தனி ஒருவன் கொடுத்த பிரம்மாண்ட வெற்றி ஜெயம் ரவியின் மார்க்கெட்டை உச்சத்துக்குக்கொண்டு போனது. 1000 தியேட்டர்களில் முதல் முறையாக அவர் படம் ரிலீஸ் ஆகி இருக்கு
பேய்ப்படங்கள் தமிழ் சினிமாவில் நிச்சய வெற்றி . கிட்டத்தட்ட பேய்ப்படம் போன்றதொரு கேட்டகிரியில் இதுவும் வெற்றிப்படமாகவே அமையும் என யூகிக்கிறேன்
ஹீரோ ஒரு டிராஃபிக் இன்ஸ்பெக்டர். அவருக்கு ஒரு தங்கை. முன்னாள் காதலி. காதலி ஒரு டாக்டர்.
ஊர்ல ஒரு குறிப்பிட்ட வைரஸ் தாக்குதலால் மனிதர்கள் பாதிக்கப்படறாங்க. அதுக்கு மாற்று மருந்து இன்னும் கண்டுபிடிக்கலை. பாதிக்கப்பட்டவங்க சாதா மனிதனைக்கடித்தா அவருக்கும் வைரஸ் பரவும் .
கதைக்களம் ஊட்டி. ஊட்டி பூரா பிளாக் பண்ணி நிலைமையைக்கட்டுக்குள் கொண்டு வர நினைக்குது போலீஸ்
ஊட்டிக்கு உள்ளே வாகனங்கள் வர தடை வெளியேவும் போக முடியாது.
இப்படிப்பட்ட பர பரப்பான சூழலில் காதலி யும் டாக்டர் குழுவும் சட்டத்தை மீறி ஊட்டியை விட்டு வெளியே கோவை போய் தான் அந்த மருந்து கண்டுபிடிக்கும் பணி பூர்த்தி ஆக்க முடியும். நாயகன் அதுக்கு உதவறார் .
என்ன ஆச்சு? என்பதே மிச்ச மீதிக்கதை
ஹீரோவா ஜெயம் ரவி,ஓப்பனிங் சீன்ல நியாயமான சராசரி போலீஸ் ஆஃபீசரா அவர் வரும் காட்சிகள் இதம். ஆனாலும் நிமிர்ந்து நில் , தனி ஒருவன் தந்த இமேஜை அவர் மெயிண்ட்டெயின் பண்ண வேண்டி இருக்கு
பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்பு எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றம். பொதுவாவே வெற்றி ஒரு மனிதனை மேலும் உற்சாகப்படுத்தும் அடுத்த வெற்றிக்கு அது தயாராக்கும், வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும், இது ஜெயம் ரவிக்கு ஹாட்ரிக் ஹிட். தனி ஒருவன் , பூலோகம் , மிருதன்
ஹீரோயினா லட்சுமிமேனன். இவருக்கு ஒரு ராசி உண்டு. இவர் நடிச்ச எந்தப்படமும் இது வரை ஃபிளாப் ஆனதில்லை. ராசியான நடிகைன்னு பேர் வாங்கிட்டார். இதுல கன்னம் உப்பலா இருக்கு. பீர் காரணமா? போஷாக்கான சாப்பாடு காரணமா? தெரியல .
இந்தப்படத்தில் தனி வில்லன் என யாரும் இல்லை. சம்பளம் மிச்சம். கண்ணுக்குத்தட்டுப்பட்ட எல்லாரும் வில்லன் தான். காயம் ஆன எல்லாரையும் ஹீரோ ஷூட் பண்ணிட்டே இருக்கனும் ம் அம்புட்டுதான் வேலை
பின்னணி இசை நல்லாருக்கு, ஒளிப்பதிவு கன கச்சிதம். மேக்கப்மேன் க்கு ஏகப்பட்ட வேலை. எல்லார்க்கும் கோர மேக்கப் போடனும்
மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 டிராபிக் இன்ஸ் பெக்டருக்கும் ,சாதா இன்ஸ்பெக்டருக்கும் சம்பளம் 1,தான்.ஆனா டிராபிக் ல ரிஸ்க் கம்மி # மி
1 டிராபிக் இன்ஸ் பெக்டருக்கும் ,சாதா இன்ஸ்பெக்டருக்கும் சம்பளம் 1,தான்.ஆனா டிராபிக் ல ரிஸ்க் கம்மி # மி
2 பொண்ணுங்க போற வண்டியை என்னைக்கும் டிராபிக் போலீஸ் கண்டுக்காது # மி
3 இந்த பனிக்கரடியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?
நான் தாங்க மேரேஜ் புரோக்கர் #மி
4 குடிச்ட்டு வண்டி ஓட்றியா?
ஜஸ்ட் பீர் தான்
பீர் ல பாலா கலந்திருக்கு? #மி
5 ஏம்ப்பா, அவளைக்காப்பாத்துனே சரி, ஆனா அவளைக்கட்டிப்பிடிக்காமயே அதை செஞ்சிருக்கலாமே? # மி
6 லேசா பசிச்சுது, அதான் லேஸ் சாப்ட்டுட்டு இருக்கேன்
நல்லவேளை, சோம்பின்னு நினைச்சு லேசா சுட்டிருப்பேன் # மி
படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 ஆதி+ ரஜினி = ஜெயம் ரவி.
1 ஆதி+ ரஜினி = ஜெயம் ரவி.
எப்டி?புரியலையே?
மிருகம் + மனிதன் = மிருதன்
2 11.15 AM தான் ஷோ டைம் னு தெளிவா தியேட்டர்ல ,டிக்கெட்ல எழுதி வெச்சாலும் படத்தைப்போட்றா என கூச்சல் இடுவதில் ரசிகர்களுக்கு ஒரு அலாதிப்ரியம்
3 ரசிகர்களின்.ஆரவாரக்கூச்சல் கை தட்டலுடன் ஓப்பனிங் சீனே செம த்ரில் #,மி
4 என் முன்னாள் காதலி. உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி # குட் சாங் @,மி
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 சோம்பிகள் பற்றிய முதல் தமிழ்ப்படம் என்ற முத்திரையைத்தக்க வைக்கும் அளவு நல்ல படம் தந்தது
2 அரசியல்வாதியாக வரும் நாயகியின் அப்பா கேர்க்டர் பண்ணும் அலப்பரைகள் காமெடி. குறிப்பா சோம்பிகள் கூட்டமாக வெறி கொண்டு வரும் காட்சியில் என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா என பஞ்ச் கொடுப்பது
3 ஹீரோவின் நண்பர் காலைக்கடித்ததா சோம்பி என டெஸ்ட் செய்யும்போது சப்போஸ் கால்ல காயம் இருந்தா என்னை சுட்டுடாதே மாப்ளை என அவர் நாயகரிடம் கெஞ்சும் காட்சி டச்சிங் சீன்

4 நாயகி நாயகன் காதல் காட்சிகள், டூயட் , பிரிவுக்கான சரியான காரணம் கதைக்கு அவசியம் இல்லை என முடிவெடுத்து ட்ரிம் பண்ணி க்ரிஸ்ப் ஆக கொண்டு போகும் திரைக்கதை உத்தி
5 இந்நாள் புதுக்காதலர் நாயகியை காப்பாற்ற வராத போது உயிரைப்பணயம் வைத்துக்காப்பாற்ற வந்த முதல் காதலரின் உண்மைக்காதலைப்புஎஇந்து கொள்ளும் தருணம்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 வேனில் இருப்பவர்களுக்கு கடி காயம் இருக்கா? என சுய பரிசோதனை செய்யச்சொல்றாங்க. எல்லாரும் செஞ்சுட்டு இல்லைங்க்றாங்க. காயம் இருந்தா சுட்டுக்கொன்னுடுவாங்க என தெரிஞ்சும் யாராவது உண்மையை ஒத்துக்குவாங்களா? கலைஞர் டி வி 200 கோடி ஊழலை கலைஞரே ஒத்துக்கிட்டாலும் இது நடக்காதே? ஹீரோ அல்லது ஹீரோயின் ஒவ்வொருவரா செக் பண்ணி இருக்கனும், அதானே முறை?
2 ஹீரோயின் தங்கையை கை பிடித்துக்கூட்டி வரும் ஆள் ஒரு சோம்பி. டக்னு கடிக்காம அவ கையைப்பிடிச்சு இழுத்துட்டுப்போவது ஹீரோ காப்பாத்த தரும் கால அவகாசம் தானே?
3 சோம்பிகளுக்கு தண்ணீர் என்றால் அலர்ஜி என்ற உண்மை தெரிந்த பிறகும் தண்ணீரை ஒரு ஆயுதமாக உபயோகிக்க போலீஸ் ஏன் ட்ரை பண்ணவே இல்லை? பின் பாதியில் ஒரு சீனில் மட்டும் ஃபையர் சர்வீஸ் லாரியை யூசிங்
4 பாதிக்கப்பட்ட எல்லோரும் கடி பட்ட அடுத்த நொடியே சோம்பியாக மாறும்போது ஹீரோவின் தங்கைக்கு மட்டும் 90% பாதிப்பு ஏற்படுவதும் ஏதோ நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதும் நம்பும்படி இல்லை.

சி பி கமெண்ட் -ஜெயம் ரவிக்கு ஹாட்ரிக் ஹிட். விறு விறுப்பான ஆக்சன் த்ரில்லர் - ஆல் செண்ட்டர் ஹிட் - விகடன் மார்க் -42 , ரேட்டிங் - 3/5
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 42
குமுதம் ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே
ரேட்டிங் = 3/5
திருவனந்தபுரம் அஜந்தா வில் படம் பார்த்தேன்
0 comments:
Post a Comment