கடந்த வாரத்தில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) நிர்ணயிப்பது தொடர்பான பரிந்துரைகளை கொண்ட அறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் மற்றும் அவருடைய குழு சமர்பித்தது. அந்த அறிக்கையில் காற்றடைக்கப்பட்ட பானங்களுக்கு 40 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்று பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகள் சிலவற்றை மூடிவிடுவோம் என்று கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோகோ கோலா இந்தியா மற்றும் தென் மேற்கு ஆசியாவின் தலைவர் வெங்கடேஷ் கினி கூறுகையில், ``இந்தியா முழுவதும் 56 ஆலைகளை இயக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் உள்ள ஆலைகளை மூடி விடுவோம் என்று தெரிவித்தார். மேலும் ஜிஎஸ்டி விவகாரத்தில் எந்தவொரு நகர்வும் எங்கள் தொழிலில் பல மாறுதல்களை ஏற்படுத்தும், அதுமட்டுமல்லாமல் எங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். 30 லட்சம் சில்லரை வணிகர்கள், ஆயிரக் கணக்கில் விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிப்பு ஒட்டுமொத்த சூழ்நிலையை பாதித்துவிடும் என்று தெரிவித்தார்.
குளிர்பான நிறுவனங்களுக்கு தற்போது உற்பத்தி வரி 18 சதவீதம் விதிக்கப்படுகிறது. அனைத்து குளிர்பான நிறுவனங்களும் ரூ. 14,000 கோடியை உற்பத்தி வரியாக செலுத்தி வருகின்றன. இதில் கோகோ கோலா மற்றும் பெப்ஸிகோ நிறுவனங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் காற்றடைக்கப்பட்ட குளிபானங்களின் தனிநபர் நுகர்வு சர்வதேச அளவில் மிகக் குறைவு என்று கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் வரியை உயர்த்தும் முடிவை அரசாங்கம் எடுத்தபோது நாங்கள் நுகர்வோர் மீது வரியை விதிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டோம். இதனால் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தின் விலை ரூ.10 லிருந்து 12 ரூபாய்க்கு விற்கப்பட்டது. உடனடி விளைவாக தேவையின் அளவு குறைந்தது. இப்போது 40 சதவீத பரிந்துரையை நடைமுறைப்படுத்தினால் விலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கினி தெரிவித்தார்.
மேலும் கோகோ கோலா நிறுவனம் இந்தியாவில் வளர்ச்சியடையும் நிறுவனம். இந்தியாவில் ஏற்கனவே 250 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. 2020-ம் ஆண்டிற்குள் இன்னும் 500 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருக்கிறோம் என்று கோகோ கோலா இந்தியா துணைத்தலைவர் அம்ஜத் தெரிவித்துள்ளார்.
-தஹிந்து
- Saravanan Madras Indiaமூடிட்டு (ஆளைய ) கிளம்பிடு... நாங்க இளநீர் இல்லன்ன எங்க ஊர் ஜிஞ்சர் சோடா, சர்பத் குடிசிகிறோம்.955
- NKN Krishnamoorthy Indiaஅமிலத்தில் அளவுக்கு அதிகமான சர்க்கரைக் கடைக்கோப்பட்டுள்ளது. குறைந்தத் 120$ ஜிஎஸ்டி விதிக்கப்படவேண்டும்.5950
- RRamachandran.S Indiaமூடினால் என்ன நாடு குடியா மூழ்க போகிறது ... நல்ல விஷயங்களை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்about 2 hours ago
0 comments:
Post a Comment