Thursday, March 24, 2016

காளி அம்மனுக்குப்பிடித்த பூ காளிபிளவர்?

தனி மனிதராக நல்ல பெயர் எடுத்திருந்தாலும் உங்க்ள் மேல் விழுந்து விட்ட ஒரு எதிர்மறை இமேஜ் உங்களை முன்னேற விடாது #,உதா =வை கோ,அன்புமணி


============



2 லீப் வருசத்தில் பிப்ரவரி 29ல் பிறந்த ஃபிகரை லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா 4 வருசத்துக்கு ஒரு வாட்டிதான் பர்த்டே கிஃப்ட் செலவு.எப்பூடி?




================

3 நீங்க சைவமா இருந்து உங்க சொந்த சம்சாரம் அசைவமா இருந்தா சண்டே மாமியார் வீட்டுக்கு அனுப்பிடலாம், செலவும் மிச்சம், சல்லை இல்லை, கல் 1 மாங்கா 2




===============




4 திமுக சார்பில் ் ஸ்டாலின்


தேமுதிக சார்பில் ் பிரேமலதா
முன்னிலைப்படுத்தப்பட்டால் அந்தந்த கட்சியின் வாக்கு சதவீதம் 5% உயரும்்



=============

5 அரசியல் வாழ்விலும் , அந்தரங்க வாழ்விலும் பலவீனமாக இருப்பவர்கள் கூட்டணி/துணை தேடுகிறார்கள்,மனோபலத்துடன் இருப்பவர்கள் தனியாக சாதிக்கிறார்கள்

=============


6 விழிப்புணர்வு என்பது அதிகாலை விழிப்புணர்வு என்னும் பிள்ளையார் சுழியுடன் துவங்குகிறது


===============

7 காலை உணவை தவிர்த்து பட்டினி யாக இருந்தால் உடலை மெலிய வைக்கலாம் என்பது தவறான கோட்பாடு.உடல் நலம் கெட்ட பின் போடாதே கூப்பாடு



=============



8 மேலாளருடன் தினம் பேசுவது ஆயாசத்தை தருகிறது"

FEMALEலாளருடன் எப்போது என்ன பேசினாலும் பாயாசத்தைத்தருகிறது


==========


9 காளி அம்மனுக்குப்பிடித்த பூ காளிபிளவர் என நினைப்பதும் அறியாமையே!


=============



10 தினம் தினம் பார்க்கும்போதும் கன்னிப்பெண் போலவே கண்ணுக்குத்தெரிபவர் தான் நித்ய கன்னி





================



11 எந்தவிதமான பின்னணியும் இல்லாம சினிமால பெரிய ஆளுங்க ஆனவங்க இருக்கலாம்.ஆனா பின்னணி.இசை இல்லாம மாஸ் ஹீரோ ஆனவங்க யாரும் இல்லை



============

12 மோடி யும் லேடியும 1,நமக்கு எந்த வகையிலாவது செலவு வெச்சிடுவாங்க #,பட்ஜெட்


==========

13 எந்தத்தொகுதியில் சசிகலா போட்டியிட்டாலும் படு தோல்வி அடையச்செய்வீர்.சசிகலா ஜெயிப்பது கட்சிக்கு ஆட்சிக்கு கேடு

=============

14 டார்கெட்டை முன் கூட்டியே அடைந்து விட்டால் அடுத்த மாதம் அதீத இலக்கு நிர்ணயிக்கப்படும் என்பதால் உன் திறமையை அடக்கி வை # ஆபீஸ் ரூல்


============

15 இன்சென்ட்டிவ் ஸ்லாப் என்பது அடைய முடியாத இலக்கைத்தாண்டி அமைக்கப்படும் #,ஆபீஸ் ரூல்

=============

16 பொண்ணுங்க எல்லாம் அவங்களுக்குள்ளே டார்லூ மோர்லூ-ன்னு கொஞ்சிக்கறாங்க, நாம தயிர்சாதம் சாப்ட்டுட்டு டிஃபன் பாக்சை கழுவி வைக்கவேண்டியதுதான்


=============

17 வேலைக்குப்போகலாமா? சொந்தத்தொழில் செய்யலாமா? என குழப்பம் வந்தால் முதலில் வேலைக்குப்போய்க்கொண்டே பகுதி நேர சொந்தத்தொழில் செய்!# முன்னோட்டம்


===============


18 வாசகிகளை கரெக்ட் செய்வதில் டாப் 2 எழுத்தாளர்கள்
1 சாரு நிவேதிதா ( வாசகர்களையும் )
2 பாலகுமாரன் ( வயசான பின்பும் )


============

19 உன் உயர் அதிகாரியை விட நீ அதிக இன்சென்ட்டிவ் வாங்கினால் அதை அவரிடம் சொல்லாதே! அடுத்த மாசம் சம்பளமே வாங்க மாட்டாய்! # ஆஃபீஸ் ரூல்

==============


20 சிபாரிசு செய்யும் அதிகாரம் உனக்கு இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு பெண்ணுக்கும் சிபாரிசு செய்து உன் ஆஃபீசில் வேலை வாங்கித்தராதே!பலபாதிப்பு

===================

0 comments: