Friday, February 19, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (19/02/2016 ) 9 படங்கள் முன்னோட்ட பார்வை

1 மிருதன்
2 சேதுபதி
3 நவரச திலகம்

தமிழ்

4 NEERJA
5 TERE BIN LADEN DEAD OR ALIVE
7LOVESHHUDA

ஹிந்தி

8 OUT OF RANGE
9 AKASHAVANI

மலையாளம்

1 மிருதன்

கடந்தஆண்டு ஆகஸ்ட் மாதக்கடைசியில் ஜெயம்ரவி நடித்த தனிஒருவன் வெளியானது. அவருடைய முந்தைய எல்லாப்படங்களையும் விடக் கூடுதலான வரவேற்பு மற்றும் வசூலைப் பெற்று, அப்படத்தில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் மிகப்பெரிய மதிப்பைப் பெற்றுத்தந்தது அந்தப்படம். அந்தப்படத்தின் வெற்றி காரணமாகவே சில ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த பூலோகம் படம் வெளியானது.
அந்தப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்று ஜெயம்ரவிக்குப் பலம் சேர்த்தது. அதைத் தொடர்ந்து இந்தவாரம் ஜெயம்ரவி நடித்திருக்கும் மிருதன் படம் வெளியாகவிருக்கிறது. தனிஒருவன் படத்துக்குப் பிறகு அவர் நடித்தபடம் இது. தமிழ்த்திரையுலகில் இதுவரை வராத புத்தம்புதிய கதைக்களத்துடன் இந்தப்படம் தயாராகியிருக்கிறது. ஸோம்பிக்கள் பற்றிய படங்கள் ஹாலிவுட்டில் நிறைய உண்டு. தமிழில் இதுதான் முதல்படம்.
மனிதன் பாதி மிருகம் பாதி கொண்ட மனிதர்கள்தாம் ஸோம்பிக்கள் என்று சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வகை வைரஸ் தாக்குதல் காரணமாக இப்படி மாறுகிறார்கள் என்பது அறிவியல்காரணம். அதனால்தான் இந்தப்படத்துக்கு மிருகம் என்கிற சொல்லிலிருந்து முதலிரண்டு எழுத்துகளையும் மனிதன் என்கிற சொல்லிலிருந்து கடைசி இரண்டு எழுத்துகளையும் எடுத்து மிருதன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 


இந்தப்படத்தை நாய்கள்ஜாக்கிரதை என்கிற வெற்றிப்படத்தைத் தொடர்ந்து சக்திசௌந்தர்ராஜன் இயக்கியிருக்கிறார். இவரும் முந்தைய வெற்றி தந்த உற்சாகத்தில் அதைத் தக்கவைத்தே ஆகவேண்டும் என்று களமிறங்கியிருக்கிறார். இந்தப்படபத்தில் லட்சுமிமேனன் முதன்முறை ஜெயம்ரவியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அவர் இதுவரை நடித்த எல்லாப்படங்களுமே வெற்றி என்கிற சாதனைக்குச் சொந்தக்காரர். இதனால் இந்தப்படமும் வெற்றியடையும் என்கிற நம்பிக்கை திரையுலகில் இருக்கிறது. 



புதிய கதைக்களம், ஒரேநாளில் நடக்கிற கதை என்பதால் மிக வேகமான விறுவிறுப்பான திரைக்கதை, வெற்றிகளில் இருக்கும் இயக்குநர், நாயகன் மற்றும் நாயகி ஆகியோரின் கூட்டணி ஆகிய எல்லா அம்சங்களும் இந்தப்படத்தில் இருப்பதால் இந்தப்படமும் தனிஒருவன் வெற்றியைத் தக்கவைக்கும் படமாக அமையும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.


தமிழ் சினிமா பொறுத்தவரை எப்போதும் ரஜினி, கமல், விஜய், அஜித்படங்களுக்கு தான் பலத்த எதிர்ப்பார்ப்பு இருக்கும். இதற்கு அடுத்த இடத்தில் சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகிய நடிகர்கள் உள்ளனர்.

ஆனால், கடந்த ஆண்டு கொடுத்த ஹிட்ஸால் ஜெட் வேகத்தில் முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்துவிட்டார் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் நாளை மிருதன் படம் திரைக்கு வரவுள்ளது.
தமிழ் சினிமாவின் முதல் ஜாம்பி வகை படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகாகவே உள்ளது. படமும் ஆங்கிலப்பட பாணியில் 2 மணி நேரத்திற்கு குறைவான ரன்னிங் டைம் தான்.
இப்படம் கிட்டத்தட்ட 1000 திரையரங்கில் உலகம் முழுவதும் நாளை ரிலிஸாகவுள்ளது. மிருதன் படக்குழுவினர்களுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

2 சேதுபதி

விஜய் சேதுபதி முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிப்பது, ஹீரோயின் ரம்யா நம்பீசன், பண்ணையாரும் பத்மினியும் இயக்குநர் அருண்குமார் என்று எக்கசக்க எதிர்பார்புகளுடன் நாளை 'சேதுபதி' திரைப்படம் வெளியாகிறது.


விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான நானும் ரவுடிதான் படத்தில் ரவுடியாக நடித்திருந்தார். படத்தைத் தூக்கி நிறுத்தியது நயன்தாரா என்றாலும், காமெடி ரவுடியாக விஜய் சேதுபதியும் கவர்ந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. இந்நிலையில் தனது பீட்சா ஹிட் ஹீரோயின் ரம்யா நம்பீசனுடன் இணைந்து அவர் நடித்திருக்கும் சேதுபதி திரைப்படம் நாளை வெளியாகிறது. போலீசாக விஜய் சேதுபதி ஜெயிப்பாரா என்ற கேள்விக்கான விடை நம்மிடம் இல்லை என்றாலும் என்னென்ன காரணங்களுக்காக சேதுபதியை பார்க்கலாம் என்று பார்த்து விடுவோம்.





சூது கவ்வும் தாஸ், சுமார் மூஞ்சி குமார், நானும் ரவுடிதான் பாண்டி என்று எல்லா வேடங்களுக்கும் பொருந்திப் போகும் விஜய் சேதுபதி கண்டிப்பாக சேதுபதி வேடத்திலும் அசத்தியிருப்பார்.


போலீஸ் படமென்பதால் ஏற்றிய உடம்புடன் ஆக்ஷன் காட்சிகளில் விஜய் சேதுபதி மிரட்டி எடுத்திருப்பதாக கூறுகின்றனர். படத்தின் புரோமோ காட்சிகளிலும் அது நன்றாக தெரிகிறது. விஜய் சேதுபதியை ஆக்ஷன் ஹீரோவாக பார்க்க ஆசைப்படுபவர்கள் தாராளமாக சேதுபதியை பார்க்கலாம்

 பீட்சாவில் கலக்கிய விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் ஜோடி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். 2 குழந்தைகளுடன் இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படங்களைப் பார்க்கையில் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற நம்பிக்கை எழுகிறது.
இவரின் படங்களில் கதைக்கு அதிக முக்கியத்துவம் இருக்குமென்பதால் பஞ்ச் வசனங்கள் மற்றும் ஹீரோக்களின் என்ட்ரி பாடல் ஆகியவை கண்டிப்பாக இருக்காது. இந்தக் காரணங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தாலும் ரவுடி போல போலீஸ் வேடத்திலும் விஜய் சேதுபதி ஜொலிப்பாரா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
3 நவரச திலகம்

பர்மா' படத்தைத் தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சந்திரன் ராவுடன் இணைந்து தயாரித்துள்ள படம் "நவரச திலகம்'. மா.கா.பா.ஆனந்த் நாயகனாகவும், ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன், லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' பேஹான்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடித்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் காம்ரன் கூறியதாவது, ""ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய சாதனை படைத்து, உலக அளவில் புகழ்பெற வேண்டும் என்பதுதான் நாயகன் மூர்த்தியின் ஒரே ஆசை. "ஓஹோன்னு வாழ்க்கை' - இதுதான் அவனது தாரக மந்திரம். அரை குறையாகத் தெரிந்த தொழில் நுணுக்கத்தை வைத்து, எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொண்டு அப்பா சேர்த்த சொத்தை எல்லாம் காலி செய்து கொண்டிருக்கும் அதிபுத்திசாலி. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் மா.கா.பா.ஆனந்த் தூள் கிளப்பி இருக்கிறார். அவருக்கு ஆலோசனை வழங்குபவராக கருணாகரன்... போதுமே... இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இருக்காது... நூறு சதவீதம் நகைச்சுவைக்கு கேரண்டியான படம்''.

4 NEERJA


பாலிவுட் ஹீரோக்களைப் போலவே ஹீரோயின்களும் இப்போது வாழ்க்கை வரலாறு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சோனம் கபூரும் அப்படியொரு படத்தில்தான் இப்போது நடித்துவருகிறார்.

பான் அம் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டபோது, பயணிகளைக் காப்பாற்ற முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டவர் விமானப் பணிப்பெண் நீரஜா பனோட். இறப்புக்குப் பின் அவருக்கு இந்திய அரசின் ‘அசோக சக்கர’ விருது வழங்கப்பட்டது.


‘நீரஜா பனோட்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தில்தான் சோனம் கபூர் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ராம் மாதவாணி இந்தப் படத்தை இயக்குகிறார்.


“இந்தப் படம் நாட்டின் இளம் பெண்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும். அவர்கள் துணிச்சலுடன் செயல்பட வேண்டியதை இந்தப் படம் அறிவுறுத்தும்” என்று சொல்கிறார் சோனம் கபூர்.

பாலிவுட் நாயகி சோனம் கபூரின் அடுத்த படமாக உருவாகி வரும் நீரஜா திரைப்படத்தின் ஆராய்ச்சிக்காக மட்டும் ரூ. 3 கோடி செலவாகியுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. நீரஜா பானட் எனும் விமான பணிப்பெண் 1986ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாளன்று தான் பணி செய்த விமானம் சில விமான கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அப்போது, தனது உயிரை துச்சமென நினைத்து பயணிகளை காப்பாற்ற முயன்று தன் உயிரையும் தியாகம் செய்த 23 வயது பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றை நீரஜா என்ற தலைப்பில் படமாக உருவாக்கி வருகின்றனர்.



இந்த படத்தில் உண்மைத் தன்மை மேலோங்க 15 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு உலகின் பல நாடுகளுக்குச் சென்று, அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அவர்கள் உறவினர்களிடம் உண்மைத் தகவலைத் திரட்டி படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளனராம். அதற்காகத்தான் இந்த ரூ. 3 கோடி செலவு ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


5 TERE BIN LADEN DEAD OR ALIVE

A common man who happens to look like Osama Bin Laden is noticed by a man from the American Government and plans to film the capture of Bin Laden. A film director (Manish Paul) helps making the Bin Laden film but their film making is encountered to many problems including the man playing Bin Laden being a complete lunatic. Will the government of the United States be able to show the world how they really caught the man himself?
\\\\\



BHK [email protected] is a 2016 Indian Hindi-language comedy film directed by Rakesh Chaturvedi Om and produced by Dhiraj Rokad, with Rokad, Ashok Tripathi, and Rakesh Chaturvedi Om.The film is released on 5 february 2016




7 LOVESHHUDA


    After a man drinks too much and wakes up next to a strange girl, he finds himself falling for her.
    Initial releaseFebruary 19, 2016


8 OUT OF RANGE


Out of Range is a 2016 Indian Malayalam-language comedy drama film directed by Johnson V. Devassy. The film stars Vishnu Unnikrishnan, Askar Ali, Sumith Samudra, and Ajayaghosh. It is produced by Suresh Kumar T. under the banner of Malavika Cine Creations. Anish Babu Abbas does the cinematography while Rakesh Kesavan and Lonely Doggy score the music. The screenplay is written by Devassy along with Shafeek Mohammed and Fahad Shan


a




Akaash and Vani are in love. Soon after college, Akaash leaves for London and Vani's parents force her to marry Ravi, who ill-treats her. Will Vani get a second chance and will she return to Akaash?




நன்றி- மாலைமலர் , தினமணி ,தினமலர். விகடன் , http://tamil.filmibeat.com/news/vijay-sethupathi-s-sethupathi-released-tommorrow-038917.html#slide43842

0 comments: