நாளை (நவம்பர் 12-ம் தேதி) முதல், ரயில்கள் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
பயண இறுதி அட்டவணை தயாராகும் முறையில் மாற்றங்கள் செய்துள்ள ரயில்வே, இப்போது இரண்டு முறை அட்டவணையை தயாரிக்க உள்ளது.
முதல் முன்பதிவு பயண அட்டவணை, ரயில் கிளம்புவதற்கு நான்கு மணி நேரங்கள் முன்னால் தயாரிக்கப்பட்டு வந்த முறையோடு இப்போது, அரை மணி நேரம் முன்பாக ஒரு முறை இறுதி முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட உள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, இணையம் மற்றும் முன்பதிவு கவுண்டர்களில் என இரண்டு வழிகளிலும் முன்பதிவு செய்யலாம். இருக்கும் பெர்த்களின் எண்ணிக்கையைப் பொருத்து, குறிப்பிட்ட ரயில்களுக்கு, முதல் முன்பதிவு பயண அட்டவணை தயாரான பின்னரும், முன்பதிவு செய்ய முடியும்.
இதற்காக நவம்பர் 12-ம் தேதியில் இருந்து, முதல் முன்பதிவு பயண அட்டவணையை 4 மணி நேரத்துக்கு முன்னதாகவே இறுதி செய்யும்படி, ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், அரை மணி நேரத்துக்கு முன்னதாக ஆன்லைனிலோ அல்லது இல்லை ரயில் நிலையத்திலோ டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எந்தெந்த ரயிலும் எவ்வளவு இடம் காலியாக இருக்கிறது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ரயில் கிளம்பும் முன்னதாக இரண்டாவது மற்றும் இறுதி முன்பதிவு பயண அட்டவணை, ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sதற்போது உள்ள நடுப்பு பதிவு (Current Booking) முறையை இணைய வழியிலும் பயன் பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் நீண்ட தூர வண்டிகளில் (எடு) தில்லி - கன்னியாகுமரி இடையில் இருந்து பயணிக்க நினைப்பவர்கள் அரை மணி நேரம் முன்னதாக பதிவு செய்ய முடியாது. எனவே பயணச் சீட்டு பரிசோதகர்களும் மின்னணு முறையில் பரிசோதிக்க ஆரம்பித்தால்தான் முழுமையான பயன் கிட்டும்.12250
thanx - the hindu
0 comments:
Post a Comment