Friday, December 11, 2015

இளமை கொலைவெறி

இளமை கொலைவெறி || Ilamai Kolaveri movie review
நடிகர் : ராஜா ரஜாவத்
நடிகை :குஷ்பு
இயக்குனர் :ராஜா ரஜாவத்
இசை :சந்திரசேகர்
ஓளிப்பதிவு :ராஜா ரஜாவத்
ரோகேஷ் மற்றும் அவரின் மனைவி ஜெசிகா இருவரும் நாகரீக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஜெசிகாவிற்கு மூன்று தோழிகள். இதில் ராணி என்னும் தோழியுடன் ரோகேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார்.

ஒருநாள் இரவில் ராணியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ரோகேஷ் காலையில் சென்றுவிடுகிறார். இவர் சென்ற சிறிது நேரத்திலேயே மர்ம நபர் ஒருவர் ராணியை கொலை செய்து விட்டு சென்று விடுகிறார். இதனை போலீஸ் விசாரிக்கிறது. விசாரணையில் ரோகேஷ்தான் இரவில் ராணியுடன் இருந்திருக்கிறார் என்று அறிகிறார்கள்.

போலீஸ் ரோகேசை தேடி செல்லும் நிலையில், ரோகேஷ் தன் மனைவி ஜெசிகாவுடன் கோவாவிற்கு சென்று விடுகிறார். அங்கு இரவில் ஜெசிகா மர்ம நபரால் கொல்லப்படுகிறார். இதனால் ரோகேசை போலீஸ் கைது செய்கிறது. 

நான் கொலை செய்யவில்லை என்று போலீசிடம் ரோகேஷ் கூறிவரும் நிலையில், ஜெசிகாவின் மீதமுள்ள இரண்டு தோழிகளும் மர்ம நபரால் கொல்லப்படுகிறார்கள். இதனால் ரோகேஷ் கொலை செய்யவில்லை என்று கருதி அவரை போலீஸ் விடுவிக்கிறது.

இறுதியில் அந்த மர்ம நபர் யார்? அவர் ஜெசிகா மற்றும் அவரது தோழிகளை கொல்ல காரணம் என்ன? மர்ம நபரை போலீஸ் கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ரோகேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ் ராஜாவத் சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பதை விட நாயகிகளுடன் நிறைய நேரம் உல்லாசமாக இருக்கிறார். நாயகிகளாக ஜெசிகா, ராணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்கள் அளவிற்கு மீறிய கவர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

வழக்கமான மர்ம கதைக்கு ஏற்ற திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜ் ராஜாவத். திரைக்கதையில் விறுவிறுப்புக்கு பதிலாக கவர்ச்சியையே அதிகம் படமாக்கியிருக்கிறார். லாஜிக் இல்லாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம். 

ஏ.சந்திரசேகர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பெரிதாக எடுபடவில்லை.

மொத்தத்தில் ‘இளமை கொலைவெறி’ இளமை துள்ளல்.


http://www.maalaimalar.com/


0 comments: