Sunday, December 13, 2015

இலக்கு (2015)- சினிமா விமர்சனம்

நடிகர் : மதுசூதனன்
நடிகை :தேவி
இயக்குனர் :மதுசூதனன்
இசை :எஸ்.ஏ.ராஜ்குமார்
ஓளிப்பதிவு :ராம்நாத்
போலீஸ் அதிகாரியான மதுசூதனன் தலைமையில் காட்டுக்குள் பதுங்கி இருக்கும் வீரப்பனை (நவீன்) பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில், வீரப்பனுக்கு தகவல் சொல்லும் உளவாளி ஒருவரை மதுசூதனன் சுட்டுக் கொல்கிறார். இதனால் இவரை, போலீஸ் டிரைனிங் ஆபீசராக பணி மாற்றம் செய்கிறார்கள்.

பின்னர் வேறொரு புது படையுடன் வீரப்பனை பிடிக்க திட்டமிடுகிறார்கள். அவர்களை வீரப்பன் வெடி வைத்து கொன்று விடுகிறார். அதன்பிறகு மதுசூதனன் தான் வீரப்பனை பிடிக்க சரியானவர் என்று, அவரை மீண்டும் இடம் மாற்றம் செய்கிறார்கள்.

மீண்டும் பதவிக்கு வந்த மதுசூதனன், வீரப்பனை பிடிக்க புதிய வழியில் திட்டம் போடுகிறார். இறுதியில் மதுசூதனன், வீரப்பனை பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் வீரப்பனாக நடித்திருக்கும் நவீன், கதாபாத்திரத்திற்கு பொருந்தாமல் இருப்பதுபோல் இருக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து இன்னும் நன்றாக நடித்திருக்கலாம். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மதுசூதனன் சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரே இப்படத்தை இயக்கியிருக்கிறார். வீரப்பன் கதையில் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இப்படத்தில் புதுமை என்று பார்த்தால் ஏமாற்றம் தான்.

வித்தியாசமான முறையில் வீரப்பனை பிடிக்க திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாமல் இருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள் குறைவு. 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். ராம்நாத்தின் ஒளிப்பதிவு பெரியதாக எடுபடவில்லை.

மொத்தத்தில் ‘இலக்கு’ கடினம்.

http://cinema.maalaimalar.com/2015/11/13201040/Ilakku-movie-review.html

0 comments: