Friday, March 18, 2016

புகழ் - சினிமா விமர்சனம்

ஹீரோ பூக்கடை வெச்சிருக்காரு. சமூக சேவகர். கிரிக்கெட் பிளேயர். ஹீரோவோட ஃபிரண்ட் நம்ம விஜய் மல்லைய்யா மாதிரி  ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு ஊரை விட்டு ஓடிப்போய்டறார்.ஹீரோ வை கோ மாதிரி சமாதானப்பேச்சு பேசி அவரை  ஊருக்குக்கூட்டிட்டு வர்றாரு அவர் தான் தனக்கு வில்லன் ஆகப்போறார்னு தெரியாம... 


ஹீரோ அண்ட் கோ கிரிக்கெட் ஆடும் கிரவுண்டை அரசியல்வாதிங்க வளைச்சுப்போட ஐடியா பண்றாங்க, பொதுவா அரசியல்வாதிங்கன்னா அவங்க கண்ணில் படும் சொப்பன சுந்தரியை வளைச்சுப்போடுவானுங்க. இல்லைன்னா பொறம்போக்கு நிலத்தை வளைச்சுப்போடும் பொறம்போக்குப்பசங்க தானே?


 ஹீரோவுக்கு ஊர்ல அவர் இருக்கும் ஏரியாவில்  இருக்கும் செல்வாக்கு பார்த்து அவரை வளைச்சுப்போட லோக்கல் அரசியல்வாதி ஐடியா பண்றாரு. எப்படி தானைத்தலைவர் கேவலம் 8% வாக்கு வங்கிக்காக தன்னை  தன் கட்சியை கேவலமாப்பேசிய கேப்டன் பின்னால கூச்சமே இல்லாம பிச்சை எடுத்தாரோ அப்படி


 ஆனா ஹீரோ வுக்கு அரசியலுக்கு வர  ஐடியா இல்லை. அவர் சார்பா அந்த கடன் கார நாய் விஜய் மல்லைய்யா மாதிரி உருப்படாம போன நண்பனை வளைச்சுப்போட்டு  பாலிடிக்ஸ் பண்றார்.

அந்த  கிரிக்கெட் கிரவுண்டை வளைச்சுப்போட்டாங்களா? இல்லையா? என்பதுதான் மிச்ச மீதிக்கதை


 ஹீரோவா ஜெய். அவரது  குரல் முதல் பிளஸ் பாயிண்ட்.இயல்பான நடிப்பு , டயலாக் டெலிவரி மற்ற  பிளஸ்கள். நல்லா பண்ணி  இருக்கார்.ஹீரோயினுடனான காதல் போர்சனில் அண்டர்ப்ளே பண்ணி இருந்தாலும்   ஆக்சன் பேக்கேஜில் தூள் கிளப்பி இருக்கார் 



ஹீரோயினா சுரபி . ஃபிகரைப்பார்த்ததுமே ஜொள் சுரக்கும் அளவு பக்கா ஃபிகர் இல்லை என்றாலும் 60 வயசு ஆளையும் மயக்கும் 60 மார்க்  ஃபிகர் தான்.ஏற்கனவே சன்னமாக இருக்கும் அவரது புருவத்தை  பியூட்டி பார்லர் போய் மேலும் சன்னமாக ட்ரிம் பண்ணி இருப்பது பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது ( தமிழன் எதெதுக்குதான்  ஜெர்க் ஆவான்னு விவஸ்தை  இல்லாம போச்சு)


காமெடிக்கு ரேடியோ ஜாக்கி பாலாஜி. ஒன் லைனர்களில் இன்னும் காமெடி சென்ஸ் தேவை. ஆனால் டயலாக் டெலிவரி எல்லாம் பக்கா டெவலப். தொடர்ந்து முயற்சித்தால் சந்தானம் ரேஞ்சுக்கு வரலாம்


பாடல் காட்சிகளில்  ஒளிப்பதிவு  இசை  எல்லாம் கன கச்சிதம்.ஓப்பனிங்  சாங் ,டூயட் சாங்  என மாறுபட்ட இரு பாடல்களிலும்  ஹிட் கொடுத்திருக்கார்  இசை அமைப்பாளர்/



வில்லனாக  வரும் இருவரும் கனக்ச்சிதம். அதுவும்  லோக்கல்  சேர்மேன் நடிப்பி பக்கா. அப்படியே சுயநல  அரசியல் வாதியை கண் முன் நிறுத்துகிறார்


கருணாஸ்  கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.  அந்த  சேர்மேன் வில்லனின் மனைவியாக வரும் ஆண்ட்டி கூட கவனிக்க வைக்கிறார் ( நாம யாரைத்தான் கவனிக்காம விட்டோம்?)


கதை  திரைக்கதை இயக்கம் மணிமாறன். நல்ல கிரிஸ்ப் ஆன  திரைக்கதை.மிக எளிமையா சொல்லப்பட்ட விதம்  குட்


மனதைக் கவர்ந்த  வசனங்கள்

மச்சி.மாப்பிக்கு போன் போட்டு பாண்டிச்சேரி போறோம்னு சொல்லு.சரக்குன்னா உடனே வந்துடுவான்

2  அரசியல்வாதிக கூட்டம் போடறதே ஒயின்.ஷாப் போகத்தான்


அவ கிட்டே வம்பு வெச்சுக்காத.நம்ம ஏரியா கலா மாஸ்டரே அவதான் # புகழ்

4 பொதுப்பிரச்சனையைப்பத்தி பேசுனா ,அநியாயத்தை தட்டிக்கேட்டா நம்மை பைத்தியக்காரன் பட்டம் தந்து உட்கார வெச்சுடறாங்க

5  அரசியல்வாதி ஆகிட்டா நல்லதோ கெட்டதோ நம்மைப்பத்தி எதுனா நியூஸ் வந்துட்டே இருக்கனும்


6  எப்போப்பாரு எம் ஜி ஆர் பாட்டையே கேட்டுட்டு இருந்தா எப்டி? ஜெமினி கணேசன் பாட்டையும் கேளு அப்பப்போ

7  எல்லாப்பொண்ணுங்களும்  தைரியமான ஆம்பளையத்தான்  விரும்புவாங்க.நானும் அதுக்கு விதிவிலக்கு இல்ல

8 மண்ணுக்குள்ளே இருக்கும் கரி கூட வைரமா வெளிப்படுது. இந்த மண்ணுலயே பிறந்து வளர்ந்த நாம சோரம் போனா எப்டி?



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

வள்ளுவர் வாக்குப்படிதான் கட் அடிச்ட்டு சினிமாக்குப்போனியா?எப்டி?

தோன்றின் புகழோடு தோன்றுக ன்னாரு # புகழ் த பொலிடிக்கல் ஆக்சன் த்ரில்லர்


2 புகழ் =126 நிமிடங்கள் @ திருவனந்தபுரம் தேவிப்ரியா 11 am ஷோ



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  ஹீரோ ஹீரோயின் இடையே ஆன  கெமிஸ்ட்ரி  குட். நெருக்கமே காட்டாத நெருக்கம் அடடே

2  ஹீரோவின் அண்ணனாக வரும் கருணாஸ் படம் பூரா ஹீரோவுக்கு எதிராக வசனம் பேசிட்டு ஒரு  தருணத்தில் ஹீரோவுக்கு ஆதர்வாக வில்லனுக்கு எதிராக வசனம் பேசும்  இடம்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 சொந்த ஊரில் ரெகுலராக கிரிக்கெட் விளையாண்டும்  கிரவுண்டில்  அரசியல்வாதி ஆக்ரமிப்பு செய்து கட்டிடம் கட்டியது ஹீரோவுக்கு தெரியாம எப்ப்டி இருக்கும்?


2 ஹீரோவின் ஃபிரண்ட் வட்டிக்கு வாங்கின கடன் பற்றிய பஞ்சாயத்தில் 2 லட்சம் ரூபா வட்டியா? அதெல்லாம் கட்ட முடியாது என ஹீரோ எப்படி சொல்ல முடியும்? அதிக வட்டி கூடாது குறைச்சுக்கொன்னு சொல்லலாம். சுத்தமா வட்டியே கட்ட மாட்டேன்னா எப்டி?பேங்க்லயே 0.80 % வட்டி வாங்கறாங்க


3 ஒரு சாதாரண வார்டு மெம்பரை பெரிய பெரிய ஆட்கள் வந்து  மிரட்டுவது நம்பும்படி  இல்லை




சி  பி  கமெண்ட் -புகழ் - யதார்த்தம்  மீறாத , ஹீரோயிசம் காட்டாத பொலிடிகல் ஆக்சன் ஃபிலிம் , ஹீரோயின் சுரபி சைட்டோதெரபி -விகடன் -41 , ரேட்டிங் = 2.75/ 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே



 ரேட்டிங் =  2.75 / 5



0 comments: