1 டாக்டர்.டெய்லி லேப்டாப்பை மடில வெச்சு ஒர்க் பண்றேன்.எனக்கு ஏதாவது ஆகுமா?
எதுவுமே ஆகாது.சாரி
===========
2 மாப்ளை மிருதுவான டைப்னீங்க.பொண்ணோட கையைப்பிடிச்சு கடிச்சு வெச்ட்டாராமே?
நீங்க.சரியாப்புரிஞ்சுக்கலை.மிருதன் டைப்ங்க அவரு
=============
3 திராவிடக்கட்சிகளுடன் கூட்டு கிடையாதுனு பரவலா பேச்சு வருதே தலைவரே?நிஜமா?
நான் தான்யா பரப்பி விட்டேன்.அப்போ தான் பேரம் படியும்..500 கோடி, துணை முதல்வர் போஸ்ட்
============
4 ஃப்ரீடம் இண்டியா Rs.251 செல் பதிவு செய்தீரா?"
சதுரங்க வேட்டை படம் பாத்துட்டேன் சார்
============
5 நம் அரசியல் முறையில் என்ன மாற்றம் வேண்டும்?
ஆண்டாண்டு காலமா தமிழன் ரெண்டே ஆப்சன்ல மாத்தி மாத்தி குத்திட்டு இருக்கான்,அது மாறனும்
================
6 ஜாதிக்கட்சிகளை ஏன் ஆதரிக்கக்கூடாது?ன்னு சொல்றீங்க?
ஊழல் கட்சி, ஆணவக்கட்சி இந்த இரண்டு கட்சிகளை விட ஆபத்தானது ஜாதிக்கட்சி
================
7 சம்சாரம் கோபத்துல கடுகு மாதிரி பொரியும்போது என்ன செய்யனும்?
கொதி எண்ணெயில் கடுகு பொரியும்போது அடுப்பைவிட்டு விலகி இருப்பதுபோல் அப்போதைக்கு வீட்டை விட்டு கிளம்பிடனும்
================
8 ஆஃபீஸ்க்கு டெய்லிலேட்டா வர்றியே? உன் வீட்டுக்கு உள்ளேயே ஆஃபீஸ் வெச்சாலாவது கரெக்ட்டைம்க்கு வருவியா?
2 வீடு இருக்கு, எந்த வீட்டுக்கு உள்ளே
==============
9 மாப்ளை, என் பொண்ணு கொஞ்சம் மக்குப்பொண்ணு, நீங்க தான் அட்ஜஸ் பண்ணிக்கனும்
மாமா, இப்போதைக்கு கூட்டணில சேர்த்துக்கறேன்
===============
10 தப்பே பண்ணலை, ஆனா தண்டனை அனுபவிக்கறேன்
எப்டி?
லவ் பண்றப்ப காதலி கூட எந்த தப்பும் பண்ணலை, ஆனாலும் அவளையே கட்டி வெச்ட்டாங்க
====================
11 யாரையாவது அறையலாம் போல இருக்கு
மிஸ்!உங்க ஹாஸ்டல் ரூம் மேட் பக்கத்துல தானே இருக்கு? அறை த்தோழிக்கு அறை கொடுங்க, மேட்சுக்கு மேட்ச்
===================
12 மாங்குமாங்கென தேவையில்லாத வேலைகளைச் செஞ்சிட்டு இருக்கேன்
டியர், மாங்கா சாதம் கழறிக்கொடு, மாங்கு மாங்குன்னு சாப்பிடுவாங்க எல்லாரும்
================
13 என்னை நான் விரும்பாத பொழுது. . .
நீ எப்டி விரும்புகிறாய் என்னை?!?
டியர், உனக்கு கொலஸ்ட்ரால் ஜாஸ்தி, எண்ணெய் சேர்த்தக்கூடாது,நான் அப்டியா?
=================
14 தலைவரே! லிஸ்ட்ல நீங்க தான் டாப்ல இருக்கீங்க! வாழ்த்துகள்
நன்றி! என்ன லிஸ்ட்?
சட்டசபைல கேள்வி கேட்காதோர் பட்டியலில் நீங்க முதல்இடம்
=============
15 தலைவரே! நம்ம கட்சிக்கு நக்மா,குஷ்பூவால ஆதாயம் இருக்குமா?
“மேட்டுக்குடி” மக்கள் வாக்கு நக்மாவால, பழங்குடி மக்கள் வாக்கு குஷ்பூவால கிடைக்கும்
==================
16 மிஸ்! உங்க வீட்டு ஏரியாவை விட்டு ஒரு அடி கூட ஸ்கிப் பண்ண முடியல
ஏன்?
மொட்டை மாடில நின்னு ஸ்கிப்(பிங்க்) பண்ணிட்டு இருக்கீங்களே?
================
17 பஸ்ல ஒரு லேடி என் தோள் மீது தூங்கி விழும்போது அன்னை தெரேசாவா மாறிடறேன்
மிஸ்! நல்லா செக் பண்ணிப்பாருங்க,..அது பையனாத்தான் இருக்கும், மாறு வேசத்தில் வந்திருப்பான் உங்களை கேத்ரீன்தெரேசாவா திங்க் பண்ணிட்டு இருக்கப்போறான்
================
18 ஆதி+ ரஜினி = ஜெயம் ரவி.
எப்டி?புரியலையே?
மிருகம் + மனிதன் = மிருதன்
==============
19 டாக்டர்.காய்ச்சல் 100 டிகிரி தாண்டிடுச்சு.குறைக்க எதுனா வழி இருக்கா?
சாரு வின் ஜீரோ டிகிரி படிச்சுப்பாருங்க.
=============
20 வாழ்க்கை போர் அடிக்குது.
ஓஹோ.நீ சிக்சர் அடிச்சுப்பாரு
===================
0 comments:
Post a Comment