Saturday, January 02, 2016

பேய்கள் ஜாக்கிரதை - சினிமா விமர்சனம்

ராகவா லாரன்சின் முனி , ஜெயராம்-ன்   நைனா, சூர்யாவின்  மாஸ் , நயன் தாரா வின் மாயா  இந்த 4 படங்களையும் நீங்க பார்க்கலையா? கவலையே படாதீங்க.உங்களுக்கான காக்டெய்ல் மொக்கை காமெடி கோஸ்ட் ஃபிலிம் தான் இந்த பேய்கள் ஜாக்கிரதை . 


தம்பி ராமய்யா , பணக்காரர். ஏகப்பட்ட சொத்து இருந்தும் அவருக்கு பேய்னா பயம் . எப்போப்பாரு பேய் பயத்தால அலறிட்டே இருக்கும் அவரை அவரோட சம்சாரம் விட்டுட்டுப்போய்டுது . ( யார் கூடப்போய்டுதுன்னு கேட்கக்கூடாது ,  இது கில்மாப்படம் இல்லை , காமெடிப்படம், தனியாப்போய்டுது, அவ்ளவ் தான்)


ராமய்யாவோட போட்டி பிஸ்னெஸ்மென்கள்  சிலர் சேர்ந்து அவரது பிஸ்னெசை  முடக்க  பேய் பயத்தை காட்டி டிராமா போட்டுட்டு இருக்காங்க . இது ஒரு டிராக் .


இன்னொரு டிராக் ல ஹீரோ வாழ்க்கைல நினைச்சது எதுவும் நடக்கலை , ஆசைப்பட்ட பொண்ணும்  கிடைக்கலைன்னு தற்கொலை பண்ண பல டைம் முயற்சித்தும் அது பலிக்காம  நடைப்பொணமா வாழ்றார். சாவைப்பத்தின பயமே இல்லாத ஹீரோவை  தன் பாடிகார்டா வெச்சுக்கிட்டா  தான் பேய் பயம் இல்லாம வாழலாம்னு நினைச்சு  தம்பி ராமய்யா ஹீரோவை  தன் கூட வெச்சுக்கறாரு 


 அந்த பங்களா வில் 4 பேய்ங்க உலா வருது. அவங்க ஆசையை நிறைவேத்தி வெச்சாதான் அவங்க கிளம்புவாங்களாம், இல்லைன்னா  டிஎம்கே , ஏடிஎம் கே மாதிரி இங்கனயே டேரா போட்டுடுவாங்களாம். அவங்க ஆசையை  ஹீரோ  நிறைவேத்தி வைக்கறார். 


அப்புறம் பார்த்தா  சின்ன வயசுல ஒரு கார்  விபத்தில் பலி கொடுத்த தன் குடும்பம் தான் அந்த பேய்க்குடும்பம்னு ஹீரோக்கு  தெரிய வருது. அதுக்குப்பின் என்ன நடக்குது ? என்பதுதான் கதை 

 தம்பிராமய்யா தான்  படத்தின்  முதுகெலும்பு . வடிவேலுவின் பாடி லேங்குவேஜை அப்படியே  தேவா ஹாரீஸ்ஜெயராஜ் பண்ணி ( அதாங்க அட்டக்காப்பி ) படத்தின் முன் பாதி முழுக்க மொக்கை காமெடி பண்ணி சி செண்ட்டர் ஆடியன்சை சிரிக்க வைக்கிறார். ஆனா  ஏ , பி செண்ட்டர் ஆடியன்செல்லாம் செம கடுப்பாகிடுவாங்க 

 ஹீரோவா  ஜீவ ரத்னம் . பேய்ப்படத்தில் ஹீரோவா நடிப்பதில் என்ன ஒரு சவுகர்யம்னா எல்லாரும் பேயைத்தான் கவனிப்பாங்க . ஹீரோ வை அதிகம் கவனிக்க மாட்டாங்க . பின் பாதியில்  செண்ட்டிமெண்ட்  சீன்களில் கொஞ்சம் நடிக்கிறார்.


 ஹீரோயினா  ஈஷான்யா மஹேஸ்வரி . அதிக வேலை இல்லை . கிளாமர் இல்லை , அதனால இவரைப்பத்தி  சொல்ல ஒண்ணுமில்ல 


நான் கடவுள் மொட்டை ராஜேந்திரன்  கெஸ்ட் ரோல் . கொஞ்சம் காமெடி பண்றார், ஆனா பத்தாது. இவரும் தம்பி ராமய்யாவும் சேர்ந்து  ஒரு குத்தாட்டாப்பாட்டு ஆட்டம் பாட்டம் உண்டு 



மனதைக் கவர்ந்த  வசனங்கள்


ஏட்டய்யா கேரக்டர் எப்டி?



பேய் னு ஒரு பேப்பர்ல எழுதிக்காட்னாலே பயந்துடுவாரு# பே ஜா


2 சுடுகாட்.ல டிராபிக் ஜாம் எப்டி வரும்?பேய் எல்லாம் பென்ஸ் கார்லயா வரும் ? # பேய்கள் ஜாக்கிரதை

3 பேய் எங்கே இருக்கு தெரியுமா?



எங்கே டாக்டர்?

பயப்படறவன் மூளைல #,பே ஜா



4 செத்துப்போனவங்களால பழி வாங்க முடியும்னா இந்த உலகத்துல யாருமே உயிரோட இருக்க முடியாது #,பே ஜா


5 என் பொண்டாட்டியைப்பேயா நடிக்க வெச்சது நான் தான்



ஏன்டா?தாலி கட்னவளை தாயாக்கற வேலையை பார்க்காம ப்பேயாக்கற வேலைலயா இருக்கே?#,பே ஜா









இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 மாஸ் படத்தின்  கதையை எடுத்துட்டு திடீர்னு அதை மறைக்க முன் பாதியில்  புதுக்கதையை செருகியது


2  மொக்கை காமெடியா இருந்தாலும் பேய்ப்படம் காமெடி எடுபடும்னு ட்ரெண்ட் புரிஞ்சுக்கிட்டு திரைக்கதை எழுதுனது 




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 இது ஃபேமிலி ஆடியன்சுக்காக எடுத்த படம் , ஹீரோயினுக்கு  சீன் சரியா வைக்கலை. வெரிகுட் , ஆனா தம்பி ராமய்யா 4  சீன்ல வல்கர் வசனம் பேசி இருக்காரு. அதுவும் க்ளைமாக்ஸ்  வசனம் பீப் சாங்க் தேவலை . இது எப்படி சென்சார்ல விட்டாங்க ? அவங்க கவனிக்கலையா? நீங்க அவரை கவனிச்ட்டீங்களா?


2 படத்துல எதுக்கு ஏகப்பட்ட கிளைக்கதைகள் ? தலை சுத்துது 





சி  பி  கமெண்ட்=பேய்கள் ஜாக்கிரதை = முன் பாதி மொக்கை காமெடி பின் பாதி முனி .மாஸ் நைனா மாயா மிக்சிங்.விகடன் =38 .ரேட்டிங் = 2 / 5 சி சென்ட்டர் பிலிம்



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -38



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= சுமார்



 ரேட்டிங் = 2/5

ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்


0 comments: