1 டியர், நான் ஏன் குண்டா இருக்கேன்னா எங்கம்மா எப்பவும் டேஸ்ட்டா சமையல் செய்வாங்க.
ஓஹோ, உங்க அப்பா மட்டும் ஒல்லியா இருக்காரே?அது எப்டி?
==============
2 டியர், போன வருசம் தானே பிரேக்கப் பண்ணிட்டு போனீங்க இப்போ ஏன் ஐ லவ் யூ சொல்றீங்க?
அன்பே! கூடா நட்புன்னு சொல்லிட்டு சேர்றாங்களே?
=================
3 காதலர் தினம் நாளைக்குதானே?ஏன் இன்னைக்கே ரோஜாப்பூ தர்றீங்க?
நாளை 50 ரூபா ரேட் சொல்வான்.
============
4 டியர்.இந்த ஜென்மத்துக்கு நான் மட்டும் தானே உங்க காதலி?
2016 வரை நீ மட்டும் தான்
=============
5 கவர்ச்சி நடிகையா வரும் முன் புருசன் கிட்டே ஏதோ சவால் விட்டீங்களாமே?
ஆமா.தனியா வாழ்ந்து காட்டுவேன் னேன்
===========
6 சார்.காதலர் தினம் கொண்டாட தனியா பீச் வந்திருக்கீங்க?
மத்தவங்க கொண்டாடறதை வேடிக்கையாவது பார்ப்பம்
==========
7
டியர்.அந்தாளு என் கிட்டே டபுள் மீனிங் ல பேசறாரு.
உனக்கு சிங்கிள் மீனிங் ல பேசுனாலே 2 வாரம் கழிச்சுதானே புரியும்?
===============
8 மேடம்.எந்த முகத்தை வெச்சுக்கிட்டு மீண்டும் வாக்கு கேப்பீங்க?
மேக்கப் போட்டு முகத்தையே மாத்திட்டு வந்துட்டாப்போச்சு
=============
9டியர், போன வருசம் தானே பிரேக்கப் பண்ணிட்டு போனீங்க இப்போ ஏன் ஐ லவ் யூ சொல்றீங்க?
அன்பே! கூடா நட்புன்னு சொல்லிட்டு சேர்றாங்களே?
=============
10 டியர், லவ்வர்ஸ் டே க்கு ரோஜா இல்லாம வந்திருக்கீங்க?
ரோஜா ஆர் கே செல்வமணி கூட சிங்கப்பூர் போய் இருக்காங்க
================
11 காதல் தினம் கொண்டாட கோவிலுக்கு செல்கிறோம்
ஏன் மேடம் அங்கே போறீங்க?பார்க் , பீச் ,சினிமா போகலை?
எங்களுது தெய்வீகக்காதல் ஆச்சே?
==============
12 டியர், மல்லிகைப்பூவை உங்க கையால கூந்தல்ல வெச்சு விடுங்க
வேணாம், சவுரி கையோட வந்துடும், கோவிச்சுக்குவே, சமாதானப்படுத்துவதற்குள் விடிஞ்சிடும்
=================
13 டியர், என் தங்கச்சி, என் அக்கா, நான் 3 பேரும் படம் பார்க்கப்போறோம். எதுக்குப்போக?
வரிசை கரெக்டா இருக்கும், ஜில் ஜங்க் ஜக்
================
14 டியர், நம்ம காதல் ஆண்டாண்டு காலமா நிலைச்சு இருக்குமா?
அது உன் கைல தான் இருக்கு, ஜாக்கிரதையா இல்லைன்னா நவம்பர் 14க்குப்பின் இருக்காது
=================
15 தலைவரே! நம்ம கட்சில சேர கவிதாயினி தாமரை வந்திருக்காங்க.
இந்த தேர்தல்ல நமக்கும் தாமரைக்கும் தான் ஆகாதே?
=================
16 16 வயசு கூட ஆகலை, தலைவர் பையன் புதுக்கட்சி ஆரம்பிச்ட்டாரே?
திரா”விடலை”க்கட்சி போல
==================
17 டியர், பேரீச்சம்பழத்துல இங்க் தெளிச்சு தர்றியே எதுக்கு?
நீங்க தானே சொன்னீங்க, இன்னைக்கு டேட்டிங்க் போயே ஆகனும்னு.DATE INK
==================
18 காதலர் தினத்தன்னைக்கு காதலி இல்லைன்னு மகிழ்ச்சியா இருக்கியே?எப்படி?
இது என்ன பிரமாதம்?எய்ட்ஸ் தினத்தன்னைக்குக்கூட எய்ட்ஸ் இல்லைனு ஜாலியா
==================
19 தலைவரே! உங்களுக்கு பிரதமர் பதவி மேல ஒரு கண்ணாமே?
ஆமா, மகளிர் அணித்தலைவி மேல இன்னொரு கண்ணு
===============
20 தலைவரே! உங்களுக்கு கோயில் கட்டப்போறோம்
வெரிகுட், கோயில் சின்னதா இருந்தாலும் உண்டியல் பெருசா இருக்கட்டும்
==============
0 comments:
Post a Comment