ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவரும் பள்ளி நாட்களில் இருந்து ஒன்றா கவே வளரும் உறவுக்காரர்கள். ஆர்யா பள்ளிப் படிப்போடு நிறுத் திக்கொண்டு பைக் ரேஸில் ஆர்வம் ஏற்பட்டு ஹைதராபாத் சென்றுவிடுகிறார். பிறகு ரேஸை விட்டுவிட்டு பெங்களூரில் தங்கி விடுகிறார். சாஃப்ட்வேர் இன்ஜினீ யரான சிம்ஹாவுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. எம்பிஏ படிப்பைத் தொடர வேண்டும் என்பது ஸ்ரீதிவ்யாவின் கனவு. அவரது பெற்றோரோ பெங்களூரில் வேலை பார்க்கும் ராணாவை ஸ்ரீதிவ்யாவுக்குத் திருமணம் செய்துவைக்கிறார்கள்.
பெங்களூரில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகிய நால்வருக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல் நிகழ, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என் பதை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சி யுமாகச் சொல்லியிருக்கிறார் இயக் குநர் ‘பொம்மரில்லு’ பாஸ்கர்.
மலையாளத்தில் வெளியான ‘பெங்களூர் டேஸ்’ படத்தைச் சின்னச் சின்ன மாற்றங்களுடன் மறுஆக்கம் செய்திருக்கிறார் இயக்குநர். ஆர்யா, திவ்யா, பாபி சிம்ஹாவின் ரகளைகள் படத் துக்கு இளமைப் பொலிவைத் தருகின்றன. ஆர்யா, பாபியின் குணத்தில் இருக்கும் வேறுபாடு அவர்களது நட்பை சுவாரஸ்ய மாக்குகிறது. பாபியின் பெற்றோர், ஆர்யாவின் பெற்றோர், திவ்யா ராணா மண வாழ்வு, ராணாவின் கடந்த காலம், ஆர்யாவின் காதல், அதில் முளைக்கும் பிரச்சினை எனத் திரைக்கதை பல்வேறு விஷ யங்களைக் கொண்டிருந்தாலும் சிக்கலில்லாமல் சுவாரஸ்யமாகப் பயணிக்கிறது. எனினும், ஒரே மாதிரியான காட்சிகளைத் திரும் பத் திரும்பப் பார்க்கும் அலுப்பு ஆங்காங்கே ஏற்படுகிறது.
ஆர்யா பார்வதி மேனன் காதல் கவித்துவமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால், பாபி சிம்ஹாவின் காதலைச் சித்தரித்த விதம் சிறுபிள்ளைத்தனமாக இருக் கிறது. ராணாவுக்கும் திவ்யா வுக்கும் இடையே நெருக்கம் உருவாவதற்கான காட்சிகள் மனதைத் தொடுகின்றன. பாபி யின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர் வீட்டை விட்டுப் போவதும் அம்மா சரண்யா பாபியின் வீட்டுக்கே வந்து வாழ்க்கையைக் கொண்டாடு வதும் சுவாரஸ்யமான திருப்பங் கள். பாஸ்கர் ஏன் வீட்டை விட்டுப் போனார் என்பதைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள புதிர் சுவையானது.
‘‘காரை நிறுத்தச் சொல்லு. படம் பார்த்துட்டு வந்து கதை சொல்றோம்’’ என்று ஆர்யாவும், பாபியும் காரைவிட்டு இறங்கி செல்லும்போதும், ‘இனிமேல் இதுதான் என் ரூம்’ என்று தான் உபயோகப்படுத்தும் பொருட் களை எல்லாம் அள்ளிக்கொண்டு போய் கணவன் ராணாவின் அறை யில் ஸ்ரீதிவ்யா போடும் இடமும் கலகலப்பு. அதே கலவையைப் பல காட்சிகளில் நீட்டியிருக்கலாம்.
நிறைய கதாபாத்திரங்களைக் கூட்டாமல், அதிகம் பேசாமல், நுட்பமான உணர்வுகளால் உறவின் வலிமையைச் சொல்கிறது படம். பார்வையாளர்களிடையே நல்லுணர்வை எழுப்ப விரும்பும் படங்களுக்கு உள்ள பிரச்சினை இந்தப் படத்துக்கும் இருக்கிறது. அதீதமான நல்லவர்களை ஒன் றாகப் பார்க்கும்போது திகட்டு கிறது. வாழ்வின் சிக்கல்களை எளிமைப்படுத்தும் போக்கு ஏமாற்றமளிக்கிறது. திருப்பங்கள் எதிர்பார்த்த விதத்திலேயே இருக்கின்றன. மிதமாக நகரும் திரைக்கதையும் படத்துடன் முழுமையாக ஒன்றவிடாமல் செய்கிறது.
திருமண வாழ்வில் ஒட்டாமல் இருந்தாலும், நண்பர்களுடன் சேர்ந்து வாழ்க்கையைக் கொண் டாடும் பாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா தன்னை நன்கு பொருத்திக் கொள்கிறார். ராணாவின் பின்கதை தெரிந்த பிறகு அவர் நடந்து கொள்ளும் விதத்தில் நடிப்பில் பக்குவம் தெரிகிறது. ஆர்ஜேவாக வரும் பார்வதி மேனன் தன் பொலிவான தோற்றத்தாலும் நுட்பமான நடிப்பாலும் பார்வை யாளர்களைக் கொள்ளை கொள் கிறார்.
ராணா, சமந்தா காதல் கதை மனதை நனைக்கிறது. காதல் வலியைச் சுமந்துகொண்டு பரபரப்பான வாழ்க்கையில் ஓடும் இளைஞனின் உணர்வுகளைச் சில இடங்களில் சிறப்பாக வெளிப் படுத்தியிருக்கிறார் ராணா. மகளை இழந்த சோகத்தை வெளிப்படுத்தும் காட்சியிலும் கடைசியில் மனம் மாறும் காட்சியிலும் பிரகாஷ்ராஜ் நெகிழவைக்கிறார். பளிச்சிடும் மின்னலாகத் தோன்றி மறைகிறார் சமந்தா.
பெங்களூரில் சாஃப்ட்வேர் பொறியாளராக வேலைபார்த்தா லும் ஊர் மணம் மாறாமல் இருக்கும் பாத்திரத்தில் பாபி சிம்ஹா சரிவரப் பொருந்தவில்லை. கிராமத்தில் இருந்தாலும் நகர கலாச்சாரத்துக்கு விரும்பி மாறும் சரண்யா பொன்வண்ணனின் நடிப்பு அசத்தல்.
மலையாள மூலப் படத்தில் பாத்திரங்களிடம் தென்பட்ட சீரான இயல்புத்தனம் தமிழ்ப் படத்தின் பாத்திரங்களில் முழுமையாக வெளிப்படவில்லை. அதோடு மலையாளத்துக்கே உரிய மிக நுணுக்கமான நகைச்சுவையை தமிழுக்கு ஏற்றபடி மாற்றுவதில் இயக்குநருக்கு ஆங்காங்கே சறுக்கல் தெரிகிறது.
இருந்தாலும் இந்த பெங் களூர் நாட்களும் ஓரளவு குளுகுளுதான்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment