ஹீரோ பரோல்ல வந்திருக்கும் கைதி. ஆ ராசா மாதிரியோ , விஜய் மல்லைய்யா மாதிரியோ பெரிய திருடன் எல்லாம் இல்ல . சும்மா சுமாரான பொறுக்கி. அவர் செஞ்ச தப்புக்கு கோர்ட் கொடுத்த 2 வருச தண்டனைல இருந்து விலக்கு வாங்கிக்க ஒரு வாய்ப்பு வக்கீல் மூலமா கிடைக்குது.அதாவது 4 மாசம் பரோல்ல வந்து நல்ல காரியங்கள் எதுனா செய்யனும்
அதனால ஹீரோவை அநாதை ஆசிரமத்தில் வேலைக்கு சேர்க்கப்பார்க்கறாங்க. சரி வர்லை. அப்புறம் ஒரு பணக்காரர் வீட்ல வேலைக்கு சேர்க்கறாங்க. வீல் சேரில் எப்போதும் இருக்கும் கை கால் விளங்காதவரை பார்த்துக்கும் வேலை
அந்த கோடீஸ்வரருக்கு காதல் கோட்டை டைப்ல ஒரு பேனா நட்பு அவர் கூட காதல் மாதிரி ஒரு டிராக்
கோடீஸ்வரரோட பி ஏ தான் ஹீரோயின் அவர் கூட ஹீரோவின் காதல் இன்னொரு டிராக்
ஹீரோவோட தங்கச்சிக்கு லவ் மேரேஜ் ஹீரோ உதவியோட நடக்குது. எதுக்குமே லாயக்கில்லாதவன்னு ஹீரோவை அம்மாவே ஒதுக்கிய பின் ( அதாவது சரத்குமாரை ஜெ ஒதுக்கினது போல்) இப்டி ஒரு வாய்ப்பு கிடைச்சு தன்னை நிரூபிக்கும் ஹீரோ அந்த கோடீஸ்வரர் இவங்களை சுத்தி நடக்கும் மிச்ச மீதி சம்பவங்கள் தான் திரைக்கதை
ஹீரோவா கார்த்தி , சில பல சறுக்கல்களுக்குப்பின் ஒரு நல்ல வாய்ப்பு . தமனாவைப்பார்த்து ஜொள் விடும் காட்சிகள் இயற்கை. ( இதுக்கு சிவகுமார் என்ன சொல்லப்போறாரோ?) நக்கல் அடிக்கும் காட்சிகள் முக பாவனைகளாலே நையாண்டி இவருக்கு கை வந்த கலை.
ஹீரோயினா தமனா. ஓவர் லிப்ஸ்டிக். ஓவர் பவுடர் . மாநிறமா இருக்கும் நாம தான் பவுடர் போடறோம், நேச்சுரலாவே லெமனா இருக்கும் தமனா எதுக்கு பவுடர் போடுதோ?
நாகார்ஜூன் க்கு நல்ல கேரக்டர். வீல் சேரிலேயே அமர்ந்திருக்கும் கேரக்டர் . குட் . இது போல் கேர்க்டர்கள் சிவாஜி கணேசன் அமிதாப் பச்சன் தான் செய்திருக்கிறார்கள் சபாஷ்
நச் டயலாக்ஸ்
1 நீ இன்னும் மாறவே இல்ல
எல்லாம் உங்க கிட்டே கத்துக்கிட்டதுதான் #,தோழா
2 இந்த மாதிரி அழகான பொண்ணுங்க எங்க தான் இருப்பாளுகளோ.ரோட்ல நான் பார்த்ததே இல்லையே #,தோழா
3 இப்ப வரைக்கும் நீ அடுத்தவங்க தயவுல தான் வாழ்ந்துட்டு இருக்கியா?
எஸ் சார்.நானும் உங்களை மாதிரி தான் #தோழா
4 என் மேல இரக்கம் காட்றவங்க எனக்குத்தேவை இல்லை #தோழா
5 பொறந்தா பணக்காரன் வீட்ல பொறக்கனும், அப்பத்தான் சொந்த பந்தம் எல்லாம் தேடி வரும் #தோழா
6 பணம்கறது எப்போ வேணா யார் வேணா சம்பாதிக்கலாம், அனா குணம்? அது பொறப்புலயே இருக்கனும்,, ரத்தத்தில் கலந்து இருக்கனும் #தோழா
7 ப்ரேயர்ல சைலண்ட் ஓக்கே பார்ட்டில என்ன சார் சைலண்ட்? கலாட்டா தானே பார்ட்டி?#தோழா
8 பணக்காரங்க எப்பவும் டாக்டர் சொல்றதையோ, சாமியார் சொல்றதையோ கேட்க வேண்டிய சூழல்ல தான் இருப்பாங்க #தோழா
9 பழசை மறந்துடனும்னு ஒவ்வொரு டைமும் நாம் முயற்சிக்கும்போதுதான் அது மீண்டும் மீண்டும் நம் நினைவில் வந்து தாக்கும் $ தோழா
10 மனுசன் போகும் இடத்துக்கெல்லாம் அவன் மனசும் போய்டாது # தோழா
11 அன்பு இருக்கும் இடத்தில் பயம் இருக்கும், உண்மையில் பயம் இருக்கும் இடத்தில் காதல் இருக்கும் # தோழா
12 அழகை ஆராதிக்கனும், இல்லைன்னா அதுவே ஒரு பாவம் தான் #தோழா
13 உன்னைப்பார்த்து ஒரு பொண்ணு சிரிச்ட்டாலே பாதி மேட்டர் ஓவர் #தோழா
15 நம்ம கிட்டே அன்பு காட்டும் ஒருத்தர் இருந்தா போதும்.காசு பணம் எதுவும் தேவை இல்லை.அவங்க அருகாமை போதும் # தோழா ,த ராஜு முருகன் டயலாக்
16 உண்மையான காதல் என்பது நாம எங்கே இருந்தாலும் காதலி நல்லாருக்கனும்னு நினைப்பது.அவளுக்கு எதுனா நல்லது செய்வதே #தோழா
ட்விட்டர் தியேட்டரிக்கல் அப்டேட்ஸ்
1 ராஜூ முருகன் ன் வசனத்தில் பருத்தி வீரன் கார்த்தியின் தோழா @ திருவனந்தபுரம் அஜந்தா.11 15am
2 THE INTOUCHABLES படத்தின் அதிகாரப்பூர்வமான தழுவல் தோழா
சபாஷ் மீனா /மீனம்மா ( எல்லாரும் தெறி மீனா வோட பேபியை சிலாகிக்கும்போது நாம மீனாவோட அம்மாவை சிலாகிக்கனும் அது )
1 ஒரு மாடர்ன் ஆர்ட் ஓவியத்தை 5 லட்சம் கொடுத்து கோடீஸ்வரர் வாங்கியதும் அதே போல் ஒரு ஓவியத்தை ஹீரோ எட்க்குதப்பாக வரைவது
2 பிர்காஷ் ராஜ் அந்த கேவலமான ஓவியத்தை சிலாகிப்பது 2 லட்சத்துக்கு வாங்குவது பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஹீரோ தான் வரைந்த ஓவியம்தான் என உண்மையை சொன்னதும் அதிர்வது
3 ஹீரோவின் தங்கைக்கு நிகழும் மேரேஜ் செண்ட்டிமெண்ட் சீன்
4 பாரீஸ் டூர் போனபோது மிடி போட்ட தமனா வை லோ ஆங்கிளில் தரையில் படுத்து ஈபிள் டவரை ஹீரோ ஃபோட்டோ எடுக்க முற்படும்போது தமனா பதறும் சீன்
5 குக்கூ இயக்குநர் ராஜூ முருகனின் வசனங்கள் நச் . ஷார்ப்
6 பாரீசில் வரும் அந்த அனிரூத் தனுஷ் டைப் கே லவ் ஸ்டோரி செம காமெடி
பல்பு பகவதி
1 கோடீஸ்வரரான நாகார்ஜூன் அவரை கவனிச்சுக்க ஒரு நர்சையோ அல்லது டாக்டரையோதானே அருகில் எப்பவும் வெச்சுக்கனும்? அடிக்கடி ப்ரீத்திங் ட்ரபுள் வேற. ஒவ்வொரு டைமும் ஹீரோ ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டுப்போறதுக்கு டாக்டர் டீமே அவர் பங்களாவில் இருந்தா என்ன?
2 நாகார்ஜூன் க்கு ப்ரீத்திங் ட்ரபுள் வரும்போது ஆடியன்சுக்கு ஒரு பதட்டமே வர்லை. தமிழ் இனத்தின் தன்னிகரற்ற தலைவர் டாக்டர் கலைஞர் உண்ணாவிரதம் அறிவிச்சா எப்படியும் 4 ம்ணி நேரத்தில் வாபஸ் வாங்கிட்டு சாப்ட்டுருவார்னு ஒரு அசால்ட் வருமே அது போல் எப்டியும் அவர் தப்பிடுவார்னு பதட்டமே வர்லை அது திரைக்கதையில் மைனஸ்
3 பின் பாதியில் கதை பாரீசுக்குப்போனதும் திரைக்கதை படுத்துக்குது. தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்கள் ஃபாரீனில் சம்பவம் / கதை நடந்தால் அது போர் அடிக்க ஆரம்பிச்சிடும்
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு யூக மதிப்பெண் = 41
த தமிழ் ஹிந்து யூக ரேட்டிங் = 2. 75 / 5
குமுதம் யூக ரேட்டிங் = ஓக்கே
பி சி செண்ட்டர்களில் சுமாரா தான் போகும். ஏ செண்ட்டர்கள்ல கொஞ்சம் நல்லாப்போகும்
சி பி கமெண்ட் - தோழா - ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கான ஃபீல் குட் மூவி . ஃபேமிலி எண்ட்டர்டெய்னர் - விகடன் மார்க் 41 ( யூகம் ) ரேட்டிங் = 2.75 / 5
0 comments:
Post a Comment