Wednesday, December 02, 2015

முதல்வரை’ மீண்டும் தீர்மானிப்பாரா விஜயகாந்த்!? - ஜு.வி. ஸ்பெஷல் சர்வே

ட்டமன்றத் தேர்தலுக்குத் தமிழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. கட்சிகளும் கிட்டத்தட்ட களத்தில் குதித்துவிட்டன. அணிகள் உருவாவதற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நிறைய அம்சங்கள் உண்டு. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க இன்னும் கூட்டணி அமைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.  


தி.மு.க-வும், அ.தி.மு.க-வும்தான் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கின்றன. ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலை எல்லாக் காலங்களிலும் உண்டு. அப்படிப்பட்ட சூழலில் தேர்தல் நெருக்கத்தில் ஆளும் கட்சியை எதிர்க்கக்கூடிய ஒரு வலுவான கூட்டணி உருவாகிவிடும். ஆனால், தேர்தலுக்கு ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் எதிர் தரப்பில் ஒரு வலுவான கூட்டணி அமையாதது ஆளும் கட்சிக்கு ஒரு பிளஸ்.


ஆளும் கட்சியான அ.தி.மு.க மீது கடும் அதிருப்தி இருக்கிறது. ஆனால், அதற்கு வடிகாலாக ஓர் அணி அமைய தி.மு.க சரியான சாய்ஸ் இல்லை என்கிற நிலை நிலவுகிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், ‘நமக்கு நாமே’ எனச் சொல்லி ஒருகட்ட பிரசாரத்தை முடித்து விட்டது தி.மு.க.
தேர்தல் நெருங்குவதற்கு முன்பே யார் யார் எந்த எந்த அணியில் இருப்பார்கள் என்கிற பிக்சர் கிட்டதட்ட தெரிந்துவிடும். ஆனால், பிரதான எதிர்கட்சியான தி.மு.க அணியில் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய கட்சிகள் சேரவில்லை. விஜயகாந்த் எங்கே போவார் என்பதும் சஸ்பென்ஸாக இருக்கிறது.
இந்தச் சூழலில் 32 மாவட்டங்களில் ஜூ.வி. ஒரு ஸ்பெஷல் சர்வே நடத்தியது. ’வரும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்?’ என்பதுதான் கேள்வி.
சர்வே முடிவில் ஆச்சரியங்களை எதிர்பார்த்தால், அதிர்ச்சியே காத்திருந்தது. தி.மு.க., அ.தி.மு.க இடையிலான சொற்ப வித்தியாசம், ஆளுங்கட்சியைத் தீர்மானிக்கும் யாருமே கணிக்க முடியாத ‘மூன்றாவது அணி’, வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கேப்டனின் வாக்கு வங்கி என ஆச்சரியங்கள் அன்லிமிடட்.

ஜெயிப்பது யார்?
ஜூ.வி. ஸ்பெஷல் சர்வேஜூ.வி. டீம், அட்டை மற்றும் ஓவியங்கள்: கண்ணா
ழு கேள்விகளுடன் 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் 16,846 பேரை 32 மாவட்டங்களில் மழைக்கு முன்பாக சந்தித்து சர்வே எடுத்திருக்கிறது ஜூ.வி. டீம். இந்த ‘ஸ்பெஷல் சர்வே’ முடிவுகளை, தொடர்ந்து மூன்று இதழ்களாக எழுதி வருகிறோம். இதன் இறுதி பகுதி இது.
சட்டமன்றத் தேர்தலுக்குத் தமிழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. கட்சிகளும் கிட்டத்தட்ட களத்தில் குதித்துவிட்டன. அணிகள் உருவாவதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் 
நடந்துகொண்டி ருக்கின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நிறைய அம்சங்கள் உண்டு. பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க இன்னும் கூட்டணி அமைக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும்தான் தமிழகத்தை மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்றன. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை எல்லாக் காலங்களிலும் உண்டு. அப்படிப்பட்ட சூழலில் தேர்தல் நெருக்கத்தில் ஆளும் கட்சியை எதிர்க்கக்கூடிய ஒரு வலுவான கூட்டணி உருவாகிவிடும். ஆனால், தேர்தலுக்கு ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் எதிர் தரப்பில் ஒரு வலுவான கூட்டணி அமையாதது ஆளும் கட்சிக்கு ப்ளஸ். ஆளும் கட்சியான அ.தி.மு.க மீது கடும் அதிருப்தி இருக்கிறது. ஆனால், அதற்கு வடிகாலாக ஓர் அணி அமைய தி.மு.க சரியான சாய்ஸ் இல்லை என்கிற நிலை நிலவுகிறது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல், ‘நமக்கு நாமே’ எனச் சொல்லி ஒருகட்ட பிரசாரத்தை முடித்துவிட்டது தி.மு.க. தேர்தல் நெருங்குவதற்கு முன்பே யார் யார் எந்த அணியில் இருப்பார்கள் என்கிற ‘பிக்சர்’ கிட்டத்தட்ட தெரிந்துவிடும். ஆனால், பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க அணியில் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய கட்சிகள் சேரவில்லை. விஜயகாந்த் எங்கே போவார் என்பதும் சஸ்பென்ஸாக இருக்கிறது.

இப்படியான சூழலில் ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்’ என்கிற முக்கியமான கேள்வியை சர்வேயில் முன்வைத்தோம். அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, பி.ஜே.பி., காங்கிரஸ், பா.ம.க., மற்றவர்கள் என 8 ஆப்ஷன்களைத் தந்திருந்தோம். அ.தி.மு.க-வுக்குத்தான் மிக அதிகமாக 26.84 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதற்கு அடுத்த இடத்தில் இருந்த தி.மு.க-வுக்கு 24.03 சதவிகிதம் பேர் ‘டிக்’ அடித்திருந்தனர். அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் இடையே 2.81 சதவிகித வித்தியாசமே இருந்தது. அதாவது சுமார் மூன்று சதவிகிதத்திலேயே முட்டலும் மோதலும் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் மற்றவர்கள் இருந்தார்கள். உதிரிக் கட்சியினரும் தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் என நினைத்தவர்களும் மற்றவர்களை ‘டிக்’ செய்திருந்தனர். மற்றவர்களுக்கு 21.90 சதவிகித ஆதரவு இருந்தது. தே.மு.தி.க-வுக்கு 7.98 சதவிகித ஆதரவும், பி.ஜே.பி-க்கு 6.33 சதவிகித ஆதரவும் இருந்தது. அதற்கு அடுத்த இடங்களில் மக்கள் நலக் கூட்டணிக்கு 5.21 சதவிகிதமும் பா.ம.க-வுக்கு 4.81 சதவிகிதமும், காங்கிரஸுக்கு 2.90 சதவிகிதமும் ஆதரவு இருந்தன.
தே.மு.தி.க., அ.தி.மு.க அணிக்குப் போவதற்கான வாய்ப்பு நிச்சயம் இல்லை. தனித்துப் போட்டியிடலாம் அல்லது பி.ஜே.பி அணியிலோ, மக்கள் நலக் கூட்டணியிலோ, தி.மு.க கூட்டணியிலோ தே.மு.தி.க இடம்பெறலாம். தி.மு.க கூட்டணியில் இணைந்தால் அ.தி.மு.க-வைவிட அந்த அணி பலம் பொருந்திய அணியாக மாறிவிடும். தே.மு.தி.க தனித்துப் போட்டியிட்டாலோ, பி.ஜே.பி அல்லது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தாலோ அ.தி.மு.க-வின் வெற்றி இன்னும் சுலபமாகிவிடும்.  அதே சமயம் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., காங்கிரஸ் ஆகியன மொத்தமாகச் சேர்ந்து 20 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றுள்ளன. இதை வைத்துப் பார்த்தால் இந்த அணி தி.மு.க., அ.தி.மு.க-வுக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்கலாம்!
முடிவுகள் உங்கள் பார்வைக்கு!




juuvi-

0 comments: