புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏபிடி நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக, திமுகவுக்கு சம பலம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது
.
கடந்த ஜனவரி 22 முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை தமிழ கம் முழுவதும் 200 இடங்களில் 5 ஆயிரத்து 18 வாக்காளர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டுள்ளது. கிராமங்கள், நகரங் கள், பெரு நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் அனைத்துத் தரப் பினரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளி யிடப்பட்டன.
அதன் விவரம்: எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 33.13 சத வீதம் பேர் அதிமுகவுக்கும், 32.83 சதவீதம் பேர் திமுகவுக்கும் வாக் களிப்போம் என தெரிவித்துள்ளனர்.
தேமுதிக 5.21, பாமக 3.22, பாஜக 2.74, மதிமுக 2.09, காங்கிரஸ் 2.09, இடதுசாரி கட்சிகள் 0.89 சதவீதம் ஆதரவு உள்ளது. இதர கட்சிகளுக்கு 4.81 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 12.99 சதவீதம் பேர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஸ்டாலின் முந்தினார்
அனைத்துக் கட்சிகளும் தனித் துப் போட்டியிட்டால் அதிமுகவுக்கு 119, திமுகவுக்கு 115 தொகுதிகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு முதல்வர் ஜெய லலிதாவுக்கு 32.63, மு.க.ஸ்டா லினுக்கு 18.88, கருணாநிதிக்கு 15.21, விஜயகாந்துக்கு 6.54, அன்புமணி ராமதாஸ் 4.30, வைகோ 4.04, ப.சிதம்பரம் 1.28 சதவீதம் பேர் ஆதரவு தெரி வித்துள்ளனர்.
நம்பிக்கை தரும் அடுத்த தலைமுறை தலைவர் யார் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கு 27.09 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்ததாக 9.71 சதவீதம் பேர் விஜயகாந் துக்கும், 5.61 சதவீதம் பேர் அன்புமணிக்கும் ஆதரவு தெரி வித்துள்ளனர்.
எந்தத் தலைவரின் கரங்களில் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் என்ற கேள்விக்கு 24.09 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 12.67 சதவீதம் பேர் கருணா நிதிக்கும், 12.90 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினுக்கும், 3.85 சதவீதம் பேர் விஜயகாந்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உங்களைக் கவர்ந்த தலைவர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு 22.96 சதவீதம் பேரும், ஜெயலலிதாவுக்கு 22.22 சதவீதம் பேரும் ஆதரவு தெரி வித்துள்ளனர். ஸ்டாலின் 4.54, விஜயகாந்த் 3.06 சதவீதம் மக்க ளின் ஆதரவை மட்டுமே பெற்றுள் ளனர்.
கட்சிகளின் செல்வாக்கு
தெற்கு, மத்திய மண்டலங்களில் திமுகவும், மேற்கு, வடக்கு, சென்னை மண்டலங்களில் அதி முகவும் முதல் இடம் பெறும் என கூறப்பட்டுள்ளது. வடக்கு மண் டலத்தில் பாமகவும், மற்ற 4 மண் டலங்களில் தேமுதிகவும் உள்ளன.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment