1/கேப்டன் கூட்டு சேரும் அணியே வெற்றி வாய்ப்பு உள்ள அணியாக இருப்பதால் திமுக கூட்டணி யில் தேமுதிக விற்கு 75,சீட் க்கு மேல் தர திமுக தயாராகலாம்
==================
2/சன்TVராசிபலன்் ரோசி! நீங்க போட்டிருக்கும் பெரிய வெங்காய சருகு கலர் மோனோ காட்டன் சேலைக்கு நேவி ப்ளூ பாலியஸ்டர் ஜாக்கெட் மேட்சிங்கே இல்லை
=================
3/ஏரியா தாண்ட மாட்டே.
நிஜம் தான்.2 அடி அகல கிணத்தையே ஆர்டினரி மனுசனால தாண்ட முடியாது .100 மீட்டர் அகல ஏரிய எப்டி தாண்ட முடியும்?
================
4/விஜய் ரசிகர் =,ஏரியா தாண்ட மாட்டே
அஜித் ரசிகர் = நிஜம் தான்.உங்க ஏரியா பிகருக்குதான் ரூட் விட்டிருக்கேன்.செட் ஆகும் வரை ஏரியா தாண்ட மாட்டேன்
=============
5/ஸ்மைலி இளவரசி ,சிரிப்பு பேரரசின்னு ஹேண்டில் வெச்சு இருக்காங்க.வீட்டுக்குப்போனா சிடு சிடு ன்னு விழுவாங்களோ?
===============
6/இன்று ஒரு வெட்டித்தகவல்.அனிச்ச மலர் வீட்ல அம்மா அப்பா தங்கை அனிச்சமலர் 4 பேரும் தனித்தனி டூ வீலர்.வெச்சிருக்காங்க
=============
7/ஊர் பூரா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டினாலும் கொட்ட கொட்ட விழிச்சிருந்து கடலை போடுவான் நெட் தமிழன்
==================
8/சென்னையை விட பல மடங்கு பாதிப்பில் கடலூர் இருந்தாலும் உதவி 10 ல் 1 பங்கு கூட இல்லையாம்.எனவே கடலூர்க்கும் முக்கியத்துவம் தரவும்
===========
/முழங்கால் அளவு தண்ணீரைக்கடக்க வேண்டி வரும் இடத்தில் மீட்புப்பணியினர் TVS50 யை விட சைக்கிளில் செல்வதே நல்லது
===============
10/மீட்புப்பணியில் இறங்குபவர்கள் கனமான ஜீன்ஸ் அணிய வேண்டாம்.அது நீரில் இழுக்கும்.பாரம் அதிகரிக்கும்.மோதிரம் பிரேஸ்லெட் செயின் அணிவதை தவிர்க்க
=============
11/வடலூர் பஸ் ஸ்டென்ட் எதிரே வள்ளலார் லாட்ஜில் 25 ரூம்கள் உள்ளன.மொட்டை மாடியில் 60 பேர் தங்கலாம்.(இலவசம்) (காமன் பாத்ரூம் வசதி) (ஆண்களுக்கு)
============
12/களப்பணியில் ஈடுபடுபவர்கள் நிலவேம்புக்கசாயம் குடிக்க..தொற்று நோய் ,மழை நீர் நோய்க்கிருமியிலிருந்து காக்க.கசப்பைத்தணிக்க பனங்கற்கண்டு சேர்க்க
===========
13/பாதிக்கப்பட்டோர்க்கு வெளியூரிலிருந்து உணவு அனுப்புவோர்
சப்பாத்தி ரொமாலியன் ரொட்டி இட்லி புளி சாதம் அனுப்பவும்.இவை 2 நாட்கள் கெடாது
===============
14/தேங்காய் சட்னி தக்காளி சாதம் தவிர்க்கவும்.மாங்காய் சாதம் லெமன் சாதம் போல் புளிப்பு உணவு வகைகள் 1 நாள் கெடாமல் இருக்கும்
============
15/வாழை இலையில் பார்சல் கட்டும் முன் யாரும் அதில் தண்ணீர் தெளிக்க வேண்டாம். சாதம் விரைவில் கெட்டு விடும் வாய்ப்பு உண்டு
=============
16/ஆளுங்கட்சி ,எதிர்க்கட்சி பற்றி பலர் குறை சொல்லி விவாதித்துக்கொண்டிருக்கிறார் கள்.அதற்கு இது நேரம் அல்ல.பாதிக்கப்பட்டோரைக்காப்பா ற்ற உதவவும்
============
17/மழை நீ ரில் அதிக நேரம் நனைந்தவர்கள் அவசியம் நிலவேம்புக்கசாயம் குடிக்கவும்.கசப்பை தணிக்க பனங்கற்கன்டு/பனை வெல்லம் சேர்க்கவும்.அஸ்கா தவிர்
===========
18/இரவில் கூடாரம் போட்டு தங்குபவர் கொசுவை விரட்ட வேப்பிலை (காய்ந்த இலை )சருகுளை எரிக்கலாம்.அந்த புகைக்கு கொசு வராது
=============
களப்பணியில் இறங்குபவர்கள் நீச்சல் தெரிந்தவர்களாக இருத்தல் நலம்.வெள்ளத்தில் சிக்கிய நபர் எடை அதிகம் உள்ளவராக இருந்தால் தனியாகப்போகாதீர்
==============
20/வெள்ளத்தில் சிக்குபவர் உயிர் பயத்தில் இருப்பதால் காப்பாற்ற வருபவரை இறுக கட்டிப்பிடித்து இயங்க விடாமல் செய்வர்.எனவே தனி நபராக ் போகாதீர்
============
0 comments:
Post a Comment