மைக்குடன் அரங்கத்துக்குள் அங்குமிங்கும் நடமாடி விவாதம் நடத்திக் கொண்டிருப்பார் ‘நீயா நானா’ கோபிநாத். திடுக்கென பார்த்தால் ’திருநாள்’ டிரைலரில் மீசை முறுக்கி, ஆர்ம்ஸ் ஏத்தி பிஸ்டலும் கையுமாக ’தெறிக்க விட்டுக்’ கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் அதட்டல் போட்டுக் கொண்டிருந்தவர், சினிமாவில் மிரட்டல் அவதாரம் எடுத்திருக்கிறாரா என்று கேட்டேன்.
"அட... நீங்க வேற... படத்தோட இயக்குநர் ராம்நாத், ’ஏ.எஸ்.பி புகழேந்தினு ஒரு கேரக்டர். இந்த கேரக்டர் நீங்க செஞ்சாதான் நல்லா இருக்கும்னு, கதையை யோசிக்கும் போதே நினைச்சேன். அதானால நீங்கதான் நடிக்கணும்’னு சொல்லிட்டார். நானும் ஜீவா படம்... கண்டிப்பா மிஸ் பண்ணக்கூடாதுன்னு உடனே ஒகே சொல்லிட்டேன்."
’’இதுக்கு முன்னாடி நடிச்ச படங்கள்ல நீங்க 'நீங்களா'வே வருவீங்க, அதனால பெரிய ஹோம் ஓர்க் எல்லாம் தேவைபட்டிருக்காது. ஆனா, இந்தப் படத்துக்கு அப்படி இருந்திருக்க முடியாதுல்ல!’’
"ஆமா... பின்னே சினிமா நடிப்புன்னா சும்மாவா..! இயக்குநர் கதையை முழுசா கேளுங்கனு கேட்க வச்சார். கேட்டேன். எனக்கு ரொம்ப புத்திசாலித்தனமான கேரக்டர். அதைவிட எது எனக்குப் பிடிச்சிருந்ததுன்னா, 'இந்த கேரக்டர் அதிகமாக டயலாக் பேசாது'னு டைரக்டர் சொன்னதுதான். ’நீங்க சும்மா வந்து நின்னு பார்வைலயே மிரட்டணும். ரொம்பக் கொஞ்ச வார்த்தைகள்தான் பேசணும்’னார். சரினு ஷுட்டிங் போயிட்டேன். அங்கே போய் நின்னா டைரக்டர் ‘கொஞ்சமா மீசையை முறுக்குங்க.. கைல துப்பாக்கி வைச்சுக்கங்க. ரெளத்ரமா பாருங்க’ அது இதுனு என்னை வேற மாதிரி மாத்திட்டார். ரொம்ப முக்கியமா ஸ்பாட்ல என்னை யாரோடவும் அரட்டை அடிக்கக் கூட விடலை. ரொம்பப் பேசிட்டே இருந்தா அந்த மூட் இருக்காதுன்னு நானும் அதிகம் பேசாம உம்முனே இருந்தேன்!’’
’’அப்புறம் இனி சினிமா ரூட்தானே. அடுத்த விருதுகள் ஃபங்ஷனில் 'வாங்குற' இடத்தில் உங்களை எதிர்பார்க்கலாமா?’’
"கலாய்க்காதீங்க பாஸ்... இதான் என் வேலைனு ஒரு விஷயத்துல மட்டும் ஃபிக்ஸ் ஆகிக்க மாட்டேன். அப்படி இப்போ சினிமாவையும் ஒரு வேலையா ரசிச்சு பண்ணிட்டு இருக்கேன். அப்படி அடுத்து என்னனு எனக்கே தெரியாது. இப்போதைக்கு ஏ.எஸ்.பி புகழேந்தியா உங்களை சினிமால மிரட்டப் போறேன்!’’
கபகபவென சிரிக்கிறார் கோபிநாத்.
thanks vikatan
0 comments:
Post a Comment