Sunday, November 29, 2015

மேகி நூடில்ஸில் மீண்டும் புதிய சர்ச்சை

பாட்னா: மேகி நூடுல்ஸை தொடர்ந்து மேகி பாஸ்தாவிலும் கூடுதல் காரீயம் சேர்க்கப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், நெஸ்லே நிறுவனத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை மேற்கொண்டன.

அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நூடுல்ஸ்கள் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை என்று கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு முழுவதும் தடை செய்தது.

இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதன்பின் தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மேகி நூடுல்ஸை,  நெஸ்லே நிறுவனம் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், நெஸ்லே நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக காரீயம் கலந்திருப்பதாக உத்தரபிரதேச உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தகவல் அனுப்பியும் அவர்களிடம் இருந்து உரிய பதில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால், இந்த புகாரை மறுத்துள்ள நெஸ்லே நிறுவனம், பாஸ்தா பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானவை என்று விளக்கம் அளித்துள்ளது

thanks vikatan.

0 comments: