Wednesday, December 23, 2015

DILWALE-திரை விமர்சனம்:[ தில்வாலே]

ஷாரூக் கான் - காஜோல், ரோஹித் ஷெட்டி போன்றவர்கள் இணைந் திருப்பதால் அதிகமான எதிர்பார்ப்பு களுடன் வெளியாகியிருக்கிறது ‘தில்வாலே’ படம்.



கோவாவில் கார்களை மாற்றம் செய்யும் கடை நடத்துகிறான் ராஜ் (ஷாரூக்). அவனது செல்லத் தம்பி வீர் (வருண்). வீருக்கு இஷிதாவை (கிருதி சானோன்) பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. அந்தப் பகுதியில் இருக்கும் டான் கிங்குடன் (போமன் இரானி) மோதுகிறான் வீர். தம்பியைக் காப்பாற்றுவதற்காக ராஜ் சண்டையிடுகிறான். அப்போது, ராஜுக்கு பல்கேரியாவில் ‘காளி’ என்றொரு கடந்த காலம் இருப்பது தெரியவருகிறது. அந்தக் கடந்த காலத்தில்தான் மீராவும் (காஜோல்) இருக்கிறாள். ராஜின் கடந்த காலத்தில் என்ன நடந்தது? அவன் மீண்டும் மீராவைச் சந்திக்கிறானா? வீர், இஷிதா காதல் என்னவாகிறது? இதுதான் ‘தில்வாலே’.
காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன், பாசம் என மசாலா படத்துக்கு தேவையான எல்லா அம்சங்களையும் படத்தில் வைத்திருக்கிறார் ரோஹித் ஷெட்டி. ஆனால், இவை எதுவுமே திரையில் பெரிதாக எடுபடவில்லை. ஷாரூக்-காஜோல், வருண் - கிருதி ஜோடியைத் தவிர படத்தில் ஒரு பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது.


 ஷாரூக்கின் நண்பர்களாக முகேஷ் திவாரி, பங்கஜ் திரிபாதி, ஷாரூக்கின் தந்தையாக வினோத் கன்னா, காஜோலின் தந்தையாக கபீர் பேடி, நகைச்சுவைக்கு ஜானி லீவர், சஞ்ஜய் மிஸ்ரா, வருண் சர்மா எனப் பாத்திரங் களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் யாருக்கும் நடிக்க வாய்ப்பில்லை. சஞ்சய் மிஸ்ரா வின் நகைச்சுவை மட்டும் மனதில் நிற்கிறது. ரோஹித் படத்தில் கார்கள் இல்லாமல் இருக்குமா? நிறைய கார்கள் பறக்கின்றன. ஆனால், அவை ஏன் பறக்கின்றன என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.




பாலிவுட்டின் சூப்பர் ஹிட் ஜோடியான ஷாரூக், காஜோல் படத்தில் இருக்கிறார்கள். அதனால், நாம் எதுவும் செய்யத் தேவையில்லை என்று இயக்குநர் ரோஹித் ஷெட்டி நினைத்திருக்கிறார் போல. அவர்கள் இருவரும் தங்களுடைய நடிப்பால் முடிந்த அளவு படத்தைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையும், இயக்கமும் படத்தைச் சலிப்பான அனுபவமாக மாற்றிவிடுகின்றன. ‘கபி குஷி கபி கம்’ படத்தின் ‘சூரஜ் ஹுவா’ பாடலைப் போல் ‘கெருவா’ பாடலை எடுக்க முயற்சித்திருக்கிறார் ரோஹித். இப்படி 90-களில் வெளிவந்த படங்களில் இருந்து பல விஷயங்களை மீண்டும் திரையில் பார்க்க முடிகிறது. ஆனால், அந்தப் படங்களின் ஈர்ப்பை இதில் கொண்டுவர முடியவில்லை. நகைச்சுவை வசனங்களும் பெரியளவில் எடுபடவில்லை.




வருண் தவன், அவரது முந்தைய படங் களான ‘ஹம்ப்டி ஷர்மா கி துல்ஹானியா’, ‘பத்ளாபூர்’ போன்றவற்றில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்தப் படத்தில் அவரது நடிப்பும், நகைச்சுவையும் அனுபவமில்லாத நடிகரின் நடிப்பைப் போன்று வெளிப்பட்டிருக்கிறது. கிருதி சானோனுக்கு நடிப்பதற்குப் பெரிய வாய்ப்பில்லை.



கரண் ஜோஹர் - ஆதித்யா சோப்ராவைப் போல ஷாரூக்-காஜோலை வைத் துப் படமெடுக்க ஆசைப் பட்டிருக்கிறார் ரோஹித் ஷெட்டி. ஆனால், அந்த முயற்சி முழுமையாக வெற்றி பெறவில்லை.

தஹிந்து






மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1/கஜோல் டூ ஷாரூக் - உன்னைக்காதலிப்பது போல் நடிச்சேனே ,என் நடிப்பு எப்டி?உலக நடிப்பு இல்ல ? எல்லாரும் கரெக்ட்டாப்பன்றீங்க்ளே?,#



2/நான் உன்னை அவமானப்படுத்துனேன்.ஆனா நீ என் மேல அன்பு செலுத்தறே.ஏன்?



ஏன்னா அதான் ஆண்.அதான் நான்.அதான் லவ்.

3/அதிகபட்ச அன்பை உன் மேல வெச்சிருக்கேன்.குறைந்த பட்ச நம்பிக்கையை என் மேல் வைக்கக்கூடாதா?# dilwale

4/என் வாழ்க்கைப்படம் கறுப்பு வெள்ளைல ஓடிட்டு இருக்கு.நீ வந்து தான் அதை வண்ணமயம் ஆக்கனும்

5/மிஸ்!,உங்க வீட்ல குழந்தைங்க இருக்கா?


நோ.
ஒரு வாய்ப்புக்குடுத்தா நான் ரெடி பண்ணித்தருவேன்


6/உன் மீது அன்பு வெச்சவங்களை நீ புரிஞ்சுக்கலைன்னா வாழ்க்கை பூரா நீ ஏதும் சாதிக்கவே மாட்டே





 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1/திருவனந்தபுரம் அஜந்தா A/C DTSல(தில்வாலே)்
டிக்கெட் ரேட் 100 ரூ போட்டிருக்கு.ரிசர்வேசன் சார்ஜ் 10 ரூ.மொத்தம்110 ரூ.நோ கவுன்ட்டர் டிக்கெட




2/பாலிவுட் குரூப் டான்சர்ஸ் செலக்சன்ஸ் எல்லாம் பிரமாதம் .எல்லாம் ஒல்லி கில்லிங்கதாம். #,DILWALE


3/ஹீரோயின் ஸ்கூட்டி ரிப்பேர் ஆகிடுது.ஹீரோ கார்ல லிப்ட் தர்றாரு.லவ் வந்துடு.கேவலமானசிச்சுவேசன் #,தில்வாலே்


4/பாட்ஷா வை எத்தனை பேரு தாம் எத்தனை விதமா தான் ரீ மேக் /ரீமிக்ஸ் பண்ணுவாங்களோ ?


5/கஜோல் என்ட்ரி சீன்.60 கிமீ வேகத்துல கார்ள ஷாருக் வந்து இடிச்சுடறாரு.பாப்பாக்கு ஒரு கீறல் கூட விழலை.சல்மான் கான்.நோட் திஸ் டெக்னிக்


6/கஜோல்.= மேரா நாம் மீரா ங்குது.டி ஆர் படமா இருந்தா உன் கண் 2 ம் ஜீரா ன்னு அடுத்த பாட்டு வரி வந்திருக்கும்




7/ஷூட்டிங் ஸ்பாட்க்கு அஜய் தேவ் கான் வந்திருப்பார் போல.ஹீரோ கிட்டே வரும்போது எம்ஜிஆரைப்பார்த்த பானுமதி போல் பார்ட்டி பம்முது#DILWALE



8/நானும் ரவுடி தான் ல நயன் தாரா காஸ்ட்யூமை கஜோல் க்கு குடுத்துட்டாங்க .லோ கட் ஜாக் வேற

45 வயசு லேடிக்கு இது தேவையா?

கஜோல் புது டிசைன்ல ஜாக்கெட் போட்டிருக்கு.அதாவது ஜாக்கெட் 2 சைடு சோல்டரையும் இறக்கி விட்டிருக்கு.இதுக்கு ப்ரா வே போட்டிருக்கலாம்.

10/பாட்ஷா நக்மா மழை ல நனைஞ்சு அடம்பிடிக்கும் சீனை அப்டியே சுட்டுட்டாங்க.கஜோல்

11/எல்லா ஹிந்திப்படத்துலயும் ஹீரோ ஹீரோயின்ட்ட ஐ லவ் யூ சொல்லும்போது எதுக்கு தரைல மண்டி போட்டுட்டு சொல்றாங்க?

12/அது ஏன் எல்லாப்படத்துலயும் ஹீரோயினை கரெக்ட் பண்ண ஹீரோ பைவ் ஸ்டார் ஹோட்டல்ல டிபன் வாங்கித்தர்றாரு? கையேந்தி பவன் ல சாப்பிடாதா ஹீரோயின் ?


13/மழைல நனையற ஸீன் ல் ஹீரோ ஒயிட் சர்ட்டும் ஹீரோயின் பிளாக் ஜாக்கெட்டும் போட்டிருக்காங்க.டைரக்டருக்கு ஜிகே கம்மி போல


14/ஷாரூக் கோபமா வந்து கஜோலை ஒரு பாழடைஞ்ச மண்டபத்துக்குக்கூட்டிட்டு வந்து சண்டை போடறாரு.இதை ஹோட்டல்லயே செஞ்சிருக்கலாமேன்னு கஜோல் கேட்கல


15/கஜோலுக்கு புருவம்2 ம் இயற்கைலயே இணைஞ்சிருக்கா? பியூட்டிபார்லர் கைங்கர்யமா?னு ஒருத்தன் கமென்ட்டிட்டிருக்கான்.விட்டா கிட்டக்கா போய் பார்ப்பான்









சி  பி  கமெண்ட்=DILWALE - ஷாரூக் ,கஜோல் ஜோடிக்காக பார்க்கலாம்.நார்மல் லவ் ஸ்டோரி. பின் பாதியில் திரைக்கதை தடுமாற்றம் .ரேட்டிங் =2.5 / 5







0 comments: