமா லவ் பண்றேன், இன்னும் என் லவ்க்கு OK சொல்லலையே?
அப்பா கிட்டே பேசிப்பாருங்க
பேச்சு வார்த்தை நடத்த நான் என்ன அரசியல் கட்சியா?
===========
15 டியர், ஆர்ட் ஆஃப் லிவ்விங்க்னா என்னா?
ஆர்ட்ஸ் காலேஜ்ல ஃபிகருங்க நல்லாருந்தா வீட்டுக்கே போகாம அங்கனயே குடி இருப்போம், அதான்
=================
16
உங்க ஆஃபீஸ் HRO மேடம் உன்னை லவ் பண்ணுதுன்னு எப்படி யூகிக்கறே?
எனக்கு எந்த மெயில் அனுப்பினாலும் டியர் சார்னு தான் அனுப்புது,அப்போ இது லவ் தானே ஜெஸ்ஸி
==================
17 டியர், எக்சாம் கிட்டே வருது, பசங்களுக்கு எதுனா புத்தி சொல்லுங்க
ம்க்கும், எலக்சன் கூடத்தான் கிட்டே வருது, அரசியல்வாதிக்கு புத்தி சொல்ல முடியுமா?
=============
18 தலைவரே! கூட்டணிப்பேச்சுவார்த்தைக்கு கார்த்திக்கை ஏன் இன்னும் சந்திக்காம இருக்கீங்க?
அவரு வந்தா முதல்ல குஷ்பூ எங்கே?ன்னு தான் கேட்பாரு
================
19 டாக்டர்! இப்பலாம் 3 சப்பாத்தியே சாப்பிட முடியல ? ஒருவேளை வயசாயிடுச்சோ?
வயசானா ஒரு சப்பாத்தியே மெல்ல முடியாதே
==============
20 டாக்டர்,இடுப்புல மச்சம் உள்ள பொண்ணை காதலிக்கிறவன் அதிர்ஷ்டசாலியாமே நிஜமா?
யோவ்,ஒரு பொண்ணோட காதல் கிடைச்ச எல்லாருமே அதிர்ஷ்டசாலிகள் தான்
=================
0 comments:
Post a Comment