Wednesday, April 20, 2016

சத்ரியன் + சேதுபதி + தங்க மீன் கள் = தெறி

தோல்வியை சந்திக்காத வெற்றி வீரன் உலகில் இல்லை.வீறுகொண்டு எழ வைப்பதே தோல்விதான்

===========

2 சத்ரியன் + சேதுபதி + தங்க மீன் கள் = தெறி # ஸ்டில்ஸ் சொல்லும் சேதி

=============

3 கன்னிப்பருவத்திலே படம் ரீமேக் செய்யப்பட்டா டைட்டில் பை பாரதிராஜா

கடல் கன்னிப்பருவத்திலே

=============

4 தேங்காய் சட்னி கொழுப்பு.பொதினா சட்னி ,கொத்துமல்லி சட்னி ,கறிவேப்பிலை சட்னி உடலுக்கு நல்லது

============

5 மிளகு தக்காளிக்கீரை ( கறிஞ்சிக்குட்டிக்கீரை) யில் இலைகளை ஆய்ந்த பின் அந்த சிறு சிறு காய்களை தனியாக உதிர்த்து பின் கழுவி சுண்டைக்காய் குழம்பு போல்  வைக்கலாம், உடலுக்கு நல்லது


===============


6  தினசரி  ஏதோ ஒரு கீரை உன் உணவில் இருக்கட்டும். குளிர்ச்சி. ஊரை ஒதுக்கினாலும் கீரை ஒதுக்காதே



================


  கடைந்த கீரைக்குழம்பில் நல்லெண்ணெய் சேர்த்து நீ தினம்  சாப்பிட்டால் நீ ஆரோக்யத்தின் கரையில் நிரந்தரமாய் இருப்பாய்


=================


 பூண்டு சேர்க்காமல் ரசம் வைக்க மாட்டேன் என நீ உறுதி பூண்டு இருந்தால் கொழுப்புச்சத்து உன் உடலில் தங்காது


=================

9  

தினமும் காலை /மாலை  ஒரு பூவன் பழம் ( பூம்பழம்) சாப்பிட்டால் மலச்சிக்கல் , வாழ்க்கைச்சிக்கல் இல்லாமல் உன் பொழுது கழியும்



=================


10  கோடை காலம் முழுக்க  தினமும் கோஷாப்பழம் ( தர்பூசணி) ஒரு துண்டு சாப்பிடவும், நீர்ச்சத்து , தாக நிவாரணி, சிறந்த  நோய் எதிர்ப்பு சக்தி  மூன்றும் ஒருங்கே கொண்ட ஒரே பழம்


=====================


11 புகழ் பெற்ற கலைஞர் னு நடிகர் ஜெய் யை சொல்லிட முடியார்து.புகழ் பட ஹீரோவ இருந்தும்



=============



12 கொடூரமான குற்றங்கள் புரிந்தோர்க்கு அவர்கள் எதிர்கால நலன் கருதி நீதிமன்றங்கள் அளிக்கும் சலுகைகள் தேவையற்றவை.வாழ்நாள் முழுக்க அனுபவிக்கட்டுமே,



==============



13 நெட் தமிழன் அடிக்கடி டிபி/பயோ மாத்திட்டு இருக்கற ஆளா இருந்தா ஆளையும் மாத்திடுவானாம், சைக்காலஜி மிஸ் ஷைலஜாவின் டைரியிலிருந்து

================

14  தெறி  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் கலக்கல், ஆனா இப்போ வரும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் சொதப்பல்


=============


15 ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணு துப்பட்டா போடாம சுடி மட்டும் போட்டு ஃபோட்டோ அப்டேட்டுது. நெட் தமிழன் நீங்க ரொம்ப போல்டான டைப்ங்க:ங்கறான் . அடேய் ;-)


===============


16  இயற்கை அன்னை அளித்த சிறந்த பானங்கள் 1 தண்ணீர்  2 இளநீர் 3 பதநீர் ( தெளுவு- பனை மரத்தில் இருந்து இறக்கப்பட்டு சுண்ணாம்பு  கலந்து தெளிய வைக்கப்பட்டது)


================


17  நீண்ட நாள் கெடாமல் இருக்க உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட ஊறிய காய் ஆன ஊறுகாய் எல்லாமே உடல் நலனுக்கு ஊறுவிளைவிக்கக்கூடியவை


=================



18  இயற்கைக்கு மாறாக  குளிர்சாதனப்பெட்டியில் ( ஃபிரிட்ஜ்) வைத்து  பின் உபயோகிக்கப்படும் காய்கறிகள் எல்லாமே  தன்  இயற்கை சத்தை இழந்திருக்கும், எனவே ஃபிரிட்ஜ் தவிர்ப்பீர் 

=================


19 மண் பானையில் சேமிக்கப்பட்ட நீர் தான் எந்த வித பின் விளைவும் இல்லாத ஜில் நீர்


==============



20

  தினமும் காலையில் ஒரு கேரட் பச்சையாக கடித்து சாப்பிட்டால் உன் ஆரோக்யம் , உடல் சருமம் 24 கேரட் தங்கம் போல் மின்னும். விழி ஈர்ப்பு விசை கூடும்


=================

0 comments: