Friday, March 25, 2016

ஜீரோ - சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் த்ரில்லர் வகையறா, சைக்கோ த்ரில்லர் , கோஸ்ட் த்ரில்லர் ,லவ் த்ரில்லர் , ரேப் த்ரில்லர் (!!!??) என பல வகைப்பட்ட த்ரில்லர் பார்த்து ரசித்த ரசிக மகா ஜனங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைத்தரக்காத்திருக்கும் படம் தான் ஜீரோ


படத்தோட கதைக்கும், விமர்சனத்துக்கும் போவதற்கு முன் ஹீரோயின் கேரக்டரான க்ளப்டோமேனியா பற்றி ஒரு பேரா பார்ப்போம்.

ஏகப்பட்ட வாரிசுகள் உள்ள தலைவர்கள் தான் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கறாங்கன்னா வாரிசே இல்லாத தலைவிகள் கூட தன் தோழிக்காக நாட்டு மக்களின் செல்வத்தை தெரிஞ்சே கொள்ளை அடிக்கறாங்க.இதே ஒரு செல்வச்சீமாட்டி தன்னையும் அறியாம அடுத்தவங்க பொருளை திருடி வெச்சுக்கிடற வியாதிக்குப்பேரு கிளப்டோமேனியா ( இதுதான் சாக்குன்னு கர்நாடகா கோர்ட்ல போய் எனக்கு வித்தியாசமான கிளப்டோமேனியா வியாதி இருக்கு, அதனாலதான் நாட்டு மக்கள் பணத்தை திருடுனேன்னு வாதிட முடியாது.)

சுருக்கமாச்சொல்லனும்னா தெரிஞ்சே திருடுனா அது சொத்துக்குவிப்பு, தெரியாம திருடுனா கிளப்டோ மேனியா


ஹீரோ ஒரு சமூக சேவகர் . அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்றார்?னு குறுக்குக்கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. ஹீரோவோட அப்பா பெரிய பணக்காரர். ஹீரோ ஒரு பெண்ணை லவ்வறார். அது அப்பாவுக்குப்பிடிக்கலை. அதனால ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு தனி பங்களாவில் தம்பதி வசிச்சு வர்றாங்க


ஷாப்பிங் போகும்போது அந்த காம்ப்ளெக்ஸ்ல ஹீரோயின் ஒரு வீணாப்போன லிப்ஸ்டிக்கை திருடுது. மாட்டிக்குது. என்னையா திருடின்னு சொன்னே?னு பல்லைக்கடிக்குது. அவரோட திடீர் மாற்றத்துக்குக்காரணம் என்ன?

ஹீரோயினோட அம்மா மாசமா இருக்கும்போது மனநிலை பிறழ்ந்ததால ஹீரோயினோட அப்பா அம்மாவை விட்டுட்டு ஓடிடறார் ( இந்தக்காலத்துல நல்ல சம்சாரத்தை வெச்சே காலம் தள்ள முடியலை . லூஸை வெச்சு குப்பை கொட்ட முடியுமா?)


ஹீரோயினுக்கு அடிக்கடி செத்துப்போன தன் அம்மா தன்னை அவங்க உலகத்துக்கு கூப்பிடுவது போல் இருக்கு.ஆஹா ,மாயா படக்கதை போல என நினைச்சா அந்த நினைப்பில் மண். தேவதை , இரண்டாம் உலகம் படம் போல இருக்குமோ?

ஒரு நாள் ஹீரோயின் தனியா இருக்கும்போது ஹீரோ வர்றாரு. அவர் கூட பேசிட்டு இருக்கும்போது ஹீரோ கிட்டே இருந்து ஃபோன். சிலீர்னு இருக்கா? அப்போ இந்த ஆள் யார்? ( இந்திரன் ஒரு முனிவரின் சம்சாரத்தைக் கரெக்ட் பண்ண அந்த முனிவர் வேடத்தில் போய் கில்மா முடிச்ட்டு வர்ற மாதிரி )

இது ஹீரோயின் பிரமையா-னு யோசிச்சுட்டு இருக்கும்போது நிஜமான ஹீரோ அங்கே வர்றார். என்னை தொட முடியாதுன்னு கத்திட்டே ஹீரோயின் கத்தியால ஹீரோ நெஞ்சுல குத்திடுது ( கத்தி - விஜய் ரெஃப்ரன்ஸ்)

இடை வேளை

ஹீரோயின் சைக்கோவா? ஹீரோ சைக்கோவா? படம் பார்க்கும் ஆடியன்ஸ் சைக்கோவா?ன்னு நம்ம எல்லா குழப்பங்களுக்கும் பின் பாதியில் மாறுபட்ட பூர்வ ஜென்ம பேய்க்கதை வருது, அதை சொன்னா சுவராஸ்யம் போய்டும் . மீதி வெண் திரையில் காண்க


ஹீரோவா அஸ்வின். அற்புதமான நடிப்பு, ஓப்பனிங்கில் ஹீரோயினிடம் ரொமான்ஸ் , அப்பாவுடன் பாசம் , பேயைக்கண்டு மிரள்வது , சைக்கோ குழப்பங்களில் மிரட்சி என சிக்சர் ஆக்டிங்


ஹீரோயின் ஷிவ்தா. இவங்களும் செம ஆக்டிங் தான் . ஆனா ஹீரோவை விட அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டும் இன்னும் பிரமாதப்படுத்தி இருக்க வேண்டிய கேரக்டரை நழுவ விட்டுடுச்சு.


ஹீரோயின் அம்மாவா வரும் நடிகை நல்ல தேர்வு. அவங்க முகம் மாறுவது , மிரட்டல் நடிப்பு

சைக்கோ தெரஃபிஸ்ட்டா வரும் சக்ரவர்த்தி சிகப்பு ரோஜாக்கள் கமல் சாயலில் வர்றார். ( இந்தப்படத்துக்கும் சிகப்புரோஜாக்கள் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை )


ஹீரோவின் அப்பா கேரக்டர் அமைதியான நடிப்பு சபாஷ் .


இசை அற்புதம் . ஆனால் பின்னணி இசையில் இன்னும் கலக்கி இருக்கலாம். ரொம்பவே அடக்கி வாசித்தது போல் தோணுது/.
ஒளிப்பதிவு , எடிட்டிங்க் எல்லாம் வேற லெவல்


சபாஷ் மீனா

1 முன் பாதி சைக்கோ த்ரில்லர் பின் பாதி ரொமாண்டிக் த்ரில்லர் + முன் ஜென்மக்காதல் என வித்தியாசமான விறுவிறுப்பான திரைக்கதை அமைத்த விதம்

2 போஸ்டர் டிசைன் , டைட்டில் அட்ராக்சன் , ட்ரெய்லர் வெளியீடு என கவனம் ஈர்த்த வகை அருமை

3 க்ளைமாக்ஸில் பாகம் 2 வருவதற்கான முகாந்திரம் சொன்னது’


4 க்ளைமாக்ஸுக்கு 15 நிமிசம் முன் டைட்டிலில் படம் இன்னும் 15 நிமிசம் இருக்கு என எழுத்துக்களை ஓட விட்டது


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 சக்ரவர்த்தி ஏன் கூலிங்க் கிளாஸ் போட்டே நைட்டைமிலும் வர்றார்?


2 கார் அப்பளம் போல் நொறுங்கிடுச்சு என ஹீரோவின் அப்பா டயலாக் சொல்றார். ஆனா விஷூவலா காட்டும் போது கார் லாரியில் அடிபட்டு முன் பக்கம் மட்டும் சேதம் ஆகி இருக்கு அவ்ளோவ் தான்

3 பின் பாதியில் அந்த செக்யூரிட்டி “ உங்க சம்சாரம் நீங்க இல்லாதப்ப அடிக்கடி இந்த் ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் வந்து பொருட்களை திருடிட்டு போகுது ” என சொல்வது முரண். 2வது டைமே உஷார் ஆகி கடைக்கு உள்ளேயே விடாம துரத்தி விட்டிருக்கலாமே?

4 ஹீரோயினால் கர்ப்பம் ஆக முடியாது கர்ப்பப்பை வீக் என்ற மேட்டர் அந்த தீய சக்திக்கு எப்படி தெரியாம போச்சு?




தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1 ஹீரோயின் புரியாத புதிர் ரகுவரன் போல் சைக்கோ கேரக்டர்.குட் ஓப்பனிங் #0 

2 } 2 காலேஜ் பசங்க 4 பொண்ணுங்களைத்தள்ளிட்டு தியேட்டர் வந்திருக்கானுங்க.யாரோட ஜோடி யார்னு கண்டு பிடிக்க பிஹெச்டி முடிச்சிருக்கனும் போல

3 }த்ரில்லர் மூவிக்கு பிஜிஎம் போடறவங்க முன்னோடி த்ரில்லர்கள் 4 மொழிகளில் தலா 1 பெஸ்ட் த்ரில்லர் பார்க்கனும்

4 வித்தியாசமான ரொமாண்டிக் த்ரில்லர் “ஜீரோ” மாலை 4.30 PM ஷோ @ திருவனந்தபுரம் ஏரீஸ் பிளக்ஸ் ஸ்க்ரீன் 2

5 முன் பாதி 70 நிமிடங்கள் விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர்.வெல்டன் டைரக்டர். # ஜீரோ இடை வேளை


சி பி கமெண்ட் - ஜீரோ - முற்றிலும் புதிய திரைக்கதை.யூகிக்க முடியாத திருப்பங்கள். க்ளப்டோமேனியா சைக்கோயிச கோஸ்ட் த்ரில்லர்.விகடன்=43 ,ரேட்டிங் = 3 / 5

திருவனந்த புரம் ஏரீஸ்பிளக்ஸ் ஸ்க்ரீன் 2 வில் படம் பார்த்தேன்

0 comments: