1 கேப்டன் = கடவுளே! தேர்தல்ல யார் கூட கூட்டணி வைக்கட்டும்?
போன தேர்தல்ல ஆண்டவனுடன் கூட்டணின்னு சொல்லி என்னையே ஏமாத்துனியே?
===============
2 தலைவரே! மாநாட்டில் நடிகை ரகசியா எங்கே?
யோவ், நல்லா படி. ரகசிய ஏற்பாடு அது. ரகசியா ஏற்பாடுன்னு கூப்பாடு போடாத
===============
3 டாக்டர்.கைக்குத்தல் அரிசி நன்மையா? தீமையா?
கை சின்னத்தால நாட்டுக்கு தீமை.ஆனா கைக்குத்தல் அரிசி நன்மை
=========
4 டியர்! குறும்புகளை குத்தகைக்கு எடுத்தவனின் மொத்த உருவம் நீன்னு சொல்றாங்களே நிஜமா?
குறும்புப்பட டிவிடியை லீசுக்கு எடுத்து வாடகைக்கு விடறேன்
=============
5 சார்!நீங்க எப்பவும் பொண்ணுங்களைத்திட்டிட்டே இருக்கீங்களே ஏன்?
எல்லாரையும் திட்டமாட்டேனே? சொந்த சம்சாரம், மாமியார், அவங்கவீட்டுசொந்தம் இப்டி
===========
6 டியர், என் மூக்குத்திக்கு என் மூக்கு அழகா? என் மூக்குக்கு இந்த மூக்குத்தி அழகா?
அதெல்லாம் தெரில. 2 பவுன் தேறும் போல, அவசரம்னா அடமானம்
=================
7 சார்! எதுக்காக இயக்குநர் சேரன் படத்துல நடிக்கனும்னு நினைக்கறீங்க?
அவர் மட்டும் சோழர் படத்தில் நடிக்கறாரே?
===============
8 காலேஜ்ல இருந்து வர ஏம்மா லேட்?
சைக்கிள் டெஸ்ட்ம்மா
சைக்கிள் டெஸ்ட்னா சைக்கிள் ஓட்டச்சொல்வாங்களா? உனக்கு ஸ்கூட்டியே ஒழுங்கா ஓட்டத்தெரியாதே?
==================
9 மம்மி, ஜாகிங்க் பேண்ட்டை கிரவுண்ட்லயே வெச்ட்டு வந்துட்டேன்
நல்லவேளை, கொலுசை கழட்டலையே?
அதை அந்த பேண்டுக்குள்ளே வெச்ட்டேன்
===================
10 பொண்ணு பார்க்க வந்த மாப்ளை கிட்டே 251 ரூபா வசூல் பண்றாங்களே எதுக்கு?
ஸ்மார்ட்டா இல்லை பொண்ணுன்னாராம்,ஸ்மார்ட் ஃபோன் சார்ஜ் வசூல்டு
=================
11 என் பைக்கை பொண்டாட்டியைப்பார்த்துக்கற மாதிரி பார்த்துக்குவேன்
ஓஹோ, அப்போ ஸ்கூட்டியை மச்சினியைப்பார்த்துக்கற மாதிரி பார்த்துக்குவியா?
==================
12 டாக்டர்!டெய்லி 7 பேரீட்சைப்பழம், ஒரு செவ்வாழை சாப்பிட்டா என்ன ஆகும்?
இது கூடத்தெரியலையா செவ்வாழ?மாசம் 210 பேரீட்சை,30 பழம் செலவாகும்
==================
13 பொருளாதார ஸ்திரத்தன்மை/வளர்ச்சிக்கு அதிகம் துணை புரிவது சேமிப்பா, பணப் புழக்கமா?
ஏழைகளின் சேமிப்பு , பணக்காரர்களின் பணப்புழக்கம்
==================
14 சார், உங்க பட டீசர் பார்த்தேன். அப்டியே ஒரு இச் கொடுத்தேன்
அடடா! மிஸ்! டீசர்க்கு (இ)ச் கொடுத்தா அது டீச்சர் ஆகிடுமே?
================
15 திருடனுக்கு தேள் கொட்டினால் அது திருடனைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.
ஏன்? கொட்டின தேளுக்குத்தெரியுமே?
================
16 நான் குடிக்க மாட்டேன்னு எல்லோருக்கும் தெரியுமே"
ஆனா பொய் சொல்வீங்கன்னு யாருக்கும் தெரியாதே தலைவரே!
================
17 குருவே! யானைக்கு ஏன் மதம் பிடிக்குது?
6 அறிவு மனுசனுக்கே மதம்/மதவெறி பிடிக்கும்போது 5,அறிவு ஜீவனுக்கு மதம் பிடிக்காதா?
==============
18 அப்பா.ரவுடித்தனம்னா என்னன்னே தெரியாதுன்னு சொல்லிட்டேன்.எப்பூடி?
வெரிகுட்.தலைவன் ஆவதற்கான முதல் தகுதி மக்களை பொய் சொல்லி நம்ப.வைப்பது
==================
19 மேடம்.எதனால DMKவை விட்டு வெளில போனீங்க?
பிடிக்கலை.
இப்போ திமுகவுக்கு ஆதரவா வாக்கு எப்டி கேப்பீங்க?
நரம்பில்லா நாக்கு.எப்டி வேணாலும் பேசும்
===========
20 தலைவரே! உங்களை ஊழல் வாதி ன்னு ஒரு கோர்ட்ல கூட நிரூபிக்க முடியலையே ஏன்?
நான் தான் அரசியல்வாதினு நிரூபிச்சடறேனே?
===============
0 comments:
Post a Comment