சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் ஞாயிறு அன்று உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை
காலை 11.30 மணி
JALAL'S STORY / JALALER GOLPO | DIR.: ABU SHAHED EMON | BANGLADESH | 2014 | 121’
கைவிடப்பட்ட குழந்தையொன்று ஆற்றிலிருந்து மீட்டெடுக்கப்படுகிறது. ஆனால் விரைவிலேயே அந்த கிராமம் பிளேக் நோயால் அவதியுறுகிறது. ஜலால் மீண்டும் ஏனோ கைவிடப்படுவதற்கான பரிசீலனை உருவாகிறது. சில காலம் கழித்து ஜலாலுக்கு வயது 9 ஆகும்போது அவன் மிகப்பெரிய நிலச்சுவாந்தாருக்கு வளர்ப்பு மகனாக ஆகிறான். ஆனால் மறுபடியும் ஜலாலுக்கு சிக்கல் வருகிறது.
அந்த நிலச்சுவாந்தாரின் மலடியான மனைவிக்கு கருத்தரிக்கிறது. பிரசவத்தின்போது அவரின் மனைவி இறந்துவிட 10 ஆண்டுகளில் ஜலால் அரசியல் மற்றும் கொள்ளைக்கும்பலோடு சேர்ந்துவிடுகிறான். அது யாருடைய தவறு? ஒரு அற்புதமான கிராமத்தைக் காட்டியதற்காகவும் சிறந்த நடிப்புக்காகவும் சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கத்திற்காகவும் இப்படம் உலகம் முழுவதும் ஏராளமான விருதுகளை பெற்றுவந்துள்ளது.
மதியம் 1.00 மணி
PANAMA/ DIR.: PAVLE VUCKOVIC SERBIA| 2015| 105’
கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிடல் செய்யப்பட்ட படம். ஜோவன் சாதாரணமாக எந்த வேண்டுகோளும் இன்றி மாஜாவை டேட்டிங் அழைத்துச் செல்கிறான். ஆனால் அவளது மர்மமான மற்றும் நிழலான நடவடிக்கைகளால் அவன் தொந்தரவுக்குள்ளாகிறான். அதிலிருந்து அவளை பின்தொடர்வதும் அவள் தொடர்பான வீடியோக்களைக் கொண்டும் சமூக வலைத்தளங்களிலும் அவள் இன்னொரு வாழ்க்கையை கண்காணிக்கிறான். பொய், அகங்காரம், பொறாமை மற்றும் செக்ஸ் போன்ற வலைகளில் சிக்கி தன்னை இழக்கும் ஜோவன், அவள் யார் என்று தீவிரமாக புரிந்துகொள்ள முயற்சிக்கிறான். இன்றுள்ள இளைய தலைமுறையினரின் வாழ்நிலையும் மனநிலையும் சொல்லும் படம்.
காலை 4.30 மணி
THREE WINDOWS & A HANGING| DIR.:ISA QOSJA | ALBANIA|2014|94’
பாரம்பரிய கிராமம் ஒன்றில், போருக்குப் பிறகான வாழ்க்கை மெதுவாகத் தொடங்குகிறது. அங்கிருக்கும் பள்ளி ஆசிரியை லஷ், தன் மனசாட்சியால் உந்தப்படு ஒரு சர்வதேச பத்திரிக்கையாளருக்க் பேட்டி தருகிறாள். அதில் தானும், கிராமத்தை சேர்ந்த மூன்று பெண்களும் போரின் போது, செர்பிய ராணுவத்தால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதை சொல்கிறாள். இது அந்தக் கிராமத்தில் இருக்கும் ஆண்களுக்கு தெரியவரும்போது, அவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து லஷ் மற்றும் அவளது சின்ன மகனுக்கு எதிரான பிரச்சாரத்தையும் தொடங்குகின்றனர்.
மாலை 7.00 மணி
CLEANER|CISTIC | DIR.:PETER BEBJAK | SLOVAK|2015|94’
சிறையிலிருந்து வெளியே வரும் புதிய காற்றை சுவாசிக்கிறான். தன்னுடைய அடுக்கக வீட்டுக்கு வந்து நீண்ட நாள் கழித்து நல்ல புரோட்டீன் உணவு உண்கிறான். சவகாசமாக டிவி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கிறான். அன்றிரவு நல்ல தூக்கம். காலையில் அவனுக்கு ஒரு அழைப்பு காத்திருக்கிறது. அவன் சென்று செய்யவேண்டிய அடுத்த வேலைக்கான முகவரி அறிவிக்கப்படுகிறது. சுத்தம் செய்யும் இறுதிச் சடங்கு பணிகள்தான் அவனுடைய வேலை. எங்காவது யாராவது இறந்துவிட்டால் அங்கு சென்று பிணங்களை அகற்றி அந்த இடத்தையும் தூய்மை செய்வது அவன் வேலை. அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவது. பிறகு அடுத்த அழைப்புக்குக் காத்திருப்பது. இதை அவன் விருப்பமாக செய்யவில்லை. ஒரு அசாதாரண பொழுதுபோக்காக ஆரம்பித்தது கடைசியில் தொழிலாகிவிட்டது
நன்றி - த ஹிந்து
0 comments:
Post a Comment