நியூ ஹாரிசான்ஸ் விண்கலம் எடுத்த புளூட்டோ கிரகத்தின் தெள்ளத் தெளிவான முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களில் ஒன்று புளூட்டோ. சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டது நியூ ஹாரிசான்ஸ் என்ற விண்கலம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புளூட்டோவிற்கு மிகவும் அருகில் சென்று அதனை புகைப்படங்கள் எடுத்தது நியூ ஹாரிசான்ஸ்.
இந்நிலையில், தற்போது முதல்முறையாக நியூஹார்சான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிகத் தெளிவான புகைப்படங்கள் அடங்கிய முதல் தொகுப்பை நாசா வெளியிட்டுள்ளது.
-ரா.நிரஞ்சனா (மாணவப் பத்திரிகையாளர்
விகடன்
0 comments:
Post a Comment