செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பதில், அரசு அதிகாரிகள் காட்டிய மெத்தனப் போக்கே அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாக காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச வானிலை மையம் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்த இரு நாட்களில் 500 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் பொதுப்பணித்துறை செயலாளருக்கு இந்த தகவலை தெரிவித்ததோடு, செம்பரப்பாக்கம் ஏரியில் உள்ள தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக திறந்து விட்டு, அணையில் 18 அடி முதல் 22 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்கி வைத்தால் போதுமென்று அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த நவம்பர் 26 முதல் 29-ம் தேதி வரை சென்னை சுற்று வட்டாரத்தில் அதிகளவு மழை இல்லை. இந்த சமயத்தில் செம்பரப்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டால், அது குறைந்த அளவாகவே இருந்திருக்கும். அப்போது அடையாற்றில் வெள்ளமும் இல்லை. ஆனால் இதனை அதிகாரிகள் செய்யவோ அல்லது ஏரி திறப்பு விஷயத்தில் முடிவெடுக்காமலோ தாமதப்படுத்தியுள்ளனர். ஏரி திறப்பு விஷயத்தில் தமிழக அரசின் தலைமை செயலரின் முடிவுக்காக பொதுப்பணித்துறை செயலர் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் அதிகபட்சமாக 33,500 வினாடிக்கு 33,500 கன அடி தண்ணீர்தான் திறந்து விட முடியும். மதகுகளுக்கு தாங்கும் திறன் அவ்வளவுதான். இதற்கிடையே கொட்டும் மழையால் செம்பரப்பாக்கம் ஏரி 22 அடியை தொட்ட போது, எந்த அறிவிப்பும் இல்லாமல் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். தொடர்ந்து முழு கொள்ளளவை தொட்ட போது, வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இப்படி தொடர்ந்து 12 மணி நேரம் செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதகுகள் உடைந்திருந்தால் சென்னையில் எத்தகைய நிலை ஏற்பட்டிருக்கும் என்பதை யோசித்து கூட பார்த்திருக்க முடியாது.
சுமார் 48 கிலோ மீட்டர் அடையாற்றில் பாய்ந்த வெள்ளம் முதலில் கோட்டூர்புரம் கணபதி கோவிலை தகர்த்துள்ளது. அடுத்து காளியப்பா மருத்துவமனையில் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் நின்றுள்ளது. எந்த அறிவிப்பும் இல்லாமல் வெள்ளம் இப்படி பாய, மக்களுக்கோ பேரதிர்ச்சி. என்ன செய்யவென்று யோசிப்பதற்கு முன் தண்ணீர் வீடுகளுக்குள் சென்று உயர்ந்து கொண்டே சென்றுள்ளது. கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு தப்பிக்க வேண்டிய நிலைக்கு அந்த பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.
அடுத்து நெசப்பாக்கம் மியாட் மருத்துவமனையை வெள்ளம் பதம் பார்த்துள்ளது. 5 நிமிடங்களில் தரை தளத்தில் இருந்த ஜெனரேட்டர் தளம் முற்றிலும் நீரில் மூழ்கியது. இவ்வளவு வேகமாக வெள்ளம் சூழும் என்று மருத்துவமனை நிர்வாகம் எதிர்பார்க்காத நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 18 நோயாளிகள் இறந்து போனார்கள். இது போன்ற சம்பவம் எல்லாம் மற்ற மாநிலங்களை விட பல விஷயங்களில் முன்னேறிய தமிழகத்தில் கேள்வி படாத ஒன்று.
இந்த பகுதிகளில் வசித்து வந்த மக்கள் தங்கள் வாழ்க்கையிலேயே சந்தித்திராத அளவிற்கு வேதனையை அனுபவித்தார்கள். மின்சாரம் கிடையாது, தூக்கம் கிடையாது , உணவு கிடையாது, குழந்தை குட்டிகளுடன் சென்னை மக்கள் சந்தித்த வேதனைகள் குறித்து விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இது குறித்து மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் நிறுவன பேராசிரியர் ஜனகராஜன் கூறுகையில், '' நீர் மேலாண்மை விஷயத்தில் தமிழக அரசு அதிகாரிகள் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், பேரழிவை தவிர்த்திருக்க முடியும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் மட்டும் 3,600 ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளன. இவற்றை முறையாக தூர் எடுத்து பராமரித்து ஒன்றுடன் ஒன்று இணைத்தலே நாம் பல லட்சம் கியூபிக் தண்ணீரை சேமிக்க முடியும். மழை மறை மாநிலமான தமிழகத்துக்கு இது எவ்வளவு உதவியாக இருக்கும் என்று யாரும் யோசித்து பார்ப்பதில்லை '' என்றார்.
அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் மெத்தனத்துக்கு ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் தங்கள் உயிரையே விலை கொடுக்க வேண்டியதாகி விட்டது.
இந்த அநியாயத்துக்கு பதில் சொல்ல வேண்ட்டியவர்கள் யார்..? அவர்கள் அமைதியாக இருப்பது ஏன்..?
விகடன்
- SDஎனது தனிப்பட்ட அனுபவத்தை விகடனுடன பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதாவது அரசாங்கத்தின் தவறு இந்த செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிட்டதில் தவறுகள் ஏராளம். தூர்வாரததில் இருந்து மக்களை எச்சரிக்க தவறியதில இருந்து என சொல்லிகொண்டே போகலாம். நாங்கள் கோடம்பாக்கம் ரயிலடியில் இருந்து 5நிமிட நடைபயணதூரத்தில் வசிக்கிறோம். கடந்த டிசம்பர் 1ம் தேதிக்கு 10நாட்கள் முன் நடந்த சம்பவம் இது. அதாவது அரசாங்கம் அனைவருக்கும் முழுமையான குடிநீர் விநியோகம் என்பதை டிசம்பர் 1ம் தேதியில் முன்புதான் அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே அனைத்து ஏரிகளின் கொள்ளவு என்பது உயர்ந்துகொண்டே போனது அந்த சமயத்தில் நான் கோடம்பாக்கபகுதி சென்னை குடிநீர்வாரிய அதிகாரியினை தொடர்புகொண்டு இன்னமும் எங்கள் பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எங்களுக்கு மேலிடத்திலிருந்து இன்னமும் உத்தரவு முழுமையாக குடிநீர் திற்ந்துவிட வரவில்லை என்று சொன்னார். அதற்கு நான் அவரிடம் ஏன்சார் தினந்தோறும் இவ்வளவு கனஅடிநீர் ஏரியில் இருந்து வெளியேற்றம் என்றெல்லாம் செய்திகள் வருகிறதே அதற்கு பதில் சென்னை மக்களுக்கு குடிநீரினை விட்டாலாவது பிரயோசனமாக இருக்குமே என்று கேட்டதற்க்கு அவர் மேலிட உத்தரவு இல்லாமல் எங்களால் ஒன்றும் செய்யஇயலாது என்று சொல்லிவிட்டார். என்னுடை சொந்த ஊர் சேலம். அஙகு எங்களுக்கு மேட்டூர் அணை தண்ணீர்தான் வந்து கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் நான் சிறுவயதில பார்திருக்கிறேன். அதாவது அணையில் கொள்ளவு உயரும்போது பலநாட்கள் நாள் முழுவதும் குழாயில் தண்ணீர் வந்துகொண்டிருக்கும். இப்படியிருக்கையில் இன்று சென்னையில் இன்று நங்கநல்லூர் வரை சென்னைகுடிநீர் கொண்டு செல்ல குழாய் பதித்துவிட்டார்கள் ஆக நிலைமை இப்படிஇருக்க இந்த தவறுக்கு அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்று அதற்கான நஷட்டத்தினை மக்களுக்கு வழங்கவேண்டும் . அப்படிசெய்யாவிடில் இந்த அம்மா எப்படி கும்பகோணத்தில் மாமாங்க குளத்தில நீராடியபோது எவ்வாறு மனிதஉயிர்கள் பலியானதோ அதேபோல் இந்த தவறுக்கும் அம்மாவின் பெயர் நிச்சயம் சரித்திரத்தில் இடம் பெற்று அழியா கெட்டபேரினை வாங்கிதரும் என்பதில் மாற்றம் இல்லை
- Sஅரசு அதிகாரிகளை குறை சொல்ல முடியாது ,என்ன நடந்தாதும் நமக்கு தெரியாது ,, வாட்டர் திறக்காமல் இருந்தால் ஏரி உடைந்து சென்னை முழுகும் ஆபாயம் ஏற்படும் ,,,சென்னை நமது சென்னை ,,,,,,காப்பர்ருவோம் நம்மையும் ,, நமது சென்னையும் ,,,,நன்றி .............
0 comments:
Post a Comment