1 கோலம் போடுவது பெண்ணடிமை த்தனம்தானே?ன்னு சிலர் கேட்கறாங்க, பொண்ணுங்க செய்யும் ஏதோ சில அழகிய பணிகளில் அதுவும் 1, அதுக்கும் தடை போட்டா எப்படி?
=============
2 ஏறு தழுவுதல் னா என்ன?
ஏர் ஓட்டும் விவசாயி மாப்ளையா இருந்தாலும் பரவால்ல.கண்ணாலம் கட்டிக்கறேன்னு பொண்ணு சொல்வது
=============
3 வாக்கிங் ஏன் வர்ல?
வாரம் ஒரு நாள் காலுக்கு ஓய்வு
ஓஹோ.அப்போ ஜீரண உறுப்புக்கும் ஓய்வு தர சாப்பிடாம இருப்பீங்களா?
==============
4 பெண்கள் அம்மியில் அரைப்பதைப்பார்க்கவேண்டுமா? குங்குமச்சிமிழ் -ல் கை வலிக்குது கை வலிக்குது மாமா பாடல் கேட்கவும், பார்க்கவும்
================
5 என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புல நீந்த முடியாது
இல்லையே? உயிரோட ஒரு மீனை தூக்கி போட்டுப்பாருங்க நீந்தும்
==============
6 மீனம்மா கயல் ஸ்விம்மிங்க் பூல் போய் நீச்சல் கத்துக்கனும்னாங்க,அதுக்கு பயிற்சியளார் சொன்னாரு, மீன் குஞ்சுக்கு நீந்தக்கத்துத்தரனுமா?
==================
7 அன்பே! நீ பரிபூரண சைவம் என நினைத்துத்தான் DMஅனுப்பினேன்.இப்டி அக்மார்க் அசைவம் என்று தெரிந்திருந்தால் டி எல் லில் கூட பேசி இருக்கமாட்டேன்
===============
8 டெய்லி ஒரு செம கட்டை பிகரோட கடலை போட்டாலும் பொண்ணுங்க கிட்டே பேசும்போது ..நான் தனிக்கட்டை"னு ஹின்ட் கொடுப்பான் நெட் தமிழன்
==========
9 உதயநிதி -நான் வில்ல்னுக்கு கொடுத்த பஞ்ச் விமர்சகர்களுக்கும் தான்..
ஓஹோ.பொது மக்கள் எல்லோரும் சுமார்னு விமர்சனம் செஞ்சா அப்போ என்ன செய்வீங்க?
============
10 என் ஆளு தமிழிசை மாதிரி.
பிஜேபி கட்சியா?
நோ.நம்ம மேரேஜ் எப்போ?ன்னா அடுத்த ஜென்மத்தில் நிச்சயம் நடக்கும்கறா
===============
11 தீபிகா கிட்டே ஐ லவ் யூ சொல்லும்போது தனியா” உன்னை ஆழமா நேசிக்கிறேன்”னு வார்த்தை விரயம் தேவை இல்லை. அன்பே “DEEP"IKA I LOVE U போதும்
================
12 அன்பே! உன்னிடம் இருப்பது ஒரு இதயம் தான் அதை எனக்கே தந்தேன் என்றாய்! இப்போ 22 ஹார்ட் டிசைன் போட்ட நெக்லஸ் போட்டிருக்கியே? இது எப்படி?
=================
13 விஜய் சேதுபதியின் அடுத்த படமும் போலீஸ் கதை
விஜய்-யின் அடுத்த படமும் போலீஸ் கதை
2 லயும் ஏதாவது ஒற்றுமை இருக்குமோ?அ
==================
14 பருத்தி வீரன் கார்த்தி , ரஜினி முருகன் கீர்த்தி என்ன ஒற்றுமை?
2 பேரும் சிரிக்கும் போது புன்னகை பூர்த்தி ஆகாம இருக்கும்.# கோணல்
==================
15 உடல் நலன் ,மன நலனுக்கான விழிப்புணர்வு அதிகாலை விழிப்புணர்விலுருந்து துவங்குகிறது
=================
16 பெற்றோரிடத்தும் ,பெரியோரிடத்தும் பணிவாக நடத்தல் நற்குணங்களின் தலையாய பதிவாக இருக்கும்
=============
17 உணர்வில் சிறந்தது தாய்மை உணர்வு.
உணவில் சிறந்தது பரிபூரண சைவ உணவு
=============
18 புரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ கிட்டாதாயின் வெட்டென மற.ஆனா அந்த பிகர் ஆகாட்டி உள்ளூர் சந்தை பிகர்
===========
19 வெள்ளத்தால் டாஸ்மாக் கடை மூழ்கிவிட்டால் அரசின் குடி முழுகிடுச்சு என சொல்ல முடியாது
==============
20 அன்பே! செல்போன் Battery Low"."கை வசம் சார்ஜர் இல்லை.அலைபேசியில் அழைத்து ஒரு முத்தம் தந்தால் எனக்கும் போனுக்கும் சார்ஜ் ஏறிவிடும்
================
0 comments:
Post a Comment