1 மிஸ் ஆரோக்ய மேரி.ஐ லவ் யூ.
ஓ.என் கிட்டே எது உங்களைக்கவர்ந்தது ?
எதும் இல்ல.யாராவது கேட்டா ஆரோக்யத்துடன் வாழறேன்னு சொல்லலாமே?
===========
2 சிம்ப்ளிசிட்டி சினிமா ஹீரோ =,சார்.பாஸ்போர்ட் ஆபிசா? எனக்கு பாஸ்போர்ட் எடுக்கனும்.வீட்டுக்கு ஆபீசர்சை அனுப்ப முடியுமா?நான் வந்தா கூட்டம் கூடிடும்.
=============
3 ஜட்ஜ் = எதுக்காக சம்சாரத்தை தீர்த்துக்கட்டினீங்க?
சசி தரூர்.( கைதி)= பிடித்தவர்களை கொண்டாடி "தீர்ப்பதில் "தான் வாழ்க்கையின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி
=============
4 ஹால் ல சாப்பிடற நீங்க சரக்கு அடிக்கும்போது மட்டும் ஏன் பெட் ரூம் போய்டறீங்க?
ஆல்ஹ"ஹால்" சாப்பிடக்கூடாதுன்னாங்க#SAY NO TO ALCO"HALL"
===========
5 எரும்பு ,எறுமை ன்னு தப்பு தப்பாஎழுதி இருக்கியே?
டீச்சர்
எறும்பு சின்னது.அப்போ சின்ன ரு தானே வரனும்? எருமை பெருசு.அப்போ பெரிய.று தானே?
=============
6 டியர்! உன் சமையல் அறையில் நான் உப்பா?,சர்க்கரையா?
க்ளீனர்.& ஹெல்ப்பர்
================
7 டியர்.உங்க சம்பளம் குறுந்தொகை யா இருக்குன்னு அப்பா சொல்றாரு.
8 மாசம் சேர்த்து வெச்சிருந்தா எட்டுத்தொகை யா பெருகிடும்னு சொல்லிப்பாரு
================
8 டியர்! பொண்ணுங்களை டி போட்டு கூப்பிட்டா தப்பில்லையா?
அடியே! டீ போட்டு கூப்பிடலாம், சரக்குப்போட்டுட்டுதான் கூப்பிடக்கூடாது
===================
9 விஜய் ரசிகை = அப்பா, இந்த மாப்ளை வேணாம், ரொம்ப சாத்வீகமா இருக்கார்
ஏம்மா! ”ஆத்வீக்”மா இருந்தாத்தானே உனக்குப்பிடிக்காது?
=================
10 எங்க அம்மா பக்கத்து ரூம்ல இருந்துட்டே, எனக்கு கால் பண்ணி காமடி பண்ணிட்டு இருக்காங்க
அது காமெடி இல்லை. உங்க ஃபோன் எங்கேஜ்டா?னு செக்கிங்
===================
11 எனக்கு தலைவலி வந்தா அவர் தான் அமுக்கி விடுவார்,பேன் இருந்தாலும் எடுத்து விடுவார்
ஓஹோ, பெய்ன் கில்லரும் அவர்தான், பேன் கில்லரும் அவர்தான்
===================
12 மாமா! உங்க பொண்ணு டெய்லி கோபத்துல "கதகளி" ஆடறா
மாப்ளை.அவ விஷால் ரசிகை."திமிரு" பிடிச்சவன்னு அப்பவே சொன்னேனே?
=============
13 மிஸ்!ஒரு லட்சம் ரூபா கடன் வேணும்
சாரி.இல்ல
.பொய்.பேர்லயே லட்சம் ரூபா இருக்கு.அப்போ அக்கவுன்ட்ல இருக்காதா? ("LAKSH"MI)
===========
14 நான் யார் கிட்டேயும் வாய் கொடுத்து மாட்டிக்க மாட்டேன்
ஓஹோ, அப்போ லவ்வருக்குக்கூட லிப் கிஸ் லேதா?
===================
15 டியர்!சண்டைப் போட்டு பேசாம இருப்பது தப்பு.கௌரவமே பார்க்காம முதல்ல பேசுறது தான் அன்பு
அய்யய்யோ, நேத்துதான் கே டிவில கவுரம் பார்த்தேன்
====================
16 மிஸ்! ஏதாவது சமையல் டிப்ஸ் ப்ளீஸ்!
ஒரு டிப்ஸுக்கு 100 ரூபா சார்ஜ் ஆகும்
ஏம்மா மின்னல்? 50 ரூபா இருந்தா ஹோட்டல்ல போயே சாப்ட்டுக்குவனே?
=================
17 டியர்! என் பிள்ளைத்தமிழ் எப்டி?
நீயே ஒரு வரிக்கு 10 ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் பண்ணுவே, உன் பிள்ளை எப்ப்டி இருப்பான்?அவன் தமிழ் எப்டி இருக்கும்?
===============
18 டாக்டர்! ஸ்வீட்ஸ் சாப்பிடற மாதிரி டெய்லி கனவு வருது.
ஓஹோ, ஃபேஸ்புக்ல எவனாவது ஸ்வீட் ட்ரீம்ஸ் -னு சொல்லி இருப்பான், அவனை அன்ஃபாலோ பண்ணவும்
==================
19 மிஸ்! ஃபேஸ்புக்ல ஆக்டிவா இருக்கற நீங்க ஏன் ட்விட்டர்ல ஆக்டிவ்வா இல்ல?
இருக்கறது ஒரே ஒரு ஆக்டிவா. எல்லா இடத்துக்கும் ஒரே நேரத்துல?
===================
20 தலைவரே! உங்க பையன் சரக்கு அடிச்சா அதுக்கு துணை போவீங்களா?
நோ
தமிழக மக்களை என் குழந்தைகளாகக்கருதுகிறேன்னு சொல்லிட்டு டாஸ்மாக் திறந்தது ஏன்?
===========================
===================
0 comments:
Post a Comment