1 எனக்கு கவிதை எழுதுறவங்கள புடிக்காது
ஏன்னா கவிஞர்கள்னா தாடி வெச்சிருப்பாங்க.
ஒஹோ.தாமரைக்கு ஏது தாடி?அவங்க ஒரு லேடி
===========
2 டாக்டர்.நீங்க சொன்னபடி அதிகாலைல வாக்கிங் போனேன்.நாய் துரத்துது.என்ன செய்ய?
சிம்ப்பிள்.ஜாக்கிங் /ரன்னிங் போங்க
=================
3 மிஸ் பரிமளா! 5 வருசமா 143 சொல்லிட்டிருக்கேன்.என் கிட்டே பரிவு காட்டக்கூடாதா?
ஒரு நல்ல குதிரை(பரி) யை வேணா காட்றேன்.ஜாக்கியா பிழைச்சுக்கோ
===============
4. மிஸ்! உங்களுக்கு வீட்ல மாப்ளை பார்த்து மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சா?
எப்டி தெரியும்?
பழையன கழிதலும் புதியன புகுதலும் புது வருட சங்கல்பம்னீங்க்ளே?
==================
5 டியர்.வாசல்ல சங்குப்பூ கோலம் போட்டிருக்கியே?எதுனா குறியீடா?
ஆமா.இந்த வருசத்தோட நம்ம காதலுக்கு சங்குன்னு அர்த்தம்
=============
6 டாக்டர்.டெய்லி ஒரே பேய் கனவா வருது!"
அரண்மனை 2 படம் ரிலீஸ் ஆனதும் பாருங்க.3,பேய்க்கனவு கிளாமரா வரும்.அதுல 3 ஹீரோயின் பேய்
==============
7 நான் ஒரு உண்மைய சொல்லிக்கறேன்
நான் எல்லாம் தெரியுமுனு காட்டிக்கற முட்டாள்ங்கோ
மிஸ்! அது எங்களுக்கு முன்னாலயே தெரியும்,காட்டிக்கல
=============
8. டியர்,உன்னுடனான அத்தனை நாட்களும் எனக்குப் பண்டிகை தான்.
அய்யய்யோ, அப்போ டெய்லி உனக்கு புடவை எடுத்துத்தரனுமா?
==================
9 தலைவரே! ம்னைவியை தற்கொலைக்கு தூண்டினா 10 வருசம் ஜெயிலாம்
சசிதரூர் = அது பணம் படைச்சவங்களுக்குப்பொருந்தாது
====================
10 அபூர்வமான காயகல்பம் கொடுத்தேனே சாப்ட்டீங்களா?
அடடா, அது சாப்பிடறதுக்கா? நான் காயத்துல தடவிட்டேன் டாக்டர்
===================
11 இவர் சண்டை போட்டு நான் பார்த்ததே இல்ல..
அப்டியா?ஆனா வீட்ல இருந்து கத்தும் சத்தம் கேட்குதே?
சம்சாரம் சண்டை போடும்.இவரு சமாதானம் செய்வாரு
============
12 டாக்டர்.மேரேஜ் க்குப்பின் புரியாத புதிரா பொண்ணுங்க இருக்காங்களே?
புதிரா?புனிதமா?டைப்பாதான் இருக்கக்கூடாது
===============
13 லவ் பண்ற புதுசுல பொண்ணுங்க பாசாங்கா பேசுவாங்க.
ஓஹோ.பிரேக்கப் ஆகிட்டா?
பீப் சாங்கா திட்டுவாங்க
===============
14 நீங்க கொடுக்கற எல்லா புள்ளி விபரங்களும் பால்ஸ் இன்பர்மேசனா இருக்கே?
கேட்கற கேள்வி எல்லாமே குற்றாலம் ,திற்பரப்பு ,மங்க்கி FALLS பற்றிதானே ?
===============
15 சார்.உங்க அடுத்த படத்துக்கு சர்வர் சுந்தரம்னு டைட்டில் வெச்சிருக்கீங்களே?
சோ வாட்?
படம் ரிலீஸ் ஆக லேட் ஆனா சர்வர் எரரா?ன்னு கேட்பாங்க
===================
16 மாமா.உங்க பொண்ணு பேரு சித்திரம் தானே?
ஏன் மாப்ளை.அதுக்காக செல்லமா சித்தி சுருக்கிக்கூப்பிடுவீங்களா?முறை மாறுதுன்னு முறைப்பொண்ணு கோவிக்குது
===========
17 2016 ஆண்டை அமோகமா வரவேற்பது யார் ?
வேற யார் ? இளையராஜா ரசிகர்கள் தான். தாரை தப்பட்டையோட ரெடியா இருக்காங்க
===================
18 அடுத்த ஆண்டு அதிகமாய் எழுதப் போகிறேன்
ஓஹோ? கதையா? கவிதையா?
கவிதாவுக்கு லவ் லெட்டர்
=================
19 லாக்கப் ரூம் ல இன்ஸ்பெக்டர் கிட்டே "அச்சம் என்பது மடமையடா"ன்னு சொன்னியா?
அய்யோ அடிக்காதீங்க.என் அடுத்த பட டைட்டில்ங்க அது
===============
20 வழக்கமா FDFS காலைல 11 மணிக்கு தானே போவீங்க? இப்போ மட்டும் ஏன் 6 PM ஷோ போறீங்க?
பட டைட்டிலே மாலை நேரத்து மயக்கம் தானே?மேட்சுக்கு மேட்ச்
===================
0 comments:
Post a Comment