வழக்கம்போல, டுவிட்டரில், மழையும் கேலி மற்றும் கிண்டலுக்கான பொருளாகி உள்ளது. எனினும் இங்கும் யதார்த்த நிலவரத்தை, 140 எழுத்துக்களில் சித்திரிப்பவர்கள் உள்ளனர்.
15நவம்பர் 18,2015
சி.பி.செந்தில்குமார்@senthilcp
அமைச்சரே!மழை வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதும் என்ன நடவடிக்கை எடுத்தீங்க? மன்னா! மழை நிவாரண உணவு பாக்கெட்ல உங்க போட்டோ பிரின்ட் பண்றோம்

பயங்கர கோபக்காரன் @KobaKaaran Nov 2
ஐப்பசி எல்லாம் மழை காலம்டா... இப்போ மேலடுக்கு சுழற்சியானதுனு சொல்லி எதோ புதுசா நடக்கற மாதிரி செய்தி போடறீங்களேடா... நல்லா வருவீங்க

காக்கைச் சித்தர் @vandavaalam
வருசம் பூரா பெங்களூர்ல மழை பெய்யுது. எவ்ளோ அமைதியா இருக்கு ஊரு. 2 நாள் மழை பெஞ்சதுக்கே ஏங்க இப்பிடி பண்றீங்க?

நாடோடிச் சிறுத்தை @T_cheeta
மழையா பெய்ய போகுதுனு குடை இல்லாம வெளியே வந்தா, கொஞ்ச நேரத்துல மழை சோனு பெய்யுது; சரினு குடை வாங்கினு வெளியே வந்தா மழை காணும்

Sen @Sen_Tamilan
அம்மா சொன்னதை கடைபிடிப்பதில் சென்னை மாநகராட்சி தான் முதலிடம்!
சாலை நடுவே மழை நீர் சேகரிப்பு!
சாலை நடுவே மழை நீர் சேகரிப்பு!

DoliyayBuzzi @asraamji
விட்ட இடத்தை கொட்டிப் பிடித்தது நீர்... ஏரிக்குள் வீடு கட்டுன... உன் வீட்டுக்குள் ஏறி வந்துச்சு பாத்தியா...

Muthu kumar @muthukumar00007
இந்த இலட்சணத்துல போரூர் ஏரியை வேற மூடிறேன்னாங்க...

சர்வ அதிகாரி @jaleelmoh
நன்றாக பொழிகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. விவசாயம் பெருகட்டும். குடிநீர்ப் பஞ்சம் போகட்டும் என்று வாழ்த்த ஒரு ஆள் இல்லை.

கவிதா @kavitha129
ஆதார் கார்டு வச்சிருக்கற மாதிரி எல்லாருக்கும் நீச்சல் அடிக்கத் தெரிந்து வச்சிருக்கணும்னு ஒரு சட்டம் கொண்டு வருவாங்களா?
-
-http://www.dinamalar.com/twitter_galatta_detail.asp?id=103

0 comments:
Post a Comment