1 எல்லார் கண்ணுக்கும் எதிர்.வீட்டு பிகர் மட்டும் அழகாத்தெரிவது ஏன்?
அடுத்தாத்து அம்பு"ஜம்"எப்பவும் ஜம்முனு தான் இருக்கும்
============
2 டியர்.சிட்டி லிமிட் தாண்டக்கூடாது.உள்ளூர்லயே.சுத்துவோம்
ஏன்?
எல்லை தாண்டக்கூடாதுன்னு அம்மா.சொல்ச்சு
ஓஹோ.அந்த எல்லைதான் தாண்டக்கூடாதா?ஐ ஜாலி
==============
3 மீனம்மா வெய்யில்ல நிக்குது.ஆபத்து
ஏன்?
கருவாடம்மா ஆகிடாது?
=========
4 13 வயசு டூ 19, வயசு காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்து எப்டி சொல்லனும்?
ஹேப்பி வேலன்ட்"டீன்" டே
==========
5 டியர்.பீச்க்கு 6 க்கு வர முடியாது.நைட்.7 ஆகிடும்.
ரைட்டு.லவ்வர்ஸ் டே கொண்டாடுது ஊர் உலகம்.நாம மட்டும் லவ்வர்ஸ் நைட் கொண்டாடுவோம்
=========
6 டியர்.என்னைக்கண்காணிக்க என் தங்கச்சியைக்கூடவே அனுப்பி இருக்கு எங்க அம்மா.
பேக்கு.நீ உன் தங்கையைக்கூட்டிட்டு வா.நான் என் தம்பியோட வர்றேன்
=========
7 சிம்பு ரசிக ரசிகைகளுக்கு காதலர் தின வாழ்த்து எப்டி சொல்றது?
எங்க வீட்டு வேலன் ட்டைன்ஸ் டே.விஷ்
==========
8 டியர்.உங்க கை என் மேல படக்கூடாதுன்னு சத்தியம் பண்ணிட்டு பீச்க்கு வந்திருக்கீங்க.
கை தானே படக்கூடாது.உதடு படலாமில்ல?
=========
9 டியர்.குட் டச் பேடு டச் அப்டின்னா என்ன?
காலண்டர் ல போட்டிருக்கும் நல்ல நேரப்படி.டச் பண்ணா குட் டச்.ராகு காலத்தில் டச் பண்ணா பேடு டச்
===========
10 பொண்ணு நிச்சயம்.சவுரி ராணி தான்னு எப்டி சொல்றீங்க மாப்ளை?
"விக்"னேஸ்வரி ன்னு சொன்னீங்களே?
===========
11 டியர்.என் அக்காவுக்கு உங்களைப்பிடிச்சிருந்தா தான் நம்ம கல்யாணம்
உங்க அக்காவுக்கு என்னை பிடிச்சுட்டா எங்க 2,பேருக்கும்தானே நடக்கும்?
==========
12 டியர்.உங்களுக்காக என் உடல் ,பொருள் ,ஆவி எல்லாம் ஒப்படைக்கத்தயார்.
3 வது மட்டும் வேண்டாம்.ஜெயிலுக்குப்போய்டுவென்.முதல் 2ம் ஓக்கே
===============
13 காதல்/காம எண்ணங்கள் இன்றி எதிர்பாலாருடன் உங்களால் நட்புடன் பழக முடியுமா?
முடியுமா?முடியாதா?ன்னு தெரியாது.எதுக்காக அப்டி பழகனும்?
==================
14 டாக்டர்.இனிமே இவங்க திரவ ஆகாரம் மட்டுமே சாப்பிடனுமா?
ஆமா.குணமாகும் வரை.சந்"திரவ"தனா தான்
==========
15 டாக்டர், மத்தியானம் தூங்கி எந்திரிச்சேன், நைட் தூக்கமே வர மாட்டேங்குது
அப்டியே தூங்கி இருந்திருக்கலாமில்ல? எதுக்கு இடையில் எந்திரிச்சீங்க?
=====================
16 டியர்!தேவதைக்கு ஆண்பால் என்ன ?
தேவ மாசி
எப்டி?
தைக்கு பின் மாசி தானே வருது? பெண்ணுக்குப்பின் ஆண், எப்டி நம்ம ஃபார்முலா?
===============
17 டியர், இந்நேரத்துல எதுக்கு மொட்டை மாடிக்குக்கூப்பிடறீங்க?
லவ்வர்ஸ் நைட் கொண்டாடத்தான்
==============
18 மிஸ்! 1,2,3 கூட வரிசையா எழுதத்தெரியலையா?உங்க ஹேண்டில்ல 231 -னு மாத்தி இருக்கீங்க?
யோவ், அப்போ 143 சொன்னா 2 விட்டுட்டிங்க?ம்பியா?
================
19 டீச்சர், சிங்கம் என்ற சொல்லுக்கு பெண் பால் சிங்கி தானே?
நீ தமிழ் இலக்கண மார்க்குக்கு சிங்கி தான் அடிக்கப்போறே
=================
20 டீச்சர்! தேவதை க்கு எதிர்ச்சொல் என்ன?
தே வதைக்காதவன்
================
0 comments:
Post a Comment