Tuesday, March 01, 2016

GODS OF EGYPT - சினிமா விமர்சனம்

ஹாலிவுட் காரங்க கூட நம்ம தமிழ்நாட்டு அரசியலைப்பார்த்து திரைக்கதை எழுத ஆரம்பிச்சடறாங்க.நம்மாளுக கதை எழுதி இருந்தா  இந்நேரம் ரணகளம் ஆகி இருக்கும், சரி  என்ன கதைன்னு பார்ப்போம்

அபூர்வமான சக்தி படைத்த மன்னர் எகிப்து நாட்டை ஆண்டு வருகிறார். இவருக்கு கலைஞர் போலவே 2 மகன்கள்.

அண்ணன் (அழகிரி) க்கு  நாட்டில் பாகப்பிரிவினையும், தம்பி (ஸ்டாலினு)க்கு பாலைவனப்பகுதியையும் பிரிச்சு கொடுத்துடறார் மன்னர்.

அண்ணன் பிரமாதமா ஆட்சி புரிஞ்சுட்டு வர்றார், தம்பி பாலைவனத்தில் ரொம்ப கஷ்டப்படறார்.


கொஞ்ச காலத்துக்குப்பின் அண்ணன் தன் மகனுக்கு பட்டமளிப்பு விழா நடத்த திட்டம் இடுகிறான்.அந்த விழா நடக்கும்போது தம்பி பாலை வனத்தில் இருந்து தன் படையுடன் வந்து அண்ணனைப்போட்டுத்தள்ளிட்டு அண்ணன் என்னடா தம்பி என்னடா பதவி வெறி பிடித்த உலகத்துலேன்னு பாட்டெல்லாம் பாடாம ஆட்சி அமைக்கிறார்,


அண்ணன் மகனையும் போட்டுத்தள்ளலாம்னு பார்க்கும்போது அண்ணன் மகனோட மனைவி சத்யவான் சாவித்திரி போல் உயிர் பிச்சை கேட்குது. இரக்கப்பட்ட தம்பி அண்ணன் மகன் கண்கள் இரண்டை மட்டும் கட் பண்ணிட்டு அனுப்பறார்.

அண்ணன் மகன் எப்படி தன் ராஜ்ஜியத்தை மீட்டெடுக்கிறார் என்பதே  மிச்ச மீதிக்கதை




அம்புலிமாமா கதை போல்  இருக்கு. கிராஃபிக்ஸ் எல்லாம் நல்லாருக்கு. முன் பாதி யில் இருந்த சுவராஸ்யம் பின் பாதியில்  இல்லை.

க்ளைமாக்ஸ்  ஃபைட்  எல்லாம்  ரொம்ப  மொக்கை

ஆடை வடிவமைப்பு , லொக்கேஷன் செலக்சன் எல்லாம் கன கச்சிதம்


பின்னணி  இசை நல்லாருக்கு . குழந்தைகள் பார்க்கலாம். பொண்ணுங்க எல்லாம் படத்துல  செம லோ கட்  ஜாக் ல வர்றாங்க. அதனால் இளைஞர்களும் பார்க்கலாம்

மனதைக் கவர்ந்த  வசனங்கள்

என்னோட கெட்ட பேரை நான் தக்க வெச்சுக்கனும்
அப்போ தான் ராணி ஆக முடியும் # EGY


2 ஒரு பெண்ணைப்பார்த்ததுமே வரும் உணர்வுக்குப்பேர் காதல் இல்ல


பிரார்த்தனைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.எத்தனையோ பிரார்த்தனைகள் கவனிப்பார் இன்றி !


காற்றை உன்னால் கட்டுப்படுத்த முடியாது.ஆனால் உன் அறைக்கதவை ,ஜன்னலை சாத்தி விடலாம் # EGYPTH


5

நேர்மையான வழியில் போறவன் தான் பல சாத்தியக்கூறுகள் பற்றி சிந்திக்கனும்
குறுக்கு வழியில் போறவனுக்கு கிடைச்சவரை லாபம்


6 கடவுள் நேரில் வந்தால் கடவுளிடமே பேரம் பேசுவான் மனிதன்

7 அடைய முடியாத விஷயங்களுக்காக ஆசைப்படாதே!













சி  பி  கமெண்ட் -GODS OF EGYPT (ENGLISH) = கலைஞர்-அழகிரி-ஸ்டாலின் போல் பதவிச்சண்டை போடும் மன்னர் குடும்ப கதை.சுமார்தான்.ரேட்டிங் -2.25 / 5


ஈரோடு அண்ணாவில் படம் பார்த்தேன்



0 comments: