Friday, January 29, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 29/01/2016 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

1'அரண்மனை-2' 


2   

இறுதிச்சுற்று'












'ஆம்பள'படத்தை அடுத்து டைரக்டர் சுந்தர் சி, 'கலகலப்பு'படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தார். இப்போது அந்த திட்டத்தை தள்ளிப்போட்டுவிட்டு, 'அரண்மனை'படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழ் பட உலகில் ஏற்கனவே சிங்கம், ஜெய்ஹிந்த், புலன் விசாரணை ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவந்துள்ளன. அடுத்து, 'விஸ்வரூபம்-2'வெளிவர தயாராக இருக்கிறது. இதைத்தொடர்ந்து, 'அரண்மனை'படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. சரத்குமார் நடித்து, ஏ.வெங்கடேஷ் டைரக்டு செய்த 'ஏய்'படத்தின் 2-ம் பாகமும் தயாராக இருக்கிறது. சரத்குமார்- ஏ.வெங்கடேஷ் இருவரும் மீண்டும் அந்த படத்தில் இணைகிறார்கள்!

சுந்தர் சி. நடித்து டைரக்டு செய்த 'அரண்மனை' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்குவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அடுத்து, இந்தியிலும் இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அவருக்கு வந்து இருக்கிறது!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-2 என்ற படத்துக்கு தடை கேட்டு சிவில் கோர்ட்டில் பிரபல தயாரிப்பாளர் எம்.முத்துராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த படத்தின் கதை தொடர்பான பிரச்சினை குறித்து சமரச தீர்வு மையதில் பேசி தீர்க்கவேண்டும் என்று இயக்குனர் சுந்தர்.சி-க்கு சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்பட ஏராளமான திரைப்படங்களை தயாரித்தவர் எம்.முத்துராமன். இவர், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ஒரே கதை 

ரஜினிகாந்த், லதா உள்பட பலர் நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற திரைப்படத்தை கடந்த 1978-ம் ஆண்டு வெளியிட்டேன். இதே கதையை சுந்தர்.சி. இயக்கத்தில், விஷன் ஐ மீடியா என்ற நிறுவனம் ‘அரண்மனை’ என்ற பெயரில் படத்தை தயாரித்துள்ளது.

இதுகுறித்து கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த இந்த கோர்ட்டு, ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் அரண்மனை படங்களை ஒரே நேரத்தில் பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் கமிஷனர் ஒருவரை நியமித்தது. அவரும் இந்த 2 படங்களையும் பார்த்து, இருபடங்களின் கதையும் ஒன்று போல் உள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

அரண்மனை-2

இந்த நிலையில், விஷன் ஐ மீடியா நிறுவனம் தயாரிப்பில், சுந்தர் சி.இயக்கத்தில் ‘அரண்மனை-2’ என்ற திரைப்படம் வருகிற 29-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே அரண்மனை படத்தின் கதை என்னுடையது என்று வக்கீல் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த கதையின் தொடர்ச்சியான அடுத்த பாகம் வெளிவந்தால், அது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அரண்மனை-2 என்ற தலைப்பில் வரும் படத்துக்கு தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார். 

பேச்சுவார்த்தை 

இந்த மனு 12-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆனந்தன் ஆஜராகி வாதிட்டார். 

இதையடுத்து நீதிபதி டேனியல் அரிபாபு பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் முத்துராமன், எதிர்மனுதாரர் சுந்தர்.சி. ஆகியோர் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் தங்களது பிரச்சினை குறித்து பேசி வருகிற 28-ந்தேதிக்குள் தீர்வு காணவேண்டும். இந்த வழக்கை வருகிற 28-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


'இறுதிச்சுற்று' படத்தில் மாதவன்

'இறுதிச்சுற்று' படத்தில் மாதவன்
மாதவனின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'இறுதிச்சுற்று' படத்தின் இசையை இயக்குநர் பாலா வெளியிட சூர்யா பெற்றுக் கொள்ள இருக்கிறார்.


'வேட்டை' படத்தைத் தொடர்ந்து நீண்ட மாதங்கள் கழித்து தமிழில் சுதா இயக்கத்தில் நடித்து வந்தார் மாதவன். 'இறுதிச்சுற்று' என்று பெயரிடப்பட்ட அப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்தார். சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்து வந்தனர்.



இப்படத்துக்காக உடல் அமைப்பை எல்லாம் மாற்றி, குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கிறார் மாதவன். 'இறுதிச்சுற்று' படத்தின் டீஸர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. படம் எப்போது வெளியீடு, ட்ரெய்லர், இசை உள்ளிட்ட விஷயங்கள் எதுவுமே தெரியாமல் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்தது. தற்போது இப்படத்தின் இசை ஜனவரி 4ம் தேதி வெளியாக இருக்கிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.



இப்படத்தின் இசையை இயக்குநர் பாலா வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக் கொள்ள இருக்கிறார். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இந்தி பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி கலந்து கொள்ள இருக்கிறார்.


'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இந்தியிலும் 'சாலா காதூஸ்(Saala Khadoos)' என்று பெயரிலும் படமாக்கி வந்தார்கள். தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் தயாரான இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் மற்றும் யு.டிவி நிறுவனம் இணைந்து வாங்கியிருக்கிறார்கள்.
தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என யு.டிவி நிறுவனம் அறிவித்திருக்கிறது.



நன்றி - த இந்து  , மாலைம்லர், தினத்தந்தி  , தினமணி

0 comments: